Friday, March 27, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(27.03.2009)

நேற்றைய பங்குசந்தை (26.03.2009)





27.03.02009(வெள்ளி)

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று தொடர்ந்து அதிகரித்து வரும் அமெரிக்க பங்கு சந்தைகள் ...

தனக்கென்று தனி முத்திரை இல்லாமல் அமெரிக்காவை பின் தொடரும் ஆசியாக்கள் ... நாமும் ஆசியாவில் ஒருவர் தானே ...

காரணம் என்ன தலைஎழுத்தை நான் நிர்ணயிக்கிறேன் என்று பல மில்லியன் டாலர்களுடன் சுற்றி திரியும் வெள்ளிநாட்டு அள்ள கைகள் …

அதில் குப்பைதொட்டியில் வீசப்பட காகிதம் போல் தினமும் தூக்கி எறியப்படும் தின சிறு வணிகர்கள் ...

பேராசை என்ற ஆயுதத்தை கையில் ஏந்தினால் நீயும் காகிதம் தான் என்று தினசரி நிரூபித்து கொண்டிருக்கும் சந்தை ...

ஒருவேளை நல்ல நேரம் வந்து விட்டதோ !!! இப்போது கோதாவில் இறங்கலாமா என்று ஒரு பக்கம் காத்து கிடக்கும் INVESTOR கள் …

ஒருவன் ஓடிக்கொண்டு இருக்கிறான் என்றால் தொடர்ந்து ஓட முடியாது ஒரு இடத்தில சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும் ... அது போல் திரும்பும் ...ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய சரிவு வருமா என்ற குழப்ப நிலையில் தவிக்கும்
TECHNICAL ANALYST கள் …

அதுக்கு யாரவது தும்முனா கூட கோபப்படுவராக மாற வேண்டும் இந்த FII கள் (அதாங்க எதுக்கு எடுத்தாலும் கோபப்படுறது)

இன்னொரு விஷயம் தினசரி வணிகர்களுக்கு சந்தை எப்போதும் இப்படித்தான் இருக்கும் …(ஏனென்றால் செய்திகளை தினசரி கேட்டு கொண்டிருக்கும் அவர்களுக்கு நல்லதும் கெட்டதாக தெரியும் ... கெட்டதும் நல்லதாக தெரியும் …)


இப்படிப்பட்ட சூழ்நிலையில் ,





நிஃப்ட்டி முடிஞ்சது (as on 26.03.2009) : 3082

இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 3055

தடை நிலைகள் : 3130,3175,3250

தாங்கு நிலைகள் : 3010,2935,2885

பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.html


ஒரு நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது ... பார்த்து … படித்து தெரிந்து கொள்ளவும் ...










































Thursday, March 26, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(26.03.2009)


நேற்றைய பங்குசந்தை (25.03.2009)




26.03.02009(வியாழன்)


தொடர்ந்து வாங்கும் ஆர்வத்துடன் உள்ள வெளிநாட்டு பயலுக(FII'S) ...

(உண்மையில வாங்குறாங்களா ... இல்லை நஸ்டத்தே குறைக்க நாடகம் ஆடுறாங்களா !!!)


இவனுகளே நம்பலாமா வேணாமா என்று குழப்பத்துடன் வணிகம் செய்து கொண்டிருக்கும் நம்ம உள்ளூருக்காரங்க(DII'S) ...


இவனுக போற போக்குல போனா கோவணம் கூட மிஞ்சாது என வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் சிறு தின வணிகர்கள் ...


மார்க்கெட் இறங்கும் இறங்கும் என்று நினைத்து PUT OPTION /SHORT நிலைகளை எடுத்து வைத்திருக்கும் தின வணிகராக இருந்து ,SWING TRADERஆக மாறி , இன்று POSITIONAL TRADER ஆக மாறி இருப்பவர்கள்ஏனென்றால் PUT CALL RATIO IS ABOVE 1.8


இன்று நிஃப்ட்டி யில் 3040 வலுவான தடைக்கல்லாக இருக்கும் என்று மனதை தேற்றிக்கொண்டு இருக்கும் TECHNICAL ANALYSTகள் ...


பணவீக்கம் , பணதேக்கமாக மாறுமா !!! அப்படி மாறினால் என்ன ரியாக்சன் இருக்கும் என்ற குழப்பம் ...


இன்னிக்கு F&O EXPIRY அப்படிங்கிறதால இதையெல்லாம் கண்டுக்காம அதோட வழியில போகுமா ...


இப்படி பல கேள்விகளை மனதில் நிறுத்திக்கொண்டு ரம்பிக்கப்போகும் இன்றைய சந்தை ,







நிஃப்ட்டி முடிஞ்சது (as on 25.03.2009) : 2984


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2970

தடை நிலைகள் : 3015,3040,3085

தாங்கு நிலைகள் : 2940,2890,2865


மேல மொக்கையாக காட்டிய நிலைகள் முக்கிய தாங்கு மற்றும் தடுப்பு நிலைகளாக இருக்கும் !!!


பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

http://investorarea.blogspot.com/2009_01_04_archive.html


Wednesday, March 25, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(25.03.2009)


நேற்றைய பங்குசந்தை (24.03.2009)









25.03.02009(புதன்)

வெளிநாட்டு பயலுக நேத்து அமோகமா வாங்கி குமிச்சிட்டாங்க ...உள்ளூருக்கார பய புள்ளைகளுக்கு அரிப்பு எடுத்துடுச்சு ...வித்து தீத்துட்டானுங்க !!!

2525 வரும்போது வாங்காத வெளியூர் பயலுக 2950 வந்திருக்கும் போது வாங்க ஆரம்பிச்சு இருக்காங்கன்னா கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் ... சும்மாவே நம்மாளுங்களை விட ரெண்டு மடங்கு TURNOVER பண்றவனுங்க ...

3100 CALL , 3000 PUT - இந்த LEVELல OPEN INTEREST கணிசமா ஏறி இருக்கிறது …


அதனால நான் இன்னா சொல்ல வர்றேன்னா ...



“மாமியார் மெச்சின மருமகள் இல்லை ... மருமகள் மெச்சின மாமியார் இல்லை … இது பழமொழி !!!


DII’S ஐ மிஞ்சின FII’S இல்லை ... FII’S மிஞ்சின DII’S இல்லை ... இது ஷேர் மொழி !!! ”




நிஃப்ட்டி முடிஞ்சது (as on 24.03.2009) : 2938


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 2955


தடை நிலைகள் : 3000,3060,3100


தாங்கு நிலைகள் : 2900,2850,2795

மேலே மொக்கையாக காட்டிய நிலை (WITHOUT VOLUME உடன் )உடைபட்டால் தான் TREND மாறும்


பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009_01_04_archive.html
























Tuesday, March 24, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(24.03.2009)

நேற்றைய பங்குசந்தை (23.03.2009)






24.03.02009(செவ்வாய்)


நேற்று உச்சத்தில் முடிந்த அமெரிக்க சந்தைகள் ...


இன்றும் தனது ஆட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ஆசிய சந்தைகள் ...

சந்தை கிழிறங்கி விடுமோ என்ற எண்ணத்தில் நிறைய PUT OPTION வாங்கி குவித்து வைத்திருக்கின்ற தின வணிகர்கள் ...

ஆனால் 2900 PUT, WRITING செய்து வைத்திருக்கின்ற FIIக்கள் ...

இன்னும் மூன்று தினங்களில் முடிவுக்கு வரும் இந்த மாத F&O EXPIRY …

இப்படியொரு காலகட்டத்தில்,





நிஃப்ட்டி முடிஞ்சது (as on 23.03.2009) : 2840


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2900


தடை நிலைகள் : 2990,3040,3135


தாங்கு நிலைகள் : 2850,2755,2705


பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009_01_04_archive.html

Monday, March 23, 2009

பட்டையை கிளப்பிய சந்தை !!!


இன்னிக்கு பங்குசந்தை ...(23.03.2009)




இனி ,

நேற்றைய பங்குசந்தை (20.03.2009)

23.03.02009(திங்கள்)



" நிஃப்ட்டியில ஏதோ DOJI PATTERN FORMஆகி இருக்குதுங்கிறாங்க …

CUP AND HANDLEன்னு சொன்னாங்க …

REVERSE HEAD AND SHOULDERன்னு சொல்றாங்க …
மாப்பு ... மாப்பு ... வச்சுடாதே ஆப்பு !!! "
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 20.03.2009) : 2807

இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 2800

தடை நிலைகள் : 2825,2840,2865,2890

தாங்கு நிலைகள் : 2780,2755,2740

பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009_01_04_archive.html