முன்கதை சுருக்கம் ...
நம்ம பாட்டுல வர்ற நாயகி பேரு சிந்து...இப்போவெல்லாம் ஹவுஸ் ஒய்வ்ஸ் எல்லாம் ஷேர் மார்க்கெட்டுல ஏறங்கிட்டாங்க , நம்ம நாயகி சிந்துவும் அவரோட கணவன் சேமிப்பு எல்லாத்தையும் ஷேர் மார்க்கெட்டுல போட்டு , இப்போ நயா பைசாக்கு வழி இல்லாம , பாடுற பாட்டு ...
குறிப்பு :
இந்த பாடலை கீழ்கண்ட லிங்க்ல் சென்று கேட்டு கொண்டே படிக்கவும் .... இல்லைன்னா செம போரு....
http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.5283/
(சிந்து பைரவி - நானொரு சிந்து .....)க்ளிக் செய்யவும்...
பல்லவி
நானொரு சிந்து…. காவடி சிந்து….
நானொரு சிந்து, காவடி சிந்து, ராகம் புரியவில்லை….உள்ள சோகம் தெரியவில்லை….கம்ப்யூட்டர் இருந்தும் , டீ-மேட் அக்கௌன்ட் இருந்தும் லாபம் சம்பாதிக்க முடியவில்லை... அதை சொல்ல தெரியவில்லை...

நானொரு சிந்து, காவடி சிந்து, ராகம் புரியவில்லை….உள்ள சோகம் தெரியவில்லை….
சரணம்
செல்லாத காசுக்கு என்னென்ன பேரோ.. ஷேர் மார்கெட்டுக்கு FII’S ,DII’S யாரோ ....

புருஷனோட காசுல கை வச்சேன் பாரு... கை வைச்சதாலே படுறேன் பாடு ...
பாட்டு புரிஞ்சா சங்கதி உண்டு....என் பாட்டுக்குள்ளையும் சங்கதி உண்டு ....கண்டுபிடி!!!!
பல்லவி
நானொரு சிந்து, காவடி சிந்து, ராகம் புரியவில்லை….உள்ள சோகம் தெரியவில்லை….
சரணம்
யார் டிப்ஸ் சரியா கொடுப்பாங்கன்னு பார்க்கின்ற வேளை ....சந்தா கட்டவும் கையில காசு இல்லை...

என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே ...பைசாவே கையில தொட்டிருக்க மாட்டேனே....
தலையெழுத்தென்ன ...என் முதலெழுத்தென்ன....
தலையெழுத்தென்ன , முதலெழுத்தென்ன....சொல்லுங்களேன் ....
பல்லவி
நானொரு சிந்து, காவடி சிந்து, ராகம் புரியவில்லை….உள்ள சோகம் தெரியவில்லை….கம்ப்யூட்டர் இருந்தும் , டீ-மேட் அக்கௌன்ட் இருந்தும் லாபம் சம்பாதிக்க முடியவில்லை... அதை சொல்ல தெரியவில்லை...
நானொரு சிந்து, காவடி சிந்து, ராகம் புரியவில்லை….உள்ள சோகம் தெரியவில்லை….
2 comments:
சந்தையை மீட்டு மீண்டும் வந்து விட்டிங்க. சந்தை நன்றாகத்தான் இருக்கிறதே . பின் ஏன் சோக ராகம் இசைக்க வேண்டும். உங்கள் வலைப்பூவுக்கு பெரிய பூட்டு போட்டிங்க . ஏன்?
பாட்டு நல்லா இருக்குது. நான் பங்கு சந்தைல பணத்தைத் தொலைத்தவன்.
Post a Comment