Friday, February 6, 2009

அசோக் நாட்டாமையின் ஒரு பக்க கட்டுரைகள் (பங்குசந்தையைப் பற்றி … )பக்கம் -4


சிறு வணிகர்கள் HEDGING செய்வது எப்படி என்று இன்றைய கட்டுரையில் காண்போம் ...


இன்றைய நமது கட்டுரையின் கதாநாயகன் ரொம்ப விவரமானவர் ...
புது வருடம்(2009) பிறந்த பிறகு சந்தையில் முதலீடு செய்வோம் என்று நினைத்தவர் ,மேலும் சந்தை பற்றிய விவரங்களை கேள்வி ஞானத்தில் தெரிந்து கொண்டவர் ...
ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் சந்தையில் நிஃப்ட்டி 3125 இருக்கும் போது தனது போர்ட்போலியோவை தொடங்கியவர் ...கையில் 50,000 ரூபாய் வைத்துக்கொண்டு களமிறங்கியவர் ...
அவர் வாங்குனா நிஃப்ட்டி பங்குகளை மட்டும் தான் வாங்குவேன் என்ற மன நிலை கொண்டவர் ...மேலும் முழுவதும் முதலீடு செய்யாமல் ஒரு பகுதியாக ரூபாய் 30,000 மட்டும் முதலீடு செய்தவர் ...அவர் என்னென்ன வாங்கி இருக்கிறார் என்று பார்த்தால் ....


05.01.2009 பங்குகள் வாங்கி குவித்த நாள் ...


RPL 50 SHARES @ 92 = Rs 4600.00

SAIL 50 SHARES @ 89 = Rs 4450.00

SUZLON 50 SHARES @ 67 = Rs 3350.00

RELIANCE 10SHARES @ 1365 = Rs 13650.00

ICICI BANK 10 SHARES @ 500= Rs 5000.00

மொத்தமாக 31,050 ரூபாய் ( மேற்சொன்ன விலையெல்லாம் அன்றைய தினத்தின் முடிவுற்ற விலைக்கு அருகில் உள்ளது )

விதி யாரை விட்டது ...சந்தை அவர் வாங்கி முடிந்த மறு நாளில் இருந்து இறங்க ஆரம்பித்து விட்டது ...நம்மாளுக்கு கவலை தொற்றிக்கொண்டது ஏனென்றால் வாகியதெல்லாம் நிஃப்ட்டி பங்குகள் ஆயிற்றே !!!


நிஃப்ட்டி 3000 வந்தவுடன் அவருக்கு பயம் கொடுத்து விட்டது ... நம்மவர் தான் விவரமானவர் ஆயிற்றே !!! கையிலிருக்கும் மீதி பணத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்த போது உதயமானது ஒரு யோசனை ...அதாங்க “HEDGING” ,
இப்போது அவர் MINI NIFTY யை 3000 த்தில் விற்று வைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் …MINI NIFTY ல் 20 பங்குகள் உள்ளன .

(நிஃப்ட்டி 3125 இருக்கும்போது மேல் சொன்ன பங்குகளை வாங்கியவர் )


MINI NIFTY யை விற்பதற்கு 10,000 ரூபாய் இருந்தால் போதும் ... இன்னும் அவர் கையில் 9000 ரூபாய் மீதம் வைத்திருக்கிறார் ...(MTM Loss வந்தால் அதற்காக !!!அதிலும் ஒரு SAFETY!!!)


இன்று அவரது நிலை என்ன as on 06.02.2009 (சரியாக ஒரு மாதம் கழித்து …)

RPL 50 SHARES @ 85 = Rs 4250.00

SAIL 50 SHARES @ 87 =Rs 4350.00

SUZLON 50 SHARES @ 44 = Rs 2200.00

RELIANCE 10SHARES @ 1345 = Rs 13450.00

ICICI BANK 10 SHARES @ 407 = Rs 4070.00


இன்று விற்றிருந்தால் அவர் கையில் கிடைக்கும் தொகை 28,320 ரூபாய் … ஆக நஷ்டம் (Rs 31,050 – Rs 28,320) = Rs 2730/- நஷ்டம்


ஆனால் HEDGING முறையில் MINI NIFTY யை 3000 த்தில் விற்று வைத்திருந்ததால் அவரின் இன்றைய நிலை ( Rs 3000 – Rs 2830 )= Rs 170 * 20 பங்குகள் = Rs 3400 /- லாபம் .


Rs 3400 /- லாபம் - Rs 2730/- நஷ்டம் = Rs 670 லாபம் …


அட இதை கூட இந்த பங்குகளை வாங்கியதற்காக , MINI NIFTY யை ROLL OVER செய்ததற்காக BROKERAGE ஆக வச்சுக்கிட்டாலும் எனக்கு இன்னிக்கும் நஷ்டமில்லைங்கோ !!!


மறுபடியும் சொல்கிறேன் ... HEDGING என்பது லாபம் சம்பாதிக்கும் ஆயுதம் அல்ல ...இது நஷ்டத்தை குறைக்கும் ஆயுதம் ...


உங்களது சந்தேங்களை மின்னஞ்சல் முகவரியுடன் கீழே சொல்லுங்கள் ...




இன்னிக்கு பங்குசந்தை ...(06.02.2009)

06.02.02009(வெள்ளி)

நேற்று சிவப்பு வண்ணத்தில் துவங்கிய அமெரிக்க சந்தைகள் பச்சை நிறத்திற்கு வர முயற்சி செய்து வெற்றியும் கண்டன.... தற்போது துவங்கிய ஆசிய சந்தைகளும் பச்சை நிறத்திலேயே வணிகமாகிக் கொண்டு இருக்கின்றன ... ஒபாமா STIMULUS PACKAGE திங்கள் கிழமை(09.02.2009) வரும் என எதிர்பார்க்கப்படுகிறது …


கச்சா எண்ணையின் விலை 40-41 டாலர்ல இருக்கு ...


சத்யம் கம்ப்யூட்டர்ன் புதிய CEOவாக A.S.மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார் …


நேற்றைய வணிகத்தில் SHIPPING துறை பங்குகள் மிளிர்ந்தன ...(GE SHIPPING , MLL …)


நேற்று வெளிவந்த பணவீக்கம் பற்றிய அறிவிப்பு சந்தையில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை ...(5.07% VERSUS 5.64%WoW)


TATA MOTORS அதனுடைய VENDORகளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் இழுத்தடிக்கிறது என்ற வதந்தியால் அந்த நிறுவன பங்கின் விலை சரிந்தது ...


RPL FUTURE, LONG POSITION கூடி இருக்கிறது ...SBI FUTURE ,SHORT POSITION அதிகமாகி இருக்கிறது ...


மீண்டும் F&Oவில் TURNOVER ரொம்ப கம்மியாக இருக்கிறது ...


PLEDGED SHARES பற்றிய அறிக்கை ….

(1) UTV SOFTWARE 22.76%

(2) HINDUSTAN MOTORS 16.3%

(3) LANCO INFRA 8.53%

(4) SAHARA ONE MEDIA 6.97%


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 05.02.2009) : 2780

இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 2785

தாங்கு நிலைகள் : 2750,2720,2690

தடை நிலைகள் : 2815,2845,2875

அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."


குறிப்பு :

இங்கே சொல்வது சந்தை நிலவரங்கள் ... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல ....

Thursday, February 5, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(05.02.2009)


05.02.2009(வியாழன்)


நேற்று சற்றே ஏற்றத்தில் ஆரம்பித்த அமெரிக்க சந்தைகள் கடைசியில் சற்றே இறக்கத்தில் முடிவடைந்தன ... தற்போது துவங்கிய ஆசிய சந்தைகள் குழப்பமான மனநிலையில் பயணித்துக் கொண்டிருக்கின்றன ….

கச்சா எண்ணையின் விலை 40 டாலர் பக்கத்தில் சுற்றிக்கொண்டு இருக்கிறது ...

கடந்த வாரம வெளிவந்த பணவீக்கத்தை விட இன்று பணவீக்கம் குறைய வாய்ப்பு இருப்பதாக CNBC TV 18 கருத்துகணிப்பு தெரிவிக்கின்றன...(5.64% TO 5.2%)

நேற்று நட்சத்திரமாக மின்னிய பங்கு WWIL …

ஒவ்வொரு நாளும் குறிப்பிட சில பங்குகளை விலை ஏற்றும் நடவடிக்கைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன ...(WWIL,DISH TV, OSWAL CHEMICALS …)

DLF பங்கு நேற்று கொஞ்சம் மீண்டு வந்தாலும் அதில் இன்னும் SHORT POSITIONS அதிகமாக இருக்கின்றன ...

SPICETELE ல் பல பேர் பங்குகளை கையில் இல்லாமல் விற்றிருகிறார்கள் ...ஏறக்குறைய NSE ல் 1.37 லட்சம் பங்குகள் AUCTION MARKETக்கு சென்றுள்ளன

2800, 2900,3000 CALL OPTIONS ரைட்டிங் நடந்து கொண்டும், 2500,2450 PUT OPTIONS ஐ வாங்கி கொண்டும் இருக்கிறார்கள் ...

PLEDGED SHARES பற்றிய அறிக்கை ….

(1) TORRENT POWER 11.07%

(2) MURUDESWAR CERAMICS 20%


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 04.02.2009) : 2803


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 2810

தாங்கு நிலைகள் : 2775,2745,2715

தடை நிலைகள் : 2835,2870,2900

அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."

குறிப்பு :

இங்கே சொல்வது சந்தை நிலவரங்கள் ... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல ....

Wednesday, February 4, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(04.02.2009)

கரடியார் உள்ளே வர துடித்து கொண்டிருக்கிறார் ...


04.02.2009(புதன்)


முதலில் தட்டுத்தடுமாறி ஆரம்பித்த அமெரிக்க சந்தைகள் பிறகு படிப்படியாக உயர்ந்தன ... வீடுகள் விற்பனை பற்றிய செய்திகள் அமெரிக்க சந்தையை மேலே கொண்டு சென்றன ....
தற்போது துவங்கிய ஆசிய சந்தைகள் அண்ணன் அமெரிக்கா வழியிலேயே சென்று கொண்டு இருக்கிறார்கள் …


கச்சா எண்ணையின் விலை 41 டாலரில் சுற்றி கொண்டு இருக்கிறது ...


MARUTI வாகன விற்பனை அதிகம் என்ற செய்தி கசிந்ததினால் அந்த பங்கின் விலை ஏறியது ... இதே மாதிரி சிமெண்ட் பங்குகளான GRASIM,ACC இவர்களுக்கும் விற்பனை அதிகமான செய்தி … விலை ஏறியது !!!


சத்யம் கம்ப்யூட்டர் ஐ வாங்குவதற்கு POLARIS போட்டி போடுகிறது என்ற வதந்தியால் POLARIS பங்கின் விலையும் ஏறியது ... இந்த விஷயத்தினால் SPICETELE ,52 வார புதிய உச்சங்களை அடைந்து கொண்டு இருக்கிறது ... மூன்று நாட்களில் 228 சதவீத ஏற்றம் !!!


ஆனால் DLF , 52 வார குறைந்த பட்ச விலையை தொட்டுக்கொண்டிருக்கிறது ....தொடர்ந்து பாத்துகிட்டே இருப்போம் ...DEMAND கூடும்போது உள்ளே புகுந்து லாபத்தோடு வெளிய வரலாம் ...


NTPC,FUTURE இல் நிறைய SHORT POSITION உருவாகி இருக்கிறது ...
SO உஷாரு ...


2900 CALL OPTION ரைட்டிங் நடந்துட்டு இருக்கு ... அதனால 2900 ஒரு முக்கியமான தடை நிலையா இருக்கும் ...BE CAREFUL.


PLEDGED SHARES பற்றிய அறிக்கை ….

(1) RENUKA SUGAR 8.26%

(2) ABAN 8%


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 03.02.2009) : 2784


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2790

தாங்கு நிலைகள் : 2745,2705,2665

தடை நிலைகள் : 2825,2865,2905


அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."


குறிப்பு :

இங்கே சொல்வது சந்தை நிலவரங்கள் ... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல ....


Tuesday, February 3, 2009

அசோக் நாட்டாமையின் ஒரு பக்க கட்டுரைகள் (பங்குசந்தையைப் பற்றி … )பக்கம் -3

ARBITRAGE என்றால் என்ன?


இதை ஒரு சிறு உதாரணம் மூலம் காண்போம் ....


மதுரையில் சினிமா பட DVD கள் பத்து ரூபாய்க்கு கிடைக்கிறது ...இந்த DVD களை பத்து ரூபாய்க்கு மதுரையில் வாங்கி திருநேல்வேலியில் 25 ரூபாய்க்கு விற்கிறோம் என்றால் அதற்க்கு பெயர் தாங்க ARBITRAGE … அதாவது பொருள் ஒன்று ....ஆனால் விற்கும் இடங்கள் வேறு ...


மூணு விஷயங்கள் நடந்தால் இந்த ARBITRAGE செய்வது நின்று விடும் ... அது என்னென்ன விஷயங்கள் ....


(1) எல்லா ஊர்களில் இருந்தும் மதுரைக்கு DVD வாங்க படையெடுத்தால் பற்றாக்குறை ஏற்பட்டு ,மதுரையில் DVD கிடைக்காமல் போகலாம் …


(2) அல்லது மதுரையிலேயை மீதமிருக்கிற DVD யின் விலை ஏறி விட வேண்டும் ....(DEMAND காரணமாக)


(3) நம்ம திருநேல்வேலியிலேயே பல பேரு DVD கடையை போட்டாங்கன்னா SUPPLY அதிகமாகி DEMAND கம்மியாகி விடும் ...அப்புறம் திருநேல்வேலியிலேயே பத்து ரூபாய்க்கு DVD கிடைக்க வாய்ப்பு வரலாம் ...



எதை எல்லாம் ARBITRAGE என்று சொல்லலாம் !!!


(1)நம்ம சந்தைகளிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு மற்ற (அமெரிக்க,ஐரோப்பிய..) சந்தைகளில் முதலீடு செய்வதும் ஒரு வகையான ARBITRAGE தான் …


(2)நம்ம சந்தைகளிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு COMMODITY (GOLD, SILVER….) சந்தைகளில் முதலீடு செய்வதும் ஒரு வகையான ARBITRAGE தான் …


(3)நம்ம சந்தையிலேயை CASH MARKETக்கும் , FUTUREக்கும் இடையேயான விலை வித்தியாசத்தில் விளையாடுவதும் ஒரு வகை ARBITRAGE தான் …


சரி நம்ம பங்கு சந்தைக்கு ARBITRAGE பயன்படுத்த முடியுமா? என்பதை வரும் நாட்களில் காண்போம் ...




இன்னிக்கு பங்குசந்தை ...(03.02.2009)


03.02.02009(செவ்வாய்)


நேத்து அமெரிக்க சந்தைகள் பச்சையும், சிவப்பும் கலந்து முடிந்துள்ளன … இப்போ நடந்துட்டு இருக்கிற ஆசிய சந்தைகள்கிட்டே சுறுசுறுப்பு இல்ல ...பித்து பிடிச்ச மாதிரி கிடக்காங்க .... நம்ம மார்க்கெட் ஆரம்பிச்சாத்தான் அந்த சுறுசுறுப்பு வரும் போல இருக்கு ...


கச்சா எண்ணையின் விலை 40-41 டாலரில் சுற்றி கொண்டு இருக்கிறது ...

SEBI சில கொள்கைகளை மாற்றியுள்ளன ...


(1) UPFRONT PAYMENT ON PREFERENTIAL WARRANTS HIKED TO 25%
(2) DIVIDEND TO BE ANNOUNCED ONLY ON SHARE BASIS
(3) BONUS ISSUES SHOULD BE COMPLETED IN 15-60 DAYS
(4) MORE TIME FOR COMPANIES TO DISCLOSE IPO PRICE BAND.


SPICETELE பங்கு இரண்டே நாளில் 150 சதவீதம் உயர்ந்துள்ளன ...அந்த பங்கில் ஏகப்பட்ட SPECULATIVE ACTIVITY நடந்து கொண்டு இருக்கின்றன ...


EDUCOMP SOLUTION, NALCO இவை இரண்டும் ARBITRAGE செய்யும் வாய்ப்பைத் தந்து கொண்டு இருக்கின்றன ...


சத்யம் கம்ப்யூட்டர்ஐ வாங்குவதற்கு எனக்கு விருப்பம் இல்லை என்று விப்ரோ நிறுவன முதலாளி கூறியுள்ளார் ...


நிஃப்ட்டி 2500,2450 PUT OPTION இவை இரண்டுக்கும் கொஞ்சம் மவுசு கூடியுள்ளது ... அதே மாதிரி 2800 CALL OPTIONனில் OPEN INTREST கூடியுள்ளது …



நிஃப்ட்டி முடிஞ்சது (as on 02.02.2009) : 2766


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2800

தாங்கு நிலைகள் : 2727,2687,2617

தடை நிலைகள் : 2837,2917,2957

அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."


குறிப்பு :


இங்கே சொல்வது சந்தை நிலவரங்கள் ... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல ....



Monday, February 2, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(02.02.2009)


02.02.02009(திங்கள்)


வெள்ளி அன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் GDP அறிவிப்பு (3.8%) மற்றும் பல பொருளாதார காரணங்களினால் சிகப்பு வண்ணத்தை காட்டியுள்ளன ...


தற்போது துவங்கிய ஆசிய சந்தைகள் ஒரு கலவையாக காணப்படுகிறது ... (பச்சையும், சிவப்பும் கலந்து காணப்படுகின்றன).


கச்சா எண்ணையின் விலை 42 டாலரை நெருங்கி உள்ளது ...


DLF, UNITECH போன்ற ரியால்டி பங்குகள் ரிசல்ட்டு எதிர்பாத்ததை விட மோசம் தான் ...


SEBI எல்லா கம்பெனிகிட்டையும் PLEDGED SHARES DETAILS கேட்டு உள்ளது ... அதுவும் ஏழு நாள்ல கொடுக்கணுமாம்… இது எத்தனை பேர் வயத்துல புளிய கரைக்க போகுதோ !!!


ACTING பிரதம மந்திரி பிரணாப் இன்று பொதுத்துறை வங்கி நிர்வாகிகளிடம் கலந்துரையாடல் மேற்கொள்கிறார் ...


கம்பெனிகளின் காலாண்டு முடிவு பற்றிய அறிவிப்புகள் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது ...


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 30.01.2009) : 2875


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2845

சப்போர்ட் நிலைகள் : 2805,2735,2700

தடுப்பு நிலைகள் : 2915,2950,3020


அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."

குறிப்பு :

இங்கே சொல்வது சந்தை நிலவரங்கள் ... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல ....





Sunday, February 1, 2009

சென்ற வார பங்குச்சந்தை ...(27.01.2009 - 30.01.2009)


INDICES ...


NIFTY (2875) +7.3%

SENSEX (9424) +8.6%

BSE IT (2237) +8.1%

BANKEX (4900) +9.3%

BSE MIDCAP (2942) +3.2%

BSE SMALLCAP (3339) +2.6%



வென்றதில் முதல் ஐந்து இடம் ...


SPICE TELE (48) 72%

HANUNG TOYS (34) 40%

SATYAM COMPUTER (54) 39%

JINDAL STEEL (1037) 33%

APTECH (89) 27%



தோற்றதில் முதல் ஐந்து இடம் ...


GLENMARK PHARMA (137) -32%

EPIC ENERGY (72) -31%

MAYTAS INFRA (74) -18%

ASIAN PAINTS (785) -15%

CUMMINS (168) -14%