நேற்று 2700 PUT WRITING நடந்துள்ளது ,மேலும் 2800 CALL ACCUMULATION நடந்துள்ளது …சந்தையின் திசை இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை ...
சுருக்கமாக சொல்லப்போனால் DII’sஎன்று அழைக்கப்படும் நம் உள்ளுர்காரங்க தான் சந்தையை சரிய விடாமல் தடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் ... அவர்களுக்கு கோபம் வராத வரை நல்லது ...
இன்று F&Oவில் புதிய LOTSIZEகள் அறிமுகமாக உள்ளன ...யாருக்கு எல்லாம் வரவேற்பு இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்போம் !!!
GDP ரிசல்ட் இன்று வெளிவருகிறது ...
பணவீக்கம் குறைந்து உள்ளதால் வட்டி விகிதங்களை குறைக்கலாம் என்ற எதிர்பர்ர்ப்பு அதிகம் கிளம்பியுள்ளது ... BANKERS MEET இன்று நடைபெறுகிறது ... BANK OF BARODA மற்றும் IDBI வங்கி தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள் …
சோனியா ... சோனியா … சொக்க வைக்கும் சோனியா தினவணிகரில் ரெண்டு வகை உண்டு
(1) SCALPERS
(2) MOMENTUM TRDERS
மொத்தம் மொத்தமாக பங்குகளை வாங்கி சில நொடிகளில் அல்லது சில நிமிடங்களில் சிறிய லாபத்திற்கு விற்று வெளியேறுபவர்கள் “SCALPERS”,இவர்கள் அடிக்கடி வணிகத்தில் ஈடுபடுவார்கள் ...
கொக்கு மீனுக்காக எப்படி ஒற்றைகாலில் நின்று காத்துக் கொண்டு இருக்குமோ அது மாதிரி அன்றைய நாளின் குறைந்த விலையின் அருகில் வாங்கி அதிகபட்ச விலைக்கு அருகில் விற்று வெளியேறிவிடுவர் ... அவர்களுக்கு “MOMENTUM TRADERS” என்று பெயர் … இவர்கள் அடிக்கடி வணிகத்தில் ஈடுபட மாட்டார்கள் ...
அடிக்கடி வர்த்தக சேனலில் (CNBC TV 18, NDTV PROFIT ...) அடிபடும் ஒரு வார்த்தை “OPEN INTEREST “அதை பற்றிய விளக்கத்தை இந்த கட்டுரையில் பார்ப்போம் ...
முதலில் OPEN INTEREST என்றால் என்ன?எங்கு இது பயன்படுகிறது?
என்ற விளக்கத்தை பார்ப்போம் ...
OPEN INTEREST என்பது பங்குசந்தையில் FUTURTES AND OPTIONS எனப்படும் DERIVATIVE SEGMENT க்கு உரித்தான வார்த்தை ...
மேலும், OPEN INTEREST என்பதுஎத்தனை CONTRACT கள்இன்னும் முடிக்கப்படாத நிலையில் வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் உள்ளது என்பதை உணர்த்தும் ஒரு புள்ளி விவரம் ...
ஒரு CONTRACT எப்போது உருவாகும் ?
ஒருத்தர் விற்கிறார் ஒருத்தர் வாங்குகிறார் அப்போது தான் ஒரு CONTRACT உருவாகும் ...
அதனால் OPEN INTEREST என்பது ஒன்று வாங்கியவர்களின் நிலையிலோ அல்லது விற்றவர்களின் நிலையிலோ இருந்து கணிக்கப்படும் ...இந்த இருவர்களின் கூட்டுத் தொகை அல்ல !!!
OPEN INTEREST எப்படி கணக்கிடப்படுகிறது???
முதலாவதாக, புதிதாக ஒருத்தர் விற்கிறார், புதிதாக ஒருத்தர் வாங்குகிறார்அப்போது OPEN INTEREST “1”,
இரண்டாவதாக, அதே மாதிரி வாங்கியவர் விற்று விட்டாலோ , விற்றவர் வாங்கி விட்டு கணக்கை நேர் செய்து கொண்டால்OPEN INTEREST “1” குறைந்து விடும்,
மூன்றாவதாக, ஏற்கனவே வாங்கியவர் புதிதாக வந்த ஒருவரிடம் விற்று விட்டால் அப்போது OPEN INTEREST மாறாது ...
உதாரணமாக,
அசோக், ஸ்ரீதர், ராஜகோபால் மூணு பேரு இருப்பதாக வைத்துக்கொள்வோம் ...
முதலாவதாக , அசோக் விற்கிராரு , ஸ்ரீதர் வாங்குராருஅப்போது OPEN INTEREST “1”,
இரண்டாவதாக, ஸ்ரீதர்வாங்கியதைவிற்கிராரு , அசோக்விற்றதை வாங்குராருஅப்போது OPEN INTEREST “0”,(எளிமை கருதிஇருவருக்குள் மட்டும் வணிகம் நடந்ததாக எடுத்துக்கொண்டால்)
மூன்றாவதாக, ஸ்ரீதர்வாங்கியதைபுதிதாக வந்தராஜகோபால்என்பவரிடம் விற்கிறார் என்றால்அப்போது OPEN INTEREST மாறாது அதாவது “1”...( ஏனன்றால் ஸ்ரீதர் அவர் கணக்கை முடித்துவிட்டு வெளியேறி விட்டார் ...இப்போது ராஜகோபால் வாங்கி இருக்கிறார் , அசோக் விற்று இருக்கிறார் அதனால் OPEN INTEREST “1”)
லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடம் அல்லவா சந்தை ....அதனால் எளிதாக புரிந்து கொள்ள கீழே உள்ள அட்டவணை உதவும் ...
வாங்குபவர்
விற்பவர்
OPEN INTEREST
புதியவர்
புதியவர்
ஏறும்
புதியவர்
ஏற்கனவே வாங்கியவர்
மாறாது
ஏற்கனவே விற்றவர்
புதியவர்
மாறாது
ஏற்கனவே விற்றவர்
ஏற்கனவே வாங்கியவர்
குறையும்
OPEN INTEREST அதிகமாகிக்கொண்டிருக்கிறது என்றால், நிறைய பணம் உள்ளே வந்திருக்கிறது என்று அர்த்தம் , அதனால் தற்போது உள்ள நிலை அப்படியே தொடரும் (ஏற்றம்நடந்து கொண்டிருக்கிறது என்றால் ஏற்றம் , இறக்கம்நடந்து கொண்டிருக்கிறது என்றால்இறக்கம், பக்கவாட்டு நகர்வு நடந்து கொண்டிருக்கிறது என்றால் பக்கவாட்டு நகர்வு )
OPEN INTEREST குறைகிறது என்றால்,தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலை முடிவுக்கு வரப்போகிறது என்று அர்த்தம் .... ( இறக்கம் நடந்து கொண்டிருக்கிறது என்றால் அது முடிவுக்கு வந்து ஒரு ஏற்றதிற்க்கோ அல்லது பக்கவாட்டு நகர்விற்க்கோ தயாராகிறது என்று அர்த்தம் ...)
இதையும் சுருக்கமாக சொல்லப்போனால் …
Price
(INDEX/STOCK)
OPEN INTEREST
Interpretation
(கணிப்பு)
(INDEX/STOCK)
ஏறுகிறது
ஏறுகிறது
வலுவுடன் உள்ளது
ஏறுகிறது
குறைகிறது
வலுவிழந்துகொண்டு இருக்கிறது
குறைகிறது
ஏறுகிறது
வலுவிழந்து உள்ளது
குறைகிறது
குறைகிறது
வலுப்பெற்றுக்கொண்டுஇருக்கிறது
இதைத் தாங்க டிவியில NIFTY ADDS 3 LAKH SHARES IN OPEN INTEREST , RPL ADDS 5 LAKH SHARES IN OPEN INTEREST அப்படின்னு சொல்லுவாங்க ..(அதாவது OPEN INTEREST அதிகமாகி இருக்கிறது என்று அர்த்தம்)
NIFTY SHEDS 3 LAKH SHARES IN OPEN INTEREST , RPL SHEDS 5 LAKH SHARES IN OPEN INTEREST அப்படின்னு சொல்லுவாங்க …(அதாவது OPEN INTEREST குறைந்து இருக்கிறது என்று அர்த்தம்)
அவ்வளவு தாங்க OPEN INTEREST ...
இனிமேல் டிவியில பாத்தாலும், பேப்பர்ல படிச்சாலும் மேல உள்ள அட்டவணையை வச்சு முடிவு பண்ணிற மாட்டீங்க !!!