Friday, January 16, 2009

இன்னிக்கு பங்குச்சந்தை ...(16.01.2009)


16.01.02009(வெள்ளி)


நேற்று அமெரிக்க சந்தைகள் தட்டு தடுமாறி பச்சை நிறத்தை தொட்டுள்ளன …தற்போது துவங்கிய ஆசிய சந்தைகள் சற்று உற்சாகமாவே செயல்படுகின்றன ...


கச்சா எண்ணையின் விலை 35 டாலரில் சுற்றி கொண்டு இருக்கிறது ....


நேத்து ஷார்ட் அதிக அளவில் போயிருக்கிற பங்குகள் UNITECH, DLF,ICICIBANK,SATYAM COMPUTER …


2600 புட் ஆப்ஷன் OPEN INTREST அதிகமாயிருக்காம் ... மேலும் 2900 கால் ஆப்ஷன் OPEN INTREST கொறஞ்சு போயிருக்காம் ... அதனால லாப கணக்கு சரி செய்து கொள்ளும் ஒரு இடமாக 2900 இருக்கும் ...

அப்புறம் TULIP TELECOM, NALCO ஸ்பாட்டுக்கும் பியூச்சருக்கும் ரொம்ப இடைவெளி இருக்கு …


TULIP TELECOM,

SPOT –Rs 418.25
FUTURE –Rs 460 (POSITIVE TREND)

NALCO,

SPOT –Rs 180
FUTURE –Rs 166 (NEGATIVE TREND)

இந்த இடைவெளியை பயன்படுத்தி லாபம் எப்படி பார்க்கலாம் என்று தெரிந்தால் சொல்லுங்கள் ???

இன்னிக்கு BAJAJ AUTO,JET AIRWAYS ரிசல்ட்டுங்கோ ...



நிஃப்ட்டி முடிஞ்சது (as on 15.01.2009) : 2737


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 2757


சப்போர்ட் நிலைகள் : 2677,2627,2547


தடுப்பு நிலைகள் : 2817,2887,2947



அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."

Thursday, January 15, 2009

இன்னிக்கு பங்குச்சந்தை ...(15.01.2009)



உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் ....


15.01.02009(வியாழன்)


ரீடெய்ல் சேல்ஸ் நம்பர் எதிர்பாத்ததே விட ரொம்ப எதிர்மறையா வந்ததுனால நேற்று அமெரிக்க சந்தைகள் கவுந்து போச்சு ... ஆசிய சந்தைகளும் அதே வழியில் செல்கின்றன ...


கச்சா எண்ணையின் விலை 37 டாலர்ல இருக்கு ...


மிக பெரிய உயரத்திலேயிருந்து செத்த பூனை விழுந்தா கூட கொஞ்சம் எந்திரிச்சு நிக்குமாம் ...அதை தான் DEAD CAT BOUNCE அப்படின்னு சொல்லுவாங்க ...


நம்ம சந்தையில நேத்து நடந்தது ஷார்ட் கவரிங்ன்னு சொல்றாங்க ... DEAD CAT BOUNCE ன்னு சொல்றாங்க …
மாப்பு வச்சிடாத ஆப்பு ...


ரிலையன்ஸ் குரூப் ஷேர் எல்லாம் நேத்து நல்ல குதியாட்டம் போட்டது ...


கடந்த வாரம வெளிவந்த பணவீக்கத்தை விட இன்று பணவீக்கம் குறைய வாய்ப்பு இருப்பதாக CNBC TV 18 கருத்துகணிப்பு தெரிவிக்கின்றன...(5.91% TO 5.29%)


அப்பு இன்னிக்கு TCSக்கு ரிசல்ட்டான்பா ...


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 14.01.2009) : 2835


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2815


சப்போர்ட் நிலைகள் : 2770,2705,2665


தடுப்பு நிலைகள் : 2875,2920,2980



அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."

Wednesday, January 14, 2009

இன்னிக்கு பங்குச்சந்தை ...(14.01.2009)



14.01.2009(புதன்)

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ...

நேற்று அமெரிக்க சந்தைகள் பச்சை நிறத்திற்கு வர முயற்சி செய்து அதில் சிறிது வெற்றியும் கண்டன.... தற்போது துவங்கிய ஆசிய சந்தைகளும் பச்சை நிறத்திலேயே வணிகமாகிக் கொண்டு இருக்கின்றன ...


கச்சா எண்ணையின் விலை 39 டாலர்ல இருக்கு ...


நேத்தைக்கு துவைத்து எடுக்கப்பட்ட பங்கு ROLTA , வழக்கம் போல வதந்திகளும் , இல்லையென்று கம்பெனி முதலாளி டிவி யில் வந்து கதறுவதும் , மீண்டும் அது பழைய நிலைக்கு திரும்புவதும் வாடிக்கை ஆகி விட்டது.... இன்னிக்கு யாரோ ????


வணிகர்கள் 2700,2800 புட் ஆப்சன் ல இருந்து 2500,2600 புட் ஆப்சனுக்கு தாவி இருக்காங்களாம் … எல்லாம் ஓபன் இன்ட்ரஸ்ட் கணக்கை வச்சி சொல்றாங்க ... இதுலிருந்து நமக்கு என்ன புரியுது !!!


சத்யம் பெயில் அவுட் பிளான் கவர்மென்ட்டுகிட்டே இருக்கு போல இருக்கு ...எதுக்கும் மைன்ட்ல வச்சுக்குவோம்...


இன்னிக்கு HDFC BANK ரிசல்ட்டு , அதனால அதுல என்னதான் நடக்குதுன்னு பாக்கலாம் ….


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 13.01.2009) : 2745


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2755

சப்போர்ட் நிலைகள் : 2705,2675,2625

தடுப்பு நிலைகள் : 2790,2835,2875


அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."


Tuesday, January 13, 2009

பங்குசந்தை பாடல்கள் ... ( ராமலிங்க ராஜு பாடினால் !!! )

முன்கதை சுருக்கம் :

சத்யம் கம்ப்யூட்டர் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு அவர்கள், தான் செய்த தவறை நினைத்து கொஞ்சம் பீல் பண்ணி பாடினா எப்படி இருக்கும்... இதோ ஒரு உல்டா பாட்டு .....

"FRAUD" அப்படிங்கிற வார்த்தை அவரை ரொம்ப பாதிச்சிருச்சாம் …


குறிப்பு :

இசையுடன் படிக்க ... இந்த லிங்கை பயன்படுத்துங்கள்!!!


http://www.musicplug.in/songs.php?movieid=4923


பல்லவி :



வார்த்தை ஒண்ணு ... வார்த்தை ஒண்ணு ... கொல்லப்பாக்குதே ...

அது வாளெடுத்து ... வாளெடுத்து ... வெட்டப்பாக்குதே ....

பல்லவி :

வார்த்தை ஒண்ணு ... வார்த்தை ஒண்ணு ... கொல்லப் பாக்குதே ...

அது வாளெடுத்து வாளெடுத்து வெட்டப்பாக்குதே ....

நான் திமிரா செஞ்ச காரியம் ஒண்ணு தப்பா போனதே ...

என் SEBI இப்போ எனக்கு எதிரா போனதே ...

கம்பெனி எனக்கு சொந்தமில்லை என்று சொன்னவுடன்

மனசு வேர்த்து போச்சே …

என் நிழலில் கூட இப்போ ரத்தம் கொட்டுதடி,

இதயம் சுருங்கி போச்சே ...

பல்லவி :

வார்த்தை ஒண்ணு ... வார்த்தை ஒண்ணு ... கொல்லப்பாக்குதே ...

அது வாளெடுத்து வாளெடுத்து வெட்டப்பாக்குதே ...

சரணம் :

BALANCE SHEET ல என்ன பண்ணேன்ணு தெரியல ...

என் ஆடிட்டருக்கு சொல்லியும் கொடுக்கலை ...

மொத்தத்துல இப்ப எல்லாருமே உள்ள ...

செஞ்சதுக்கு தண்டனைய ஏத்துகிட்டேன் ....

இன்வெஸ்டார் ரத்தத்துல துக்கத்தை நான் தெளிச்சிட்டேன் ...

மக்கள் மனசில அரளிய விதச்சிட்டேன் ...

அட்டை கத்தி தான்னு நான் ஆடிப்பாத்தேன் விளையாட்டு ...

வெட்டுகத்தியாக, அது மாறி இப்ப வினையாச்சு ...

குடும்பத்து மேல பழிகள் வந்து மூடியதே ...

நான் ஆடுன ஆட்டத்துல என் கம்பெனிய இப்ப காணலியே ...

பல்லவி :

வார்த்தை ஒண்ணு ... வார்த்தை ஒண்ணு ...

சரணம் :

படைச்சவன் போட்ட முடிச்சிது ...

என் கழுத்துல மாட்டி இருக்குது ...

நினைக்கையிலே மனசு தான் பதறுது ...

கனவுல நடந்தது போல இருக்குது ...

விடிஞ்சா அதுவும் மறையுது ...

முகமே சோகமா உறையுது ...

சூர தேங்காய் போல நான் சுக்கு நூறா ஒடஞ்சனே ...

சொக்கபனை போல தீயில வெந்தனே ...

கோர்ட்டுக்கு… போகையிலே ஈரக்குல வேகிறதே ...

களிசோறு திங்கயிலே செஞ்ச தப்பு உறைக்குதே ...

பல்லவி :


வார்த்தை ஒண்ணு ... வார்த்தை ஒண்ணு ... கொல்லப்பாக்குதே ...

அது வாளெடுத்து வாளெடுத்து வெட்டப்பாக்குதே ....

நான் திமிரா செஞ்ச காரியம் ஒண்ணு தப்பா போனதே ...

என் SEBI இப்போ எனக்கு எதிரா போனதே ...

கம்பெனி எனக்கு சொந்தமில்லை என்று சொன்னவுடன்

மனசு வேர்த்து போச்சே …

என் நிழலில் கூட இப்போ ரத்தம் கொட்டுதடி, இதயம் சுருங்கி போச்சே ...


இன்னிக்கு பங்குச்சந்தை ...(13.01.2009)


13.01.02009(செவ்வாய்)



நேத்தும் அமெரிக்க சந்தைகள் ரத்த கலருல தான் முடிச்சிருக்காங்க!!! காரணம் கேட்டா, உலகத்தின் மூன்றாவது மிகப்பெரிய அலுமினிய கம்பெனி ALCOA INC ,1.19 பில்லியன் டாலர் நஷ்ட கணக்கு காமிச்சிருக்கு ...அதும் இல்லாம கச்சா எண்ணையின் விலை குறைவும் இதுக்கு ஒரு காரணமாம் ...


ஆசியாவும் அமெரிக்க சந்தை வழியிலே போய்கிட்டு இருக்காங்க ...


கச்சா எண்ணையின் விலை 37-38 டாலர்ல இருக்கு ...


நேத்தைக்கும் DLF க்கு வந்த மாதிரி ஒரு வதந்தி ... சத்யமுக்கு SBI , லோன் 500 கோடி கொடுத்தாக ...பாவம் அந்த பிள்ளையையும் (பங்கையும்) போட்டு அடிச்சிட்டாங்க ... அது பொய்யின்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் கொஞ்சம் தேத்தி விட்டாங்க ...ஆனா ஆக்ஸிஸ் பேங்குக்கு ஏதோ லிங்க்கு… லிங்க்கு… இருக்கிற மாதிரியே தெரியுது... நமக்கு எதுக்குப்பா இந்த ஊர் வம்பு ...


நம்ம ரிலையன்ஸ் கேப்பிட்டலை நிஃப்ட்டியில சேத்தாலும் சேத்தாங்க… அய்யா 52 வார கொறஞ்ச பட்ச விலைக்கு பக்கத்துல போய்ட்டாரு...நான் இங்க கூவுறது அணிலுக்கு கேக்கும்மா ....


நேத்து சத்யம் கம்ப்யூட்டர் 44 சதவீதம் ஏறிச்சாம் ... அதுக்கு நல்ல செய்தி வரும்கிற நம்பிக்கைல இல்லையாம் ...எதோ ஷார்ட் கவரிங்குன்னு பேசிக்கிறாங்க ... எது எப்படியோ அந்த பிள்ளைக்கு(பங்குக்கு) ஒரு நல்ல வாழ்வு கொடுக்க பாருங்கப்பா...


இன்னிக்கு இன்போசிஸ் ரிசல்ட்டு ... அதனால எல்லாரும் ரெண்டு காதையும் ஷார்ப்பா தீட்டி வச்சிக்கோங்க ... நீங்க சொல்ற வார்த்தைலதான் இன்னிக்கு நம்ம சந்தையோட உயிரே இருக்கு ... நேத்து நீங்க வந்த வரத்தை பாத்தா எனக்கு என்னமோ டவுட்டாவே இருக்கு ...


ரிஸ்க்கு எடுக்கிறது எனக்கு ரஸ்க்கு சாபிடற மாதிரின்னு சொல்லறவங்க வேணும்னா சேதி உள்ள பங்கு பக்கம் போவாங்க !!! அட நீங்க எப்படி???


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 12.01.2009) : 2773


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2795

சப்போர்ட் நிலைகள் : 2725,2675,2605

தடுப்பு நிலைகள் : 2845,2920,2965


அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."



குறிப்பு :

இங்கே சொல்வது சந்தை நிலவரங்கள்.... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல... அல்ல... அல்ல...




Sunday, January 11, 2009

இன்னிக்கு பங்குசந்தை ... (12.01.2009)


12.01.02009(திங்கள்)


வேலை இல்லாதவங்க எண்ணிக்கை அமெரிக்காவுல அதிகமாயிட்டாங்களாம் .... அதனால வெள்ளி அன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் ரத்த கலருல முடிஞ்சிடுச்சு ....


இன்னிக்கு ஜப்பானுக்கு லீவாம் ...மற்றபடி இப்போ நடக்கிற ஆசிய சந்தையில ஒரு பெரிய ஏற்றத்தாழ்வு இல்ல .... நம்ம மார்க்கெட் ஆரம்பிச்சா தான் சூடு கிளம்பும் போல இருக்கு ...


கச்சா எண்ணையின் விலை 40-41 டாலர்ல இருக்கு ...


நிஃப்ட்டிக்கு ரிலையன்ஸ் கேப்பிட்டல் வரப்போராருன்னு தெரிஞ்சும் எறக்கி விட்டாங்க ...இன்னிக்கும் இது தொடர்ந்துசுன்னா அணிலுக்கு அவமானம் ...ஆனா சன் பார்மா ஏறி இருக்கான் ...


இன்னிக்கு எக்ஸைட் இன்டஸ்ட்ரீஸ் Q3 ரிசல்ட் , அதனால அதுல என்னதான் நடக்குதுன்னு பாக்கலாம் …. ஆக்ஸிஸ் பேங்க் Q3 ரிசல்ட் வந்துச்சு , நல்லா தான் இருந்துச்சு ... ஒரு சின்ன விசயத்தினாலே (NPA) எறக்கி விட்டுட்டாங்க...


அப்புறம் இன்னிக்கு IIP நம்பர் வருதாம் ... -0.36% வரும்னு எதிர்பாக்கிறாங்க ... நம்மாளுங்க சும்மாவே வெறும் வாயை மெல்லுவானுங்க ... இன்னிக்கு வாய்க்கு எதாவது கிடச்சா சும்மாவா விடுவானுங்க.... அதனால கொஞ்சம் கேர்புஃல்லா இருக்கனும் ...


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 09.01.2009) : 2873


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2870


சப்போர்ட் நிலைகள் : 2815,2750,2690


தடுப்பு நிலைகள் : 2930,2990,3050


அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."

சுப்பன்,ரங்கன் பங்கு சந்தை அரட்டை ...(05.01.2009 - 09.01.2009)




ரங்கன் :

என்ன சுப்பா எப்படி இருக்கே ....பொங்கலுக்கு எதாவது இனிப்பான சேதி இருக்கா ...


சுப்பன் :

அட போ ரங்கா இனிப்பான சேதியே வேண்டாம் ....கசப்பா எதாச்சும் வராம இருந்தா சரி தான் ... போன வாரம் ஒழுங்கா போய்கிட்டிருந்த மார்கெட்டை சத்யம் கம்ப்யூட்டர் தலையெழுத்தையே மாத்திருச்சு ...


ரங்கன் :

இன்னா பண்றது...ராமலிங்க ராஜு பண்ண தப்பால நம்ம இந்தியாவே தலை குனிஞ்சு நிக்குது ... நம்ம அரசாங்கம் நல்ல முடிவோட வந்தாத்தான் காப்பாத்த முடியும் ... இப்போதைக்கு இயக்குனர்களை மட்டும் பாத்து வச்சிருக்காங்க...

அவரு செஞ்ச காரியத்த பாத்தா ராஜேஷ்குமார் திகில் நாவல் படிச்சா மாதிரி இருக்கு... இன்னும் விஷயம் முழுசா வெளிய வரலை ...வந்தா இன்னும் எங்கெங்க கொண்டு போய் விட போகுதோ ...


சுப்பன் :

இங்க தான் இவ்வளவு பிரச்சனைன்னு பாத்தா... லாரி வேலை நிறுத்தம், பெட்ரோல் கிடைக்காம மக்கள் தவிக்கிறது .... கெட்ட நேரம் வந்தா ஒட்டகத்துல போனாலும் நாய் மூக்கை கடிக்கும்னு சொல்லுவாங்க ....அது மாதிரி இருக்கு....


ரங்கன் :

வர்ற செவ்வாய் கிழமை இன்போசிஸ் ரிசல்ட் வருது ... அவுக வயத்துல பால வார்த்தாதான், நம்ம பங்கு சந்தைக்கு கொஞ்சம் உயிர் வரும் ...
இப்போ எல்லாம் பெரிய கம்பெனில பெருந்தலைகள் சும்மா தும்முனா கூட விஷயம் வேற மாதிரி வெளிய வருது...


சுப்பன் :

எத சொல்ற ...DLF மேட்டர் தானே ...


ரங்கன் :

அட ஆமாப்பா ... சொந்த அக்கௌன்ட்ல வச்சிருந்த 1 லட்சம் சத்யம் ஷேரை வித்ததுக்கு .... சம்பந்தம் இல்லாம,விஷயம் வேற மாதிரி வந்து 225 ரூபாய்க்கு திரிஞ்சுட்டு இருந்தவனை 144 ரூபாய்க்கு கொண்டு வந்து வச்சிட்டாங்க...அப்புறம் அந்த மொதலாளி டிவில வந்து கதறுனதுக்கு அப்புறம் தான் பழைய நிலைமைக்கு வந்துச்சு....

இப்போ இருக்கிற நிலமைய பாத்தா , ரொம்ப மோசமா இருக்கு ...நம்ம அரசாங்கம் எதாவது எலும்பு துண்டை போட்டுகிட்டே இருந்தாதான் நம்ம சந்தை தப்பிக்கும்...


சுப்பன் :

இப்போ எல்லாம் நம்ம மார்கெட்டை பாத்தாலே பயம்மா இருக்கு... தீடீர்னு ஏறுது, தீடீர்னு எறங்குது...சரியா சிக்கலைன்னா சின்னா பின்னம் ஆய்டுவோம் போல இருக்கு ....


ரங்கன் :

அப்பு இதெல்லாம் கோடிகளை கைல வச்சுட்டு விளையாடுரானுங்க ... அவுக வழி தெரிஞ்சா அவுகளோடயே போய்ட்டு வா ... இல்லையா மூடிட்டு பாத்துகிட்டே இரு...நீ தெருகோடிக்கு போயிறாதே...


சுப்பன் :

சரி பொங்கல் லீவுக்கு நம்ம நட்புங்க எல்லாம் வந்துட்டாங்க....ஆனா நமக்கு தான் லீவு இல்ல ...


ரங்கன் :

அட போ சுப்பா ...வாரத்துல ரெண்டு நாள் லீவையே ஓட்ட முடியல ...இதுல வேற இன்னும் லீவு விட்டா... தாங்க முடியாதுடா சாமி...

அப்புறம் முக்யமான விஷயம் 2720-2750 அப்படிங்கிற சப்போர்ட்டை நிபிட்டி ஒடைக்காத வரைக்கும் பிரச்சனை இல்ல ....அதனால கொஞ்சம் பாத்து டீல் பண்ணு...

இந்த வாரம் 2690,2750,2820,2880,2930,2990,3050 இதையும் மனசுல வச்சுக்குவோம்...


சுப்பன் :

ஆமா அப்படியே வரிசையா எல்லா நம்பரையும் சொல்லிடு...


ரங்கன் :

சரிடா ரொம்ப டைம் ஆச்சு... அடுத்த வாரம் பாக்கலாம் ...

ஹாப்பி பொங்கல் சுப்பா...


சுப்பன் :

ஸேம் டு யு டா.....


(சுப்பன்,ரங்கன் அரட்டை தொடரும்.......)


சென்ற வார பங்குச்சந்தை ...(05.01.2009 - 09.01.2009)


INDICES ...


NIFTY (2873) -5.7%

SENSEX (9406) -5.5%

BSE IT (2132) -6.7%

BANKEX (5381) -5.2%

BSE MIDCAP (3121) -8.0%

BSE SMALLCAP (3556) -8.1%


வென்றதில் முதல் ஐந்து இடம் ...


ANDHRA CEMENTS (27) 26%

GUJ.NRE COKE (18) 13%

GRASIM IND (1361) 12%

NILE (62) 12%

INDIA CEMENTS (114) 11%


தோற்றதில் முதல் ஐந்து இடம் ...


SATYAM COMPUTERS (24) -87%

LANCO INFRA (110) -34%

SHOPPER STOP (131) -31%

TANLA (59) -31%

I.C.S.A.INDIA (103) -28%