திங்கள் அன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் கொஞ்சம் சிவப்பு நிறத்தை காட்டியுள்ளன....ஏன்னா அங்க வாகன விற்பனை 36 சதவீதம் சரிஞ்சு போச்சாம் .....மேலும் முதலீட்டாளர்கள் கொஞ்சம் லாபத்தை வெளிய எடுத்துட்டாங்கலாம்.... தற்போது தூவங்கிய ஆசிய சந்தைகள் மதில் மேல் பூனை போல் இருக்கு...
கச்சா எண்ணையின் விலை 49 டாலருக்கு பக்கத்தில் சுற்றி கொண்டு இருக்குது...
அப்புறம் நேத்து நம்ம வெளிநாட்டு பயலுக லீவு முடிச்சுட்டு வந்துட்டாங்க போல இருக்கு .... சும்மா 470 கோடி வாங்கி இருக்கானுங்க ... நம்ம உள்ளுரு பயலுகளும் சும்மா 221 கோடி வாங்கி இருக்கானுங்க....(In cash)
வரப்போகிற காலாண்டு முடிவுகள் ஒன்னும் அவ்வளவு நல்லா இருக்காதுன்னு பேசிக்கிறாங்க....இதுவும் நம்ம வெளிநாட்டுகார பயலுகளுக்கு தெரியாமலா இருக்க போவுது….
நிஃப்ட்டி 3000 புட் ரைட்டிங் நடந்து இருக்காம்...அதனால 3000 அப்படிங்கிறது ஒரு ஸ்ட்ராங் சப்போர்ட் ஆய்டுமாம்...
நேற்றைய வர்த்தகத்துல RPL,DLF,TATASTEEL,UNITECH,SATYAM COMPUTER இதை எல்லாம் ஷார்ட் போய் வச்சு இருக்காங்கலாம்... அதனால வாங்கும் போது கொஞ்சம் கேர்புல்லா இருங்க .....
நேற்றைய சிங்கம் MUNDRA PORT சும்மா 18 சதவீதம் ஏறி இருக்கான்பா…
இத எல்லாம் எதுக்கு சொல்றதுனா ,மைன்ட்ல வச்சுகத்தான்!!!!
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 05.01.2009) : 3121.45
இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்
பிவோட் புள்ளி : 3105
சப்போர்ட் நிலைகள் : 3075,3025,3000
தடுப்பு நிலைகள் : 3150,3180,3225
No comments:
Post a Comment