இப்படித்தான்,
(கைப்புள்ளை நிஃப்ட்டி 2920 ல SHORT போய் வச்சிருக்காரு ...)
கைப்புள்ளை ஆளு :
தல … தல ... சீக்கிரம் வெளிய வா தல ...
FII ஆளுங்க நம்ம பங்குசந்தையை ஏத்து ஏத்துன்னு ஏத்துறாங்க ...
கைப்புள்ளை :
FII க்கு கட்டம் சரியில்லை ...நம்ம கூட விளையாடுறதே அவனுக்கு வேலையா போச்சுடா ...
இன்னிக்கு முடிவு பண்றேண்டா ... இந்த கைப்புள்ளையா ... அந்த FIIயான்னு …
எடுறா வண்டிய ...அமுக்குடா ஹாரனை ...
மக்கள் :
அய்யயோ கைப்புள்ள பத்தாயிரத்தோட கிளம்பிட்டானே ... இன்னிக்கு பங்குச்சந்தை என்ன ஆகப்போகுதோ தெரியலயே !!!
கட்டதுரை :
என்ன கோடு இது ...
கைப்புள்ளை :
3150 , இந்த BORDERஐ தாண்டி நீயும் வரக்கூடாது ...நானும் வரமாட்டேன் ... பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் !!!
கட்டதுரை ஆளு :
சரி என்ன விஷயமா இங்க வந்தே ...
கைப்புள்ளை :
பங்குசந்தையை ஏத்துனது எவன் ...
கட்டதுரை :
அன் ...அன் ...சரியா காதுல விழலே ...கொஞ்சம் பக்கத்துல வந்து சொல்லு ...
கைப்புள்ளை :
நான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டேன் ... என் ஆளு அங்க வருவான் … சொல்லியனுப்பு !!!
கைப்புள்ளை ஆளு :
ஏத்துனது எவன்டா …
கட்டதுரை :
என்ன “டா”வா .. பிச்சிடுவேன் ...
கைப்புள்ளை :
டேய் FII ,நீ ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தேன்னா என் ஆளை அடிச்சி பாரு ...
(கைப்புள்ளை ஆள் அடிவாங்கிவிட்டார்)
கைப்புள்ளை :
டேய் …நான் ஒத்துக்கிறேன் .. ஓன் தாய் பத்தினிங்கிறதே ஒத்துக்கிறேன் ...NEXT MEET பண்றேன்
கைப்புள்ளை :
உங்களை எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு ... இதுவரைக்கும் 2600 கீழ போனதில்லே ...
கட்டதுரை ஆளு :
போன மாசம் தானே 2526 வந்தே ...
கைப்புள்ளை :
அது போன மாசம் … நான் சொல்றது இந்த மாசம் ...
கைப்புள்ளை :
இப்போ போறன் ...ஆனா திரும்பி ...
கட்டதுரை ஆளு :
திரும்பி …
கைப்புள்ளை :
வரமாட்டேன்னு சொல்ல வந்தேன் ...
வேணாம் …வேணாம் … வலிக்குது ….அழுதுர்வேன் !!!
கட்டதுரை :
நம்பர் சொல்லுடா மாபிள்ளை ...
3150,3185,3205,3242 ….
கைப்புள்ளை :
ஐயோ என் பணம் … பணம் ...அம்மா …
கைப்புள்ளை ஆளு :
என்ன தல … இந்த தடவ LOSS கொஞ்சம் OVER ஓ!!!
மக்கள் :
பத்தாயிரத்தை பறி கொடுத்த கைப்புள்ளைக்கே இந்த கதின்னா ... பங்குசந்தைக்கு என்ன அடி விழுந்திருக்கும் ...
கைப்புள்ளை :
இப்படி சொல்லி சொல்லியே பணத்தை பூரா புடிங்கிட்டாங்க ... இன்னுமா இந்த ஊரு நம்மளை நம்பிக்கிட்டு இருக்கு ...