Saturday, January 31, 2009

சுப்பன் , ரங்கன் பங்குசந்தை அரட்டை …( 27.01.2009 - 30.01.2009 )


ரங்கன் :

என்ன சுப்பா ...வரும் போதே தலைய தொங்க போட்டு வர்றே ...


சுப்பன் :

ஒண்ணுமில்லை ...நேத்து அமெரிக்காவுல GDP ரிசல்ட்டு வந்ததுல DOW வை திருப்பியும் எறக்கி விட்டுட்டாங்க …சரியா 8000 த்துல கொண்டு வந்து வச்சுட்டாங்க …


ரங்கன் :

ஆமா சுப்பா …8000த்தை உடைச்சா DANGER, 8800 தாண்டினா SUPER …சரி , நம்ம ஊரு கதைக்கு வருவோம் ...


சுப்பன் :

நம்ம நாட்டு GDP , 7-7.5 சதவீதமா இருக்கும்னு RBI சொல்லிட்டு இருக்கு ...ஆனா தொழில்நுட்ப ஆய்வாளர்கள் 5.5- 6 சதவீதமா இருக்கும்னு எதிர் பாக்கிறாங்க ...


ரங்கன் :

எது எப்படியோ மைனசுக்கு போகாம இருந்தா நல்லது தான் ...


சுப்பன் :

பெட்ரோல், டீசல் விலைய கொறச்சுட்டாங்க போல இருக்கு ...


ரங்கன் :

இந்த ஒரு நல்ல விஷயத்துனால வரும் மார்ச் மாசம் INFLATION 3 சதவீதம் அளவிற்கு கொறஞ்சுடும்னு சொல்றாங்க ...


சுப்பன் :


போன மாசம் வெளிவந்த கம்பெனிகளின் காலாண்டு அறிக்கைகள் எப்படி வந்திருக்கு ...


ரங்கன் :


RELIANCE, L&T, IOC…போன்ற பெரிய கம்பெனிகளின் காலாண்டு அறிக்கைகள் எதிர்பார்த்ததை விட நல்லா வந்திருக்கு ...
இதை விட அடுத்த காலாண்டு நாங்க நல்லா முடிவோடு வெளிய வருவோம்ன்னு மார் தட்டிட்டு போயிருக்காங்க ...


சுப்பன் :

நம்ம சந்தை போன வாரம் ஒரு மூணு நாள் நல்லா ஏறி வந்துச்சே ... இது நிலைக்குமா ...


ரங்கன் :

சுப்பா ...போன வாரம் பங்குகளை வாங்கி குமிச்சதெல்லாம் நம்ம உள்ளுருக்கார பயல்வோ ...இன்னும் அசலூர்க்காரங்க தொடர்ந்து வித்துட்டுத்தான் இருக்காங்க ... அதும் ஒன்னும் பெரிய அளவுல இல்ல ... ஏதோ INTRADAY பண்ணிட்டு ஒதுங்குன மாதிரி தெரியுது …


சுப்பன் :

அடுத்த வாரம் நம்ம சந்தை எப்படி இருக்கும் ...


ரங்கன் :

ஒபாமா STIMULUS PACKAGE அப்படின்னு ஒரு சேதி ரொம்ப நாளா காதுல விழுந்துட்டே இருக்கு ... ஆனா “அதான் தெரியுமே”ன்னு நம்ம சந்தை எடுத்துடக்கூடாது ... இருந்தாலும் இந்த நிலைகளில் கவனமாக இருப்போம் ...


2720-2780-2830-2890-2945-2980-3020


சுப்பன் :

சரிடா அடுத்த வாரம் பாக்கலாம் ...


ரங்கன் :

விஷயம் முடிஞ்ச உடனேயே கழட்டி விட்டுடுவியே ... போ… போய்த்தொலை ...

(சுப்பன் , ரங்கன் அரட்டை தொடரும் …)


Friday, January 30, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(30.01.2009)

30.01.02009(வெள்ளி)


“ஒருவன் :

தல,தல ... நம்ம WALL STREET ஐ போட்டு அடி அடின்னு அடிக்கிறாங்க ...


ஒபாமா :

என் பெயரை சொன்னியா...


ஒருவன் :

உங்க பெயரை சொன்னதுக்கு அப்புறம் தான் போட்டு கொளுத்திட்டாங்க ...”



நேற்று முடிந்த அமெரிக்க சந்தைகள் வேலையற்றவர்கள் எண்ணிக்கை தொடர்பான அறிக்கை, வீடுகள் விற்பனை தொடர்பான அறிக்கை , மற்றும் பல பொருளாதார காரணங்களினால் சிகப்பு வண்ணத்தை காட்டியுள்ளன ...


தற்போது துவங்கிய ஆசிய சந்தைகள் அண்ணன் அமெரிக்கா வழியிலேயே சென்று கொண்டு இருக்கிறார்கள் …

கச்சா எண்ணையின் விலை 41-42 டாலரில் சுற்றி கொண்டு இருக்கிறது ...


சத்யம் கம்ப்யூட்டர் ஐ வாங்குவதற்கு 6-7 கம்பெனிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன ...அதில் இப்போது SPICE GROUPம் ஒன்று ...

வெளிநாட்டுக்கார பயபுள்ளைங்க ஜனவரி மாதத்தில் மட்டும் ஒரு பில்லியன் டாலர் இந்திய சந்தையிலிருந்து வெளிய எடுத்து இருக்காங்க ... இவனுங்க சொல்றதே பாத்தா ... ”எழவு வீடா இருந்தா நான் தான் பொணமா இருக்கணும் ...கல்யாண வீடாஇருந்தா நான் தான் மாபிள்ளையா இருக்கணும் ....” என்ற வில்லன் வசனம் ஞாபகத்தில் வருகிறது ...

AKRUTI பங்குல நல்லா விளையாடுறாங்க ...SPOT க்கும் FUTURE க்கும் நல்லா ஒரு கேப் இருக்கு ...ரெண்டு மாசமா இந்த வேல தொடர்ந்து நடந்து வருது ...


ABAN, L&T,TATA MOTORS,TATA TEA, ADLABS FILM, IVRCL INFRA, MOSERBAER,SUNPHARMA,PNB,RENUKASUGAR, TITAN,IOC,INDIABULLSREAL,JAINIRRIGATION,WELSPUN … இந்த புள்ளைங்க இன்னிக்கு ரிசல்ட்டோட வர்றாங்க …



நிஃப்ட்டி முடிஞ்சது (as on 29.01.2009) : 2824


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2830

தாங்கு நிலைகள் : 2790,2755,2720

தடை நிலைகள் : 2865,2910,2945

அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."

Thursday, January 29, 2009

ஜனவரி மாதத்தில் ரத்தக்காவு வாங்கியவர்கள் ...



SATYAM COMPUTER -60%

DLF -44%

UNISPIRITS , PUNJLLOYD -40%

ABAN -35%

SINTEX, DIVISLAB -33%

ECUCOMP -30%

HDIL,RELIANCE CAPITAL,NAGARJUNA CONSTRUCTION -28%

ROLTA,SUZLON -24%

PNB -23%

UNITECH -22%

L&T,SBI -15%

ICICI BANK -6%


இவனுகளை எல்லாம் மனசுல வச்சுக்கிட்டு ஜாக்கிரதையா இருங்க ...


இன்னிக்கு பங்குசந்தை ...(29.01.2009)


29.01.2009(வியாழன்)
ஒபமாவின் பொருளாதார ஊக்க தொகை அறிவிப்பு ( 819 பில்லியன் டாலர் ) அடுத்த வாரம் வெளிவரும் என்ற நம்பிக்கையில் நேற்று அமெரிக்க சந்தைகளில் பச்சை கொடி உயரே பறந்தது ...தற்போது துவங்கிய ஆசிய சந்தைகளிலும் அதன் தாக்கம் தெரிகின்றன ...


கச்சா எண்ணையின் விலை 42 டாலர் பக்கத்தில் சுற்றிக்கொண்டு இருக்கிறது ...


சத்யம் கம்ப்யூட்டரின் 1.7 கோடி பங்கை FIDELITY நிறுவனம் 53 ரூபாய் ஒரு பங்கு என்ற விலையில் வாங்கி இருக்கிறது ...அண்ணாச்சி L&Tக்கு போட்டி போல இருக்கு ...


RPOWER க்கு ஜார்கண்டில் 4000 MW ULTRA MEGA POWER PROJECT கிடைச்சிருக்கு ...ஒரு யூனிட்டுக்கு Rs 1.77 என்ற கொறஞ்ச விலையில QUOTE பண்ணி WIN பண்ணிட்டாரு ...


பெட்ரோல், டீசல்,சமையல் காஸ் விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது …


இன்னிக்கு ரிசல்ட்டோட வர்ற புள்ளைங்க MARUTI, BAJAJHIND, CAIRN,GMR INFRA,LUPIN,SUZLON, BANK OF BARODA,MERCATOR,TATA POWER,NEYVELI LIGNITE ...


நேத்தும் வெளிநாட்டுக்கார பயபுள்ளைங்க CASH MARKET ல 217 கோடி வித்து இருக்காங்க ...ஆனா INDEX FUTURES ல 1130 கோடி சும்மா வாங்கி இருக்காங்க ...அட இதுலே இருந்து என்ன தெரியுது , ஷார்ட் கவரிங் தான் … இன்னிக்கு கிளைமாக்ஸ் !!!


இன்னிக்கு F&O கான்ட்ராக்ட் முடியற நாள் அதனால பத்திரமா விளையாடுங்க ...இல்ல காலை வாரி விட்ருவானுங்க ...



நிஃப்ட்டி முடிஞ்சது (as on 28.01.2009) : 2849


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2825

தாங்கு நிலைகள் : 2790,2730,2700

தடை நிலைகள் : 2880,2920,2970


அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."


குறிப்பு :

இங்கே சொல்வது சந்தை நிலவரங்கள் ... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல ....

Wednesday, January 28, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(28.01.2009)

28.01.2009(புதன்)


நேற்று முடிந்த அமெரிக்க சந்தைகள் தட்டுத்தடுமாறி பச்சை வண்ணத்திற்கு வந்துள்ளன … நேற்று விடுமுறையாக இருந்த ஆசிய சந்தைகள் பச்சை வண்ணத்தை காட்டிக்கொண்டு இருக்கின்றன ... மற்றபடி ஜப்பானிய சந்தை சிவப்பு நிறத்தை தொட்டு விட்டது ...


கச்சா எண்ணையின் விலை 42-43 டாலர்ல இருக்கு ...


இன்னிக்கு ரிசல்ட்டோட வர்ற புள்ளைங்க ONGC,GAIL,NALCO,TATA STEEL,HDIL,CHAMBALFERT,POWERGRID,INDIACEMENT,HPCL ….


இன்னிக்கு வாயில போட்டு மெல்லுறதுக்கு பெரிய சேதி ஒன்னும் இல்ல ...அதனால சத்யம் கம்ப்யூட்டர், ரிசல்ட்டு வரப்போற பங்குகள் தான் இன்னிக்கு “FOCUS OF THE DAY” ஆக இருக்கும்.


நேத்து நடந்தது முழுக்க முழுக்க ஷார்ட் கவரிங் தானாம் ... இன்னும் வாங்குற ஆர்வம் வெளிநாட்டுக்கார பயபுள்ளைகளுக்கு வரலை ...


பிப்ரவரி நிஃப்ட்டி F&O கான்ட்ராக்ட்ல 3000 கால் ஆப்ஷன் வாங்க ஆர்வம் ரொம்ப கம்மியா இருக்காம் ...ஆனா 2500 புட் ஆப்ஷனுக்கு ஆர்வம் அதிகமா இருக்குதாம் ...


நாளைக்கு F&O கான்ட்ராக்ட் முடியற நாள் அதனால ஆப்ஷனோட விளையாடுறவங்க பத்திரமா விளையாடுங்க ...இல்ல காலை வாரி விட்ருவானுங்க ...



நிஃப்ட்டி முடிஞ்சது (as on 27.01.2009) : 2771


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2745

தாங்கு நிலைகள் : 2710,2650,2620

தடை நிலைகள் : 2805,2835,2895


அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."


குறிப்பு :

இங்கே சொல்வது சந்தை நிலவரங்கள் ... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல ....

Tuesday, January 27, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(27.01.2009)

27.01.02009 (செவ்வாய்)


நேற்று முடிந்த அமெரிக்க சந்தைகள் பச்சை நிறத்திற்கு இருக்க முயற்சி செய்து அதில் சிறிது வெற்றியும் கண்டன....


இன்று பல ஆசிய சந்தைகளுக்கு விடுமுறை ... ஜப்பான் மட்டும் மிக சந்தோசமாக பச்சை வண்ணத்தை காட்டிக் கொண்டிருக்கின்றன …


கச்சா எண்ணையின் விலை 45-46 டாலர்ல இருக்கு ...


PFIZER , WYETH கம்பெனிய 68 பில்லியன் டாலருக்கு வாங்கிட்டாங்கோ !!!


SBI ரிசல்ட்டு எதிர்பாத்ததே விட நல்லா இருக்கு ...ICICI BANK ரிசல்ட்டுல உறுத்துற விஷயம் NPA (Non-Performing Asset)… இருந்தாலும் பேங்கு பக்கம் ஒரு கண்ணை வச்சிகிட்டே இருப்போம் ... ஏதோ REPO RATE CUT ,REVERSE REPO RATE CUTன்னு காதுல விழுது ... என்னைக்கு வேணும்னாலும் ராக்கெட் கிளம்பும் !!!


EDUCOMP,SAIL,GLENMARK PHARMA,CENTURY TEXTILES…. இந்த புள்ளைங்க இன்னிக்கு ரிசல்ட்டோட வர்றாங்க ... போற போக்குல என்னதான் செய்றாங்கன்னு பாக்கலாம் ...


கீழே உள்ளவங்க எல்லாம் F&O விலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள் ...மார்ச்சுக்கு அப்புறம் இவுங்க எல்லாம் இருக்க மாட்டாங்க ...


(1)ANSAL PROPERTIES, (2)OSWAL CHEMICALS,(3)BRPL,(4)BRIGADE,(5)CORE PROJECTS,(6)JK BANK,(7)MATRIX LAB,(8)NIIT,(9)ORBIT,(10)PARSVANATH,(11)PRISM CEMENT,(12)PURVANKARA,(13)STRELITE,(14)VOLTAMP TRANSFORMERS,(15)WALCHANDNAGAR.


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 23.01.2009) : 2661


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2705

தாங்கு நிலைகள் : 2640,2620,2555

தடை நிலைகள் : 2725,2785,2810


அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."


குறிப்பு :


இங்கே சொல்வது சந்தை நிலவரங்கள் ... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல ....


Monday, January 26, 2009

அசோக் நாட்டாமையின் ஒரு பக்க கட்டுரைகள் (ஒரே பக்கத்தில் பங்குசந்தை பற்றிய விளக்கம் ...)



நமது வலைதளத்திற்கு வரும் நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க,பங்குசந்தை என்றால் என்ன என்ற அடிப்படை தகவலை எளிய முறையில் கொடுக்க முனைந்துள்ளேன் ...
ஒரு கம்பெனி மக்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அவர்கள் வியாபாரம் பார்க்க சென்று விடுவார்கள் ... பணத்துக்கு பதிலாக மக்களுக்கு பங்குகளை தருவார்கள் (அவரவர் முதலீட்டிற்கேற்றார் போல்...) இந்த DEALING நடக்குற இடத்துக்கு PRIMARY MARKET என்று பெயர் ...இப்படி பங்குகளை வெளிவிடும் முறைக்கு IPO( Initial Public Offer) என்று பெயர் …


சரி பங்குகளை வாங்கியாச்சு ... எதாவது அவசர தேவைக்கு பணம் தேவைப்படுகிறது ...பங்கை விற்று காசாக்க வேண்டும் !!! இப்படி பல தேவைகளுடன் வாங்குபவர்களும், விற்பவர்களும் கூடும் இடம் தான் SECONDARY MARKET … இந்த இடத்தில் தினமும் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதைத்தான் அன்றாட செய்திகளில் பார்த்து கொண்டு இருக்கிறோம் ...
சந்தையில் வாங்கும் முயற்சி நடந்திருந்தால் பச்சை நிறத்தையும், விற்கும் முயற்சி நடந்திருந்தால் சிவப்பு நிறத்தையும் SENSEX, NIFTY காண்பிக்கும் ...


எப்படி நமது SAVINGS A/C ல் பணம் இருக்கின்றதோ அதே மாதிரி பங்குகளை வைத்துக் கொள்ள உபயோகப்படுவது தான் D-MAT A/C.


அடுத்து FUTURES,

ஏல வியாபாரத்திற்கு எப்படி ஒரு முன்பணம் வாங்கி வைத்து கொள்வார்களோ அது மாதிரி இந்த வியாபாரதிற்க்கும் முன்பணம் கட்ட வேண்டும் இதை MARGIN MONEY என்பார்கள் … இது பங்குகளின் தன்மைக்கு ஏற்றர்போல் மாறுபடும் ...(20 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரை)



அடுத்து OPTION,

எப்படி ஒரு இடத்தை வாங்குறதுக்கு முன்னாடி TOKEN ADVANCE கொடுத்து வைக்கிறோமோ … அது மாதிரி இந்த OPTION வாங்குறதுக்கு நாம் கட்டுற பணத்திற்கு PREMIUM என்று பெயர் …

இதுல ரெண்டு வகை உண்டு ...


(1) CALL OPTION


(2) PUT OPTION



CALL OPTION – நாம் ஒரு பங்கின் விலை ஏறும்னு நினைத்தால் இதை வாங்கலாம் … பங்கின் விலை குறைந்து போனால் இதன் விலையும் குறையும் ...



PUT OPTION - நாம் ஒரு பங்கின் விலை இறங்கும்னு நினைத்தால் இதை வாங்கலாம் … பங்கின் விலை அதிகமானால் இதன் விலை குறையும் ...



முக்கியமாக இந்த FUTURES AND OPTIONS இவ்விரண்டையும் வாங்க வேண்டுமென்றால் ஒரு லாட்டாகத்தான் வாங்க வேண்டும் ... உதராணமாக,RELIANCE ஒரு லாட் என்பது 75 பங்குகள் ... லாட்டின் அளவு பங்கிற்கு பங்கு மாறுபடும் ...



அட அவ்வளவு தாங்க ஷேர் மார்க்கெட்டு !!!



மற்றபடி ஒவ்வொன்றையும் ஆழமாக வரும் வாரங்களில் காண்போம் ...








அசோக் நாட்டாமையின் ஒரு பக்க கட்டுரைகள் …(தினவர்த்தகர்களுக்கான பத்து கட்டளைகள் ...)




தினவர்த்தகத்தில் சில விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் பங்கு சந்தையிலிருந்து விரைவில் தூக்கி எறியப்படுவீர்கள் ...


(1)தினவர்த்தகர்கள், நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற முழு திட்டத்துடன் உள்ளே வர வேண்டும் ...எந்த பங்கை வாங்கப்போகிறோம் அல்லது விற்கப்போகிறோம், என்ன விலைக்கு இதை செய்ய வேண்டும் போன்ற திட்டங்கள் ...


(2) தினவர்த்தகர்கள் பொறுமையையும், நம்பிக்கையையும் கடைப்பிடிக்க வேண்டும் ...எந்தவொரு சமயத்திலேயும் இந்த இரண்டுக்கும் பங்கம் வந்து விட கூடாது ...


(3) தினமும் நீங்கள் செய்த வர்த்தகத்தின் வெற்றி தோல்விகளை குறிப்பெடுத்து கொள்ளுங்கள் ...தோல்விகளை எல்லாம் வெற்றி ஆக்கும் வழிகளை கண்டறியுங்கள் ... வெற்றி தோல்விகளை பக்குவமாக எடுத்து கொள்ள மனதை தயார் படுத்துங்கள்....


(4) நீங்கள் செய்த வர்த்தகம் உங்களுக்கு எதிராக செல்வதை உணர்ந்தால்...தயவு செய்து எப்போது வெளி வரலாம் என்று உணர்ச்சி வசப்படாமல் சிந்திக்கவும் …


(5) நஷ்டத்தை குறைக்க மீண்டும் வாங்கியோ அல்லது விற்றோ ஆவ்வேரஜ் செய்யாதீர்கள்....அந்த வர்த்தகத்தை மறந்து அடுத்த வர்த்தகத்திற்கு தயாராகுங்கள் ...


(6) தினவர்த்தகர்கள் பலர் நஷ்டம் வந்தால் கை கட்டி கொண்டு பார்த்து கொண்டு இருப்பார்கள் ஆனால் அதே லாபத்தே வளர விட மாட்டார்கள் ...உடனே கவர் செய்து விடுவார்கள் ... அதனால் ஒவ்வொரு வர்த்தகத்திலும் ஸ்டாப்-லாஸ் கண்டிப்பாக பின்பற்றுங்கள் ... எந்தவொரு இடத்திலும் உங்கள் பணம்
10 சதவீதத்திற்கு மேல் குறையாமல் அதாங்க நஷ்டம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் ...


(7) தினவர்த்தகர்கள் வார இறுதி நாட்களை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் ...தன் தொழிலுக்கு தேவையான புத்தகங்களை படிப்பதும் , பயனுள்ள தவல்களை சேகரிப்பதுமாக இருக்க வேண்டும் ...


(8) தினவர்த்தகர்கள் மொத்த பணத்தையும் வணிகத்திற்கு பயன்படுத்தக்கூடாது ...கையிருப்பு தங்கள் சக்திக்கு ஏற்றார்போல் வைத்துக்கொள்ள வேண்டும் ...


(9) தினவர்த்தகர்கள் பகல் கனவு காண்பதை தவிர்க்க வேண்டும் ... அதாங்க ஒரே நாளில் கோடீஸ்வரன், லட்சாதிபதி ஆவது போல ... வாய்ப்புகளுக்காக காத்திருக்க வேண்டும் ...


(10) இதற்க்கெல்லாம் முதலில் நீங்கள் தின வர்த்தகர் தானா என்று உங்களுக்கு நீங்களே ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டுக்கொள்ளவும் ... ஏனென்றால் ஆரம்ப காலத்தில் கற்றுக்கொள்ளவே நிறைய நேரம் (பணமும்தான்) செலவிட வேண்டியிருக்கும் ...



50 ஆயிரமோ அல்லது 1 லட்சமோ வைத்து வேற ஒரு வியாபாரம் செய்தால் என்ன லாபம் வருமோ அதே மாதிரி பங்குசந்தையிலும் எதிர்பார்த்தால் கண்டிப்பாக இதுவும் ஒரு நல்ல வியாபாரமே ...



“PRACTICAL EXPERIENCE IS BETTER THAN THEORETICAL EXPERIENCE FOR SHAREMARKET”


சுப்பன் , ரங்கன் பங்குசந்தை அரட்டை …( 19.01.2009 - 23.01.2009 )

ரங்கன் :


குடியரசு தின வாழ்த்துக்கள் சுப்பா ...


சுப்பன் :


ஸேம் டு யு ரங்கா ...


ரங்கன் :


இன்னிக்கு லீவு ...என்ன செய்யலாம்னு இருக்கே ...


சுப்பன் :


இந்த வாரம் பூரா லீவா இருந்தா நல்லா இருக்குமேன்னு தோணுது .. நம்ம மார்க்கெட் எந்த பக்கம் பாய போகுதுன்னு தெரிய மாட்டேங்குது ...


ரங்கன் :


இதுல என்ன குழப்பம் சுப்பா ...நம்ம வெளிநாட்டு பயலுக தொடர்ந்து வித்துகிட்டே வர்றானுங்க ...அவுக வாங்க ஆரம்பிச்சாதான் ஏறும் ...


சுப்பன் :


வர்ற வியாழன் F&O கான்ட்ராக்ட் வேற முடிய போகுது ...



ரங்கன் :


நல்ல வேளை ஞாபகப்படுத்தினே ...இந்த வாரம் மார்க்கெட் ஒரு வேளை ஏறினாலும், அது ஷார்ட் கவரிங்காத்தான் இருக்கும் ...


சுப்பன் :


எனக்கு என்னம்மோ நம்பிக்கை இல்லை ... நிறைய பங்குகள் டிஷ்கௌன்ட்லேயே இருக்கு …இந்த மாசம் மட்டும் இல்லாம அடுத்த மாசத்து கான்ட்ராக்ட்லையும் இப்படித்தான் இருக்கு ...


ரங்கன் :


சுப்பா , நீ சொல்றது வாஸ்த்தவம் தான் ...ஒரு வேளை ராக்கெட் விட வந்துட்டாங்கன்னா பயன்படுத்திக்கணும் இல்லையா ...


சுப்பன் :


ஆமா பேங்கு பங்கு எல்லாம் அடி ரொம்ப வாங்குதே ...


ரங்கன் :


பேங்கு பங்கு மட்டுமா அடிவாங்குது ... சத்யம் கம்ப்யூட்டர் ஊழல் விஷயம் வெளிய வந்ததுலேயிருந்து ,ஒரு சில தவிர மத்தது எல்லாம் சின்னா பின்னம் ஆகிட்டு இருக்கு ...

இப்போ பேங்க் எல்லாம் சாப்ட்வேர் துறை ஊழியர்களுக்கு நிறைய கடன் அட்டைகள் ,தனி நபர் கடன், வாகன கடன், வீட்டுக் கடன் எல்லாம் கொடுத்திருக்காங்க ... இப்போ நிறைய பேருக்கு வேலை கேள்வி குறியா இருக்கிறதுனால , எங்க அந்த கடன் எல்லாம் வராம போய் பேங்க்கோட லாபம் கொரஞ்சுடுமேன்னு பயப்படுறாங்க …(NPA - Non Performing Asset)


சுப்பன் :


சத்யம் கம்ப்யூட்டர் பங்கை L&T வாங்கிட்டு இருக்காமே ...


ரங்கன் :


ஆமா சுப்பா ...4 சதவீதமா இருந்ததை இப்போ 12 சதவீதம் ஆக்கிட்டாங்க ...இதுக்கு வெளிய இருந்து LIC முழு ஆதரவு கொடுத்துட்டு இருக்காம் ...


சுப்பன் :


சரி, இந்த வாரம் நிஃப்ட்டில கவனிக்க வேண்டய நிலைகள் என்னென்ன ...

ரங்கன் :


2250-2370-2450-2495-2620- 2690 -2720-2790-2820

2820 தாண்டுனாத்தான் அடுத்த கட்ட நகர்வு இருக்கும் (ஏற்றத்திற்கு)
2450 உடைந்தால்தான் அடுத்த கட்ட நகர்வு இருக்கும்(இறக்கத்திற்கு)


சுப்பன் :


சன் டிவி, கலைஞர் டிவி ரெண்டு பேருக்கும் இன்னும் ஒரு உடன்பாடு வரலையா ???

ரங்கன் :


ஏன் கேக்குறே ???


சுப்பன் :


இல்ல சன் டிவில “திருமலை” படம் போட்டா கலைஞர் டிவில “மருதமலை” படம் போடுறாங்க அதான் … மொத்தத்துல ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் ...


ரங்கன் :


நானும் ஏதோ சன் டிவி பங்கை பற்றி கேக்க போறியோன்னு நினைச்சேன் ... போடா போய் புள்ள குட்டிங்களை படிக்க வை ...



(சுப்பன் , ரங்கன் அரட்டை தொடரும் …)











Sunday, January 25, 2009

சென்ற வார பங்குச்சந்தை ...(19.01.2009 - 23.01.2009)

INDICES ...

NIFTY (2679) -5.3%

SENSEX (8674) -7.0%

BSE IT (2069) -5.3%

BANKEX (4485) -11.0%

BSE MIDCAP (2858) -5.8%

BSE SMALLCAP (3256) -4.6%

வென்றதில் முதல் ஐந்து இடம் ...

SATAYAM COMPUTER (39) +59%

AUSTRAL COKE (168) +29%

MADRAS ALUMINIUM (68) +27%

POLARIS SOFTWARE (43) +27%

BANG OVERSEAS (150) +26%

தோற்றதில் முதல் ஐந்து இடம் ...

UNITED SPIRITS (478) -34%

MIC ELECTRONICS (23) -27%

ABAN OFFSHORE (453) -24%

ZEE ENTERTAINMENT (92) -24%

GLENMARK PHARMA (203) -24%