Tuesday, January 6, 2009

பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?



சந்தை அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்த பங்கோ பிவோட் புள்ளிக்கு மேல் ஆரம்பித்து தொடர்ந்து அந்த நிலைக்கு மேல் இருக்குமானால் சந்தை காளையின் கட்டுபாட்டில் இருக்கிறது என்று அர்த்தம் ...


சந்தை அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்த பங்கோ பிவோட் புள்ளிக்கு கீழ் ஆரம்பித்து தொடர்ந்து அந்த நிலைக்கு கீழே இருக்குமானால் சந்தை கரடியின் கட்டுபாட்டில் இருக்கிறது என்று அர்த்தம் ...



ரெசிச்டென்ஷ் 2, ரெசிச்டென்ஷ் 3 நிலையை பங்கோ அல்லது சந்தையோ அடையுமானால் அதை “நிறைய வாங்கிய நிலை”யை(OVERBOUGHT CONDITION) அடைந்ததாக அர்த்தம்...இந்த நிலையில் மேலும் வாங்க முற்படுவதை விடுத்து விற்பதற்கு தயாராக வேண்டும்... ( இந்த ரெசிச்டென்ஷ் 2, அல்லது 3 நிலைகளிலிருந்து திரும்பும் பட்சத்தில் தான் விற்க முற்பட வேண்டும் ... ) ஏற்கனவே வாங்கி இருந்தால் விற்று விட்டு வெளியேறி விட வேண்டும்...



சப்போர்ட் 2, சப்போர்ட் 3 நிலையை பங்கோ அல்லது சந்தையோ அடையுமானால் அதை “நிறைய விற்கப்பட்ட நிலை” யை(OVERSOLD CONDITION) அடைந்ததாக அர்த்தம்... இந்த நிலையில் மேலும் விற்க முற்படுவதை விடுத்து வாங்குவதற்கு தயாராக வேண்டும்... ( இந்த சப்போர்ட் 2, அல்லது 3 நிலைகளிலிருந்து திரும்பும் பட்சத்தில் தான் வாங்க முற்பட வேண்டும் ... ) ஏற்கனவே விற்று இருந்தால் வாங்கி விட்டு வெளியேறி விட வேண்டும்...



சப்போர்ட் 1, பிவோட் விலை, ரெசிச்டென்ஷ் 1- இந்த மூன்று நிலைகளையும் மனதில் கொள்வோம்,


இப்போது ரெசிச்டென்ஷ் 1 உடைபட்டு மேல் நோக்கி சந்தை செல்லுமானால், நாம் பங்கை வாங்கி ரெசிச்டென்ஷ் 2 வை இலக்கு விலையாகவும் , ரெசிச்டென்ஷ் 1 க்கு சற்று கீழே நட்ட தடுப்பாகவும் வைத்து கொள்ள வேண்டும் ...( காளையின் ஆதிக்கம் தொடருமானால் ரெசிச்டென்ஷ் 3 ஐ கூட இலக்கு விலையாக வைத்து கொள்ளலாம் )


இதே போல் பிவோட் புள்ளிக்கு மேல் ஆரம்பித்து தொடர்ந்து சந்தை மேல் நோக்கி வணிகமானால், நாம் பங்கை வாங்கி ரெசிச்டென்ஷ் 1 ஐ இலக்கு விலையாகவும் , பிவோட் புள்ளிக்கு சற்று கீழே நட்ட தடுப்பாகவும் வைத்து கொள்ள வேண்டும் ...( காளையின் ஆதிக்கம் தொடருமானால் ரெசிச்டென்ஷ் 2,3 ஐ கூட இலக்கு விலையாக வைத்து கொள்ளலாம் )


ஆனால் பிவோட் புள்ளிக்கு கீழ் ஆரம்பித்து தொடர்ந்து சந்தை கீழ் நோக்கி வணிகமானால், சந்தை திரும்பும் வரை காத்திருக்கவும்...


இப்போது சந்தை சப்போர்ட் 1 ல் திரும்புமானால், பிவோட் புள்ளியை இலக்கு விலையாகவும் , சப்போர்ட் 1 க்கு சற்று கீழே நட்ட தடுப்பாகவும் வைத்து கொள்ள வேண்டும்….


இதே போல் சந்தை சப்போர்ட் 2 ல் திரும்புமானால், சப்போர்ட் 1 ஐ இலக்கு விலையாகவும் , சப்போர்ட் 2 க்கு சற்று கீழே நட்ட தடுப்பாகவும் வைத்து கொள்ள வேண்டும்….



நிபந்தனைகள் :-


(1)இந்த விதிமுறை சந்தை ஆரம்பித்த முதல் அரை மணி நேரத்திற்கும் , கடைசி ஒரு மணி நேரத்திற்கும் பொருந்தாது ...


(2)
சந்தை தொடர் ஏறுமுகமாக இருந்தாலும் , அல்லது தொடர் இறங்குமுகமாக இருந்தாலும் பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் ஒத்து வராது ...

ஆனால் குறைந்த லாபம் வைத்து வெளியேறி விடுபவர்களுக்கு இந்த நிபந்தனை செல்லாது ...


(3)முதலில் இரண்டு, மூன்று நாள் பேப்பர் ட்ரேடிங் செய்து விட்டு களத்தில் இறங்கவும்.


(4)முந்தைய பதிவில் சொன்ன சூத்திரங்களை MICROSOFT EXCELல் போட்டு வைத்து கொண்டால் இன்னும் எளிதாக இருக்கும்...


2 comments:

Unknown said...

hai how are you boss? happy new year....you rocking yaar..this website is useful for all. simply superb..i'm very proud of you because we are from nellai na..All the best very best keep rocking..doing well..and keep touch..

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

Hi,
Can you guide on which is the best platform for online trading?

The charts which you are showing are taken from which trading software/tool/website?