Saturday, January 10, 2009

பங்கு சந்தை பாடல்கள் ...



முன்கதை சுருக்கம் ...

நம்ம பாட்டுல வர்ற நாயகி பேரு சிந்து...இப்போவெல்லாம் ஹவுஸ் ஒய்வ்ஸ் எல்லாம் ஷேர் மார்க்கெட்டுல ஏறங்கிட்டாங்க , நம்ம நாயகி சிந்துவும் அவரோட கணவன் சேமிப்பு எல்லாத்தையும் ஷேர் மார்க்கெட்டுல போட்டு , இப்போ நயா பைசாக்கு வழி இல்லாம , பாடுற பாட்டு ...



குறிப்பு :

இந்த பாடலை கீழ்கண்ட லிங்க்ல் சென்று கேட்டு கொண்டே படிக்கவும் .... இல்லைன்னா செம போரு....

http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.5283/

(சிந்து பைரவி - நானொரு சிந்து .....)க்ளிக் செய்யவும்...



பல்லவி


நானொரு சிந்து…. காவடி சிந்து….

நானொரு சிந்து, காவடி சிந்து, ராகம் புரியவில்லை….உள்ள சோகம் தெரியவில்லை….கம்ப்யூட்டர் இருந்தும் , டீ-மேட் அக்கௌன்ட் இருந்தும் லாபம் சம்பாதிக்க முடியவில்லை... அதை சொல்ல தெரியவில்லை...



பல்லவி


நானொரு சிந்து, காவடி சிந்து, ராகம் புரியவில்லை….உள்ள சோகம் தெரியவில்லை….கம்ப்யூட்டர் இருந்தும் , டீ-மேட் அக்கௌன்ட் இருந்தும் லாபம் சம்பாதிக்க முடியவில்லை... அதை சொல்ல தெரியவில்லை...

நானொரு சிந்து, காவடி சிந்து, ராகம் புரியவில்லை….உள்ள சோகம் தெரியவில்லை….



சரணம்


செல்லாத காசுக்கு என்னென்ன பேரோ.. ஷேர் மார்கெட்டுக்கு FII’S ,DII’S யாரோ ....

செல்லாத காசுக்கு என்னென்ன பேரோ.. ஷேர் மார்கெட்டுக்கு FII’S ,DII’S யாரோ ....

புருஷனோட காசுல கை வச்சேன் பாரு... கை வைச்சதாலே படுறேன் பாடு ...

பாட்டு புரிஞ்சா சங்கதி உண்டு....என் பாட்டுக்குள்ளையும் சங்கதி உண்டு ....கண்டுபிடி!!!!


பல்லவி


நானொரு சிந்து, காவடி சிந்து, ராகம் புரியவில்லை….உள்ள சோகம் தெரியவில்லை….


சரணம்


யார் டிப்ஸ் சரியா கொடுப்பாங்கன்னு பார்க்கின்ற வேளை ....சந்தா கட்டவும் கையில காசு இல்லை...

யார் டிப்ஸ் சரியா கொடுப்பாங்கன்னு பார்க்கின்ற வேளை ....சந்தா கட்டவும் கையில காசு இல்லை...

என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே ...பைசாவே கையில தொட்டிருக்க மாட்டேனே....

தலையெழுத்தென்ன ...என் முதலெழுத்தென்ன....

தலையெழுத்தென்ன , முதலெழுத்தென்ன....சொல்லுங்களேன் ....


பல்லவி


நானொரு சிந்து, காவடி சிந்து, ராகம் புரியவில்லை….உள்ள சோகம் தெரியவில்லை….கம்ப்யூட்டர் இருந்தும் , டீ-மேட் அக்கௌன்ட் இருந்தும் லாபம் சம்பாதிக்க முடியவில்லை... அதை சொல்ல தெரியவில்லை...

நானொரு சிந்து, காவடி சிந்து, ராகம் புரியவில்லை….உள்ள சோகம் தெரியவில்லை….


Friday, January 9, 2009

இன்று ஒரு தகவல் ...(வெள்ளி)



வியாழன் அன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் கலப்படமாக முடிந்து உள்ளன.... தற்போது துவங்கிய ஆசிய சந்தைகளில் ஒரு மந்த நிலை நீடிக்கிறது ...


கச்சா எண்ணையின் விலை 43 டாலருக்கு அருகில் இருக்கிறது...

கடந்த வாரம வெளிவந்த பணவீக்கத்தை விட இன்று பணவீக்கம் குறைய வாய்ப்பு இருப்பதாக CNBC TV 18 கருத்துகணிப்பு தெரிவிக்கின்றன...(6.38% TO 6.11%)


எங்க திரும்பினாலும் மொதல்ல நிக்கிறாரு சத்யம் கம்ப்யூட்டர்...புதன் கிழமை விற்கப்பட்ட 20 கோடி பங்குகளை யார் வாங்கினார்கள் என்ற கேள்வி இன்னும் நம்மிடயே சுற்றி கொண்டு தான் இருக்கின்றன ... (திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடி கொண்டே இருக்கும் ...அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்கும்... )


சரி சத்யம் தான் சரி இல்லை ... DLF, JPASSOCIATE, UNITECH ,SUZLON,IFCI இவனுகளுக்கெல்லாம் என்ன ஆச்சு.. மானாவாரியா மண்ணு அள்ளி போட்டுட்டாங்க ...


ரிலையன்ஸ் கேப்பிட்டல் , சன் பார்மா இவுக மேல ஒரு கண்ணு வச்சிக்கோங்க... நல்ல சேதி வந்திருகுள்ள...


இன்னிக்கு ஆக்ஸிஸ் பேங்க் Q3 ரிசல்ட் , அதனால போற வழியில அவனையும் பாத்துக்குவோம் ...


இன்னிக்கு நம்ம தோழர் நிஃப்ட்டி வழி தனி வழி ... சூப்பர் ஸ்டார் மாதிரி இருப்பார்னு நினைக்கேன் .... (மூணு அடி வாங்கிட்டு திருப்பி அடிப்பாரே...)


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 07.01.2009) : 2920.40


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2985


சப்போர்ட் நிலைகள் : 2825,2725,2564


தடுப்பு நிலைகள் : 3082,3244,3341


இன்னிக்கு பிவோட் எல்லாம் ரொம்ப தள்ளி தள்ளி இருக்கு... அதனால ரொம்ப ரொம்ப கேர்புஃல்லா இருக்கனும் ... நான் என்னை சொல்லிகிட்டேன்....



Thursday, January 8, 2009

பங்கு சந்தை பாடல்கள் ...



முன்கதை சுருக்கம்...

நம்ம பய ஒருத்தன் ஷேர் மார்கெட்ல இருக்கான்...அதுக்கு அவுங்க அம்மா செம எதிர்ப்பு.... இத நம்ம பய அவன் காதலிகிட்டே சொல்லி பொலம்புறாரு ....ஷேர் மார்கெட்டை தெரியாம பாத்துட்டாராம்…அவரு பாடுற பாட்டையோ (படுறபாட்டையோ) ஒரு உல்டா பாட்டுலே சொல்றேன்... (திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் பாட்டு உல்டா...)


காதலன் :

தெரியாம பாத்துபுட்டேன்...ஒன்னை தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன்....

ஓ...ஓ… தெரியாம பாத்துபுட்டேன்...ஒன்னை தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன்....

என்ன நடக்க போகுதோ... (ஹோ ஹோ) ...எங்கு முடிய போகுதோ... (ஹோ ஹோ)...தொல்லையா ஆச்சுடி ,தூக்கமே போச்சுடி ...


காதலி:


தெரியாம பாத்துபுட்டேன்...ஒன்னை தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன்....

என்ன நடக்க போகுதோ... (ஹோ ஹோ) எங்கு முடிய போகுதோ (ஹோ ஹோ)...தொல்லையா ஆச்சுடா ,தூக்கமே போச்சுடா ...


காதலன் :

ஹிட்லர் போல எங்க அம்மா, (வேலைக்கு போக சொல்லி ) ரொம்ப ஹிம்சை பண்ணுறாளே என்னை...


காதலி:

ரொம்ப பாசம் தான் ...ஒன் மேல தான்... அவ உயிரே நீயின்னு தெரியாதா ....அத சொன்னா ஒனக்கு புரியுமா...


காதலன் :

சொல்லு சொல்லு… என் செல்லம் செல்லம்...நீ சொல்லா காட்டி நான் தூங்கா செல்லம்


காதலி:

நிஃப்ட்டி கொஞ்சம் ஆட்டம் போட்டா ஆடிப்போயிடுவா உங்க அம்மா, உனக்கு நஷ்டம் என்றால் NSE,BSE கூட கொளுத்துவா


காதலன் :

தெரியாம பாத்துபுட்டேன்...ஒன்னை தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன்....


காதலி:

ஷேர் மார்க்கெட் என்பது ஒரு கோட்டை ...கதவு தொறந்துட்டா வேட்டை ....


காதலன் :

உள்ள போவோமோ ... வெல்லம் கசக்குமா ...நான் இரும்புல செஞ்ச எறும்புடி..மார்க்கெட் இருக்கிற வரைக்கும் குளறுபடி...


காதலி:

வேணாம் வேணாம்… என் செல்லம் செல்லம்..... அம்மா பாத்தா ஒன்னை திட்டும் திட்டும் ...


காதலன் :

ஷேர்மார்க்கெட் என்ன பிஸ்தா பருப்பா , நான் அதுல இருக்கிறது எங்கம்மாக்கு ஏண்டி வெறுப்பா…

தெரியாம பாத்துபுட்டேன்... அதை தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன்....

என்ன நடக்க போகுதோ... (ஹோ ஹோ) எங்கு முடிய போகுதோ (ஹோ ஹோ)...தொல்லையா ஆச்சுடி ,தூக்கமே போச்சுடி !!!!



நன்றி ...


இன்று ஒரு தகவல்...08.01.2009(வியாழன்)



அமெரிக்காவுல வேலை இல்லாதவங்க அதிகமாயிட்டாங்கலாம்...அதனால நேத்து அமெரிக்கா சந்தை எறங்கி போச்சாம்...உங்க ஊர்ல வேலை இல்லாதவங்க அதிகமாயிட்டாங்கன்னு, எங்க ஊருகாரங்களை அனுப்சிராதீங்க...உங்க தேர்தல் கொள்கைய்ல இதூம் ஒண்ணுனு சொன்னாங்க ...


தற்போது தூவங்கிய ஆசிய சந்தைகளும் அண்ணன் அமெரிக்கா வழியில் செல்கிறார்கள் ...


கச்சா எண்ணையின் விலை 43 டாலருக்கு எறங்கி போச்சு ...


சத்யம் கம்ப்யுட்டர் முதலாளி இப்படி பண்ணிபுட்டாரு...உங்களை நம்பி முதலீடு பண்ணுனவங்க இப்போ தெருவுக்கு வந்துட்டாங்க...ஆனா உங்களால பல பேரு நேத்து மட்டும் லட்சாதிபதி ஆயிட்டாங்க... (அதாங்க வித்துட்டு வாங்குனாங்களே அவுக தான் ...)


சத்யம் கம்ப்யூட்டர்க்கு பதிலா ரிலையன்ஸ் கேப்பிட்டல் வர்ற 12 ம் தேதியிலயிருந்து நிஃப்ட்டிக்கு வர போகுதாம்... சத்யம் கம்ப்யூட்டர்க்கு ஆப்பு... ரிலையன்ஸ் கேப்பிட்டலுக்கு மப்பு..


முக்கியமான விஷயம் நேத்தைக்கு நம்ம மார்க்கெட் செய்தியினால உந்தப்பட்டது அதனால இந்த பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் எல்லாம் ஒத்து வராது.... சார்ட்டே வேலைக்கு ஆகாதப்போ இதெல்லாம் எந்த மூலைக்கு... நம்ம கமலகாஸன் புன்னகை மன்னன் படத்துல மேல இருந்து விழுவாரே, அது மாதிரி இப்போ நம்மாளு(நிஃப்ட்டி) மரத்துல மாட்டிக்கிட்டாரு...இப்போ அவரை காப்பாதுவாங்களா இல்ல பாறைல போய் விழப்போறாரான்னு பொறுத்திருந்து பாப்போம்...


இப்பிடி கற்பனை பண்ணி பாருங்க ...


கமலகாஸன் – நிஃப்ட்டி கேரக்டர்

ரேகா - சத்யம் கம்ப்யூட்டர் கேரக்டர்


இதுக்கு மேல கதை நான் சொல்ல தேவை இல்ல ...


நேத்து நடந்த இந்த கொடூரத்திளையும் கிளுகிளுப்பாக இருந்தவர்கள்

(அதாங்க பச்சைல முடிச்சவங்க )


HINDUNILVR +1.72%
INFOSYSTCH +1.63%


அட நம்ம சந்தைக்கு இன்னிக்கு லீவு ...

நண்பர்களே இந்த வெப்சைட்டை மேலும் மேம்படுத்த என்ன என்ன செய்யலாம் என்று ஆலோசனை சொல்லலாமே !!!

Wednesday, January 7, 2009

இன்று ஒரு தகவல்...07.01.2009(புதன்)

செவ்வாய் அன்று மேடு பள்ளங்களில் பயணித்த அமெரிக்க சந்தைகள் பச்சை நிறத்தை காட்டியுள்ளன… தற்போது துவங்கிய ஆசிய சந்தைகள் குதுகலத்துடன் தொடங்கி இருக்கு....


கச்சா எண்ணையின் விலை 49 டாலருக்கு பக்கத்தில் சுற்றி கொண்டு இருக்குது....


நேத்து திடிர்னு நம்ம உள்ளுறு பயலுக விற்க ஆரம்பிச்சுடானுங்க, கேட்டா லாபத்தை எடுக்காங்கலாம் ... வெளியூர் பயலுக விடுவாங்களா சும்மா ஸ்பைடர் மேன் மாதிரி வந்து தூக்கிட்டு போய்ட்டாங்க... இந்த விளையாட்டுல இவனுக ரெண்டு பேரும் லாபத்தை பாத்ருனாங்க... ஆனா நம்ம சிறு வணிகர்கள் நஸ்டபடாம இருந்தா சரி தான் ...


நேத்து சிமெண்ட் பங்குகள் எல்லாம் ஒரு குதியாட்டம் போட்டுச்சு...


சத்யம் கம்ப்யூட்டர் , டெக் மகிந்திரா இணைய போகிறாங்க ....அப்படின்னு ஒரு தகவல் லீக் ஆச்சு ... கேட்டா வதந்தினு சொல்லறாங்க ...

நிஃப்ட்டி 3200 கால் வாங்கிட்டு இருக்காங்கலாம்...அதனால 3200 வந்துடும் போல இருக்கு.... 3000 அப்படிங்கிறது ஒரு ஸ்ட்ராங் சப்போர்ட் ஆய்ட்டு இருக்காம்...


நேற்றைய சிங்கம் ULTRACEMCO சும்மா 11.50 சதவீதம் ஏறி இருக்கான்பா…



நிஃப்ட்டி முடிஞ்சது (as on 06.01.2009) : 3112.80


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 3105


சப்போர்ட் நிலைகள்
: 3065,3020,2980


தடுப்பு நிலைகள் : 3150,3190,3235










Tuesday, January 6, 2009

பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?



சந்தை அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்த பங்கோ பிவோட் புள்ளிக்கு மேல் ஆரம்பித்து தொடர்ந்து அந்த நிலைக்கு மேல் இருக்குமானால் சந்தை காளையின் கட்டுபாட்டில் இருக்கிறது என்று அர்த்தம் ...


சந்தை அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்த பங்கோ பிவோட் புள்ளிக்கு கீழ் ஆரம்பித்து தொடர்ந்து அந்த நிலைக்கு கீழே இருக்குமானால் சந்தை கரடியின் கட்டுபாட்டில் இருக்கிறது என்று அர்த்தம் ...



ரெசிச்டென்ஷ் 2, ரெசிச்டென்ஷ் 3 நிலையை பங்கோ அல்லது சந்தையோ அடையுமானால் அதை “நிறைய வாங்கிய நிலை”யை(OVERBOUGHT CONDITION) அடைந்ததாக அர்த்தம்...இந்த நிலையில் மேலும் வாங்க முற்படுவதை விடுத்து விற்பதற்கு தயாராக வேண்டும்... ( இந்த ரெசிச்டென்ஷ் 2, அல்லது 3 நிலைகளிலிருந்து திரும்பும் பட்சத்தில் தான் விற்க முற்பட வேண்டும் ... ) ஏற்கனவே வாங்கி இருந்தால் விற்று விட்டு வெளியேறி விட வேண்டும்...



சப்போர்ட் 2, சப்போர்ட் 3 நிலையை பங்கோ அல்லது சந்தையோ அடையுமானால் அதை “நிறைய விற்கப்பட்ட நிலை” யை(OVERSOLD CONDITION) அடைந்ததாக அர்த்தம்... இந்த நிலையில் மேலும் விற்க முற்படுவதை விடுத்து வாங்குவதற்கு தயாராக வேண்டும்... ( இந்த சப்போர்ட் 2, அல்லது 3 நிலைகளிலிருந்து திரும்பும் பட்சத்தில் தான் வாங்க முற்பட வேண்டும் ... ) ஏற்கனவே விற்று இருந்தால் வாங்கி விட்டு வெளியேறி விட வேண்டும்...



சப்போர்ட் 1, பிவோட் விலை, ரெசிச்டென்ஷ் 1- இந்த மூன்று நிலைகளையும் மனதில் கொள்வோம்,


இப்போது ரெசிச்டென்ஷ் 1 உடைபட்டு மேல் நோக்கி சந்தை செல்லுமானால், நாம் பங்கை வாங்கி ரெசிச்டென்ஷ் 2 வை இலக்கு விலையாகவும் , ரெசிச்டென்ஷ் 1 க்கு சற்று கீழே நட்ட தடுப்பாகவும் வைத்து கொள்ள வேண்டும் ...( காளையின் ஆதிக்கம் தொடருமானால் ரெசிச்டென்ஷ் 3 ஐ கூட இலக்கு விலையாக வைத்து கொள்ளலாம் )


இதே போல் பிவோட் புள்ளிக்கு மேல் ஆரம்பித்து தொடர்ந்து சந்தை மேல் நோக்கி வணிகமானால், நாம் பங்கை வாங்கி ரெசிச்டென்ஷ் 1 ஐ இலக்கு விலையாகவும் , பிவோட் புள்ளிக்கு சற்று கீழே நட்ட தடுப்பாகவும் வைத்து கொள்ள வேண்டும் ...( காளையின் ஆதிக்கம் தொடருமானால் ரெசிச்டென்ஷ் 2,3 ஐ கூட இலக்கு விலையாக வைத்து கொள்ளலாம் )


ஆனால் பிவோட் புள்ளிக்கு கீழ் ஆரம்பித்து தொடர்ந்து சந்தை கீழ் நோக்கி வணிகமானால், சந்தை திரும்பும் வரை காத்திருக்கவும்...


இப்போது சந்தை சப்போர்ட் 1 ல் திரும்புமானால், பிவோட் புள்ளியை இலக்கு விலையாகவும் , சப்போர்ட் 1 க்கு சற்று கீழே நட்ட தடுப்பாகவும் வைத்து கொள்ள வேண்டும்….


இதே போல் சந்தை சப்போர்ட் 2 ல் திரும்புமானால், சப்போர்ட் 1 ஐ இலக்கு விலையாகவும் , சப்போர்ட் 2 க்கு சற்று கீழே நட்ட தடுப்பாகவும் வைத்து கொள்ள வேண்டும்….



நிபந்தனைகள் :-


(1)இந்த விதிமுறை சந்தை ஆரம்பித்த முதல் அரை மணி நேரத்திற்கும் , கடைசி ஒரு மணி நேரத்திற்கும் பொருந்தாது ...


(2)
சந்தை தொடர் ஏறுமுகமாக இருந்தாலும் , அல்லது தொடர் இறங்குமுகமாக இருந்தாலும் பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் ஒத்து வராது ...

ஆனால் குறைந்த லாபம் வைத்து வெளியேறி விடுபவர்களுக்கு இந்த நிபந்தனை செல்லாது ...


(3)முதலில் இரண்டு, மூன்று நாள் பேப்பர் ட்ரேடிங் செய்து விட்டு களத்தில் இறங்கவும்.


(4)முந்தைய பதிவில் சொன்ன சூத்திரங்களை MICROSOFT EXCELல் போட்டு வைத்து கொண்டால் இன்னும் எளிதாக இருக்கும்...


பிவோட் பாயிண்ட் கண்டுபிடிப்பது எப்படி?

முந்தைய நாளின் அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலை, முடிவுற்ற விலை இம்மூன்றும் தான் நமக்கு தேவையான தகவல்கள்....


இப்போது பிவோட் நி(வி)லை, சப்போர்ட் நி(வி)லைகள், ரெசிச்டென்ஷ் நி(வி)லைகள் போன்றவற்றை கீழ்க்கண்ட சூத்திரம் மூலம் கணக்கிட வேண்டும்...


பிவோட் வி(நி)லை = ( அதிகபட்ச விலை+ குறைந்தபட்ச விலை+முடிவுற்ற விலை) / 3


ரெசிச்டென்ஷ் 3 = அதிகபட்ச விலை+{2*( பிவோட் விலை - குறைந்தபட்ச விலை)}


ரெசிச்டென்ஷ் 2 = பிவோட் விலை +( அதிகபட்ச விலை - குறைந்தபட்ச விலை )


ரெசிச்டென்ஷ் 1 = (பிவோட் விலை *2) - குறைந்தபட்ச விலை




சப்போர்ட் 1 = (பிவோட் விலை *2) - அதிகபட்ச விலை


சப்போர்ட் 2 = பிவோட் விலை - ( அதிகபட்ச விலை - குறைந்தபட்ச விலை )


சப்போர்ட் 3 = குறைந்தபட்ச விலை – {2 * (அதிகபட்ச விலை - பிவோட் விலை )


உதாரணமாக,

RPL ன்

அதிகபட்ச விலை = Rs 94

குறைந்தபட்ச விலை = Rs 90

முடிவுற்ற விலை = Rs 92 என்று வைத்து கொள்வோம்...



பிவோட் விலை = (94+90+92) / 3 = Rs 92


ரெசிச்டென்ஷ் 3 = 94 + {2* (92 – 90)} = Rs 98


ரெசிச்டென்ஷ் 2 = 92 + (94-90) = Rs 96


ரெசிச்டென்ஷ் 1 = (92 * 2) – 90 = Rs 94



சப்போர்ட் 1 = ( 92 *2 ) – 94 = Rs 90


சப்போர்ட் 2 = 92 – ( 94 -90 ) = Rs 88


சப்போர்ட் 3 = 90 – { 2*( 94 -92 ) } = Rs 86

இந்த சூத்திரம் பயன்படுத்த கஷ்டமாக இருந்தால், இந்த லிங்கை பயன்படுத்துங்கள் ....

http://www.icharts.in/calculators.html



இனி பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?

என்று அடுத்த பதிவில் காண்போம்.....

இன்று ஒரு தகவல்...06.01.02009(செவ்வாய்)

திங்கள் அன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் கொஞ்சம் சிவப்பு நிறத்தை காட்டியுள்ளன....ஏன்னா அங்க வாகன விற்பனை 36 சதவீதம் சரிஞ்சு போச்சாம் .....மேலும் முதலீட்டாளர்கள் கொஞ்சம் லாபத்தை வெளிய எடுத்துட்டாங்கலாம்.... தற்போது தூவங்கிய ஆசிய சந்தைகள் மதில் மேல் பூனை போல் இருக்கு...


கச்சா எண்ணையின் விலை 49 டாலருக்கு பக்கத்தில் சுற்றி கொண்டு இருக்குது...


அப்புறம் நேத்து நம்ம வெளிநாட்டு பயலுக லீவு முடிச்சுட்டு வந்துட்டாங்க போல இருக்கு .... சும்மா 470 கோடி வாங்கி இருக்கானுங்க ... நம்ம உள்ளுரு பயலுகளும் சும்மா 221 கோடி வாங்கி இருக்கானுங்க....(In cash)


வரப்போகிற காலாண்டு முடிவுகள் ஒன்னும் அவ்வளவு நல்லா இருக்காதுன்னு பேசிக்கிறாங்க....இதுவும் நம்ம வெளிநாட்டுகார பயலுகளுக்கு தெரியாமலா இருக்க போவுது….


நிஃப்ட்டி 3000 புட் ரைட்டிங் நடந்து இருக்காம்...அதனால 3000 அப்படிங்கிறது ஒரு ஸ்ட்ராங் சப்போர்ட் ஆய்டுமாம்...


நேற்றைய வர்த்தகத்துல RPL,DLF,TATASTEEL,UNITECH,SATYAM COMPUTER இதை எல்லாம் ஷார்ட் போய் வச்சு இருக்காங்கலாம்... அதனால வாங்கும் போது கொஞ்சம் கேர்புல்லா இருங்க .....


நேற்றைய சிங்கம் MUNDRA PORT சும்மா 18 சதவீதம் ஏறி இருக்கான்பா…

இத எல்லாம் எதுக்கு சொல்றதுனா ,மைன்ட்ல வச்சுகத்தான்!!!!



நிஃப்ட்டி முடிஞ்சது (as on 05.01.2009) : 3121.45


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 3105


சப்போர்ட் நிலைகள் : 3075,3025,3000


தடுப்பு நிலைகள் : 3150,3180,3225


Monday, January 5, 2009

இன்று ஒரு தகவல்...05.01.2009(திங்கள்)



வெள்ளி அன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் ஒபாமாவின் ஊக்கதொகை அறிவிப்பினால் மேலுயர்ந்தது என்று சொன்னால் மிகையாகாது.... தற்போது துவங்கிய ஆசிய சந்தைகள் விடுமுறை முடிந்து வந்ததால் அந்த சுறுசுறுப்பு இருக்கு.....


கச்சா எண்ணையின் விலை 47 டாலரை தொட்டு விட்டது......


என்ன தான் ரிசர்வ் பேங்க் ரெப்போ ரேட், ரிவெர்ஸ் ரெப்போ ரேட் கட் பண்ணினாலும் நம்ம மக்களோட வாங்கும் திறன் அதிகமாகணும் ....அப்ப தான் பணபுழக்கம் அதிகரிக்கும் ....ஆனா இப்போ நம்மாளுங்க பயந்து பயந்துலா வேல பாக்கான் , இன்னிக்கு போக சொல்லுவாங்களோ அல்லது நாளைக்கு போக சொல்லுவாங்களோ....புள்ள குட்டிங்களுக்கு சேத்து வச்சதை வீணா செலவு பண்ண கூடாதுன்னு முடிவோட இருக்கறப்போ எங்கிருந்து பணபுழக்கம் வரும்... மொதல்ல வேலைக்கு கேரன்டி கொடுங்கப்பா .....


ரெண்டு ஊக்க தொகையும் சேர்த்து ஒரு 40,000 கோடி ரூபா பணபுழக்கம் கிடைக்குமாம் .... நம்ம சந்தையோட ஒரு நாள் டர்ன் ஓவரே 50000-70000 கோடி ரூபா….. இது எந்த மூலைக்கு போக போகுதோ ????....


இன்னிக்கு நம்ம மார்க்கெட் சந்தோசமாத்தான் ஓபன் ஆகும் ....ஆனா அது நிலைகுமான்னுதான் பாக்கணும்....


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 02.01.2009) : 3046.75


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 3050


சப்போர்ட் நிலைகள் : 3020,2990,2960


தடுப்பு நிலைகள் : 3080,3105,3135




Sunday, January 4, 2009

சுப்பன்,ரங்கன் அரட்டை ...(29.12.2008-02.01.2009)

ரங்கன் :

ஹாப்பி நியூ இயர் சுப்பா....

சுப்பன் :

சேம் டு யு டா...

ரங்கன் :

அப்புறம் போனவாரம் என்ன ஏதாவது லாபம் பாத்தியா ....

சுப்பன் :

இல்ல ரங்கா....இந்த நியூ இயர் ஆரம்பமே எனக்கு நஸ்டத்தே கொடுத்துடுச்சு...மார்க்கெட் ஏறங்கும்னு நினைச்சு நிபிட்டில ஷார்ட் போய்ட்டேன்...செம லாசுப்பா.....

ரங்கன் :

நான் தான் சொன்னேன்ல... அரசு அறிவுப்பு இருக்குதுன்னு... அப்புறம் ஏன் இப்படி பண்ண.....

சுப்பன் :

முடிஞ்சதுக்கு அப்புறம் சொல்றது ஈசி....முன்னாடியே அடிச்சு சொல்லணும்.... ( ஆ...ஏண்டா அடிக்கிற ...)

ரங்கன் :

நீ தானே அடிச்சு சொல்லணும் சொன்னே ....அதான்....

சுப்பன் :

சரி இந்த வாரம் என்ன நடக்கும்னு நினைக்கிறே சொல்லு பாப்போம் ....

ரங்கன் :

அப்படி கேளு சுப்பா .... இந்த நல்ல சேதி வரும்னு முன்னாடியே தெரிஞ்சு போச்சு அதனால தேவையானத நம்ம லோக்கல் பயலுகளும் , வெளிநாட்டு பயலுகளும் வாங்கி போட்டுட்டாங்க...அதனால கொஞ்சம் கேர்புல்லா இருக்கனும்....

ரங்கன் :

2900,2985,3030,3090,3120,3250 இந்த ஆறு லெவலையும் மனசுல வச்சிக்கோ....இந்த இடம் வரும்போது வாங்கிறவங்க ரொம்ப அதிகமா இருந்தா வாங்கிப் போடு ....இல்லனா வித்துடு... முன்னாடி உள்ளத சப்போர்ட்டாவும் பின்னாடி உள்ளத ரெசிஸ்டன்ஸாவும் வச்சுக்கோ.... டெய்லி ஒனக்கு சொல்லிட்டு இருக்க முடியாது…..

சுப்பன் :

(ஆமா இததான் எல்லோரும் சொல்லுவாங்களே....ட்ரேடிங் செய்ரப்போதானே அல்லு அந்து போகுது....)

ரங்கன் :

எல என்ன முனகுரே .....

சுப்பன் :

ஒன்னும் இல்ல ...ஒன்னும் இல்ல...

ரங்கன் :

அப்புறம் இந்த நல்ல சேதி வந்ததுல்ல...அதனால L&T, IDFC, PFC,REC,HINDUSTAN CONSTRUCTION, அப்புறம் ஆட்டோ துறையில TATA MOTORS,ASHOK LEYLAND,ESCORTS அப்புறம் ரியல் எஸ்டேட் துறையில DLF,PARSVNATH DEVELOPERS ,ANSAL PROPERTIES இவனுங்களுக்கெள்ளாம் நல்ல காலம் வரும்னு எதிர் பாக்றானுங்கோ.....அதனால நீயும் ஒரு கண்ணு வச்சுக்கோ...


சுப்பன் :

இப்படியே மொட்டையாவே சொல்லு...வாரமலர்ல கருப்பு பூனை சொல்லறது மாதிரியே....

ரங்கன் :

டேய் இப்போ தானே வந்திருக்கேன்...பொறு,,, இப்போதைக்கு என் காதுக்கு வந்த செய்தி மட்டும்தான் சொல்ல முடியும் .....

ரங்கன் :

சரி … 2009 கனவுகன்னி யாரு... CNBC பாத்துட்டு இருந்ததினாலே... சன் டிவி பாக்க முடியல..

சுப்பன் :

ரொம்ப ரொம்ப முக்யம் பாரு .....போடா போய் உருபடுற வழிய பாரு...

ரங்கன் :

டேய் மூஞ்ச தொங்க போட்டு திரியாத டா ...நாய் வந்து கடிச்சிரப்போது....அடுத்த வாரம் நல்ல காலம் பொறக்கும்... கவலை படாம இரு....

சற்று தெளிந்த மனிலையில் சுப்பன் அங்கிருந்து விடை பெறுகிறான்.....

(சுப்பன்,ரங்கன் அரட்டை தொடரும்.......)


சென்ற வார பங்குச்சந்தை...(29.12.2008-02.01.2009)


INDICES

NIFTY (3047) 6.6%
SENSEX (9958) 6.7%
BSE IT (2284) 6.3%
BANKEX (5674) 8.9%
BSE MIDCAP (3391) 9.2%
BSE SMALLCAP (3871) 9.1%



TOP 5 GAINERS

ABM KNOWLEDGE (20) 67%
SUVEN LIFESCIENCES (18) 38%
ABG SHIPYARD (157) 38%
ANG AUTO (56) 37%
HFCL INFOTECH (13) 34%


TOP 5 LOSERS

TEXMACO (76) -89%
SUGAL DAMANI (11) -22%
PYRAMID SAIMIRA (40) -19%
HINDUSTAN EVEREST (19) -16%
ORBIT EXPORT (13) -16%