Monday, January 5, 2009
இன்று ஒரு தகவல்...05.01.2009(திங்கள்)
வெள்ளி அன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் ஒபாமாவின் ஊக்கதொகை அறிவிப்பினால் மேலுயர்ந்தது என்று சொன்னால் மிகையாகாது.... தற்போது துவங்கிய ஆசிய சந்தைகள் விடுமுறை முடிந்து வந்ததால் அந்த சுறுசுறுப்பு இருக்கு.....
கச்சா எண்ணையின் விலை 47 டாலரை தொட்டு விட்டது......
என்ன தான் ரிசர்வ் பேங்க் ரெப்போ ரேட், ரிவெர்ஸ் ரெப்போ ரேட் கட் பண்ணினாலும் நம்ம மக்களோட வாங்கும் திறன் அதிகமாகணும் ....அப்ப தான் பணபுழக்கம் அதிகரிக்கும் ....ஆனா இப்போ நம்மாளுங்க பயந்து பயந்துலா வேல பாக்கான் , இன்னிக்கு போக சொல்லுவாங்களோ அல்லது நாளைக்கு போக சொல்லுவாங்களோ....புள்ள குட்டிங்களுக்கு சேத்து வச்சதை வீணா செலவு பண்ண கூடாதுன்னு முடிவோட இருக்கறப்போ எங்கிருந்து பணபுழக்கம் வரும்... மொதல்ல வேலைக்கு கேரன்டி கொடுங்கப்பா .....
ரெண்டு ஊக்க தொகையும் சேர்த்து ஒரு 40,000 கோடி ரூபா பணபுழக்கம் கிடைக்குமாம் .... நம்ம சந்தையோட ஒரு நாள் டர்ன் ஓவரே 50000-70000 கோடி ரூபா….. இது எந்த மூலைக்கு போக போகுதோ ????....
இன்னிக்கு நம்ம மார்க்கெட் சந்தோசமாத்தான் ஓபன் ஆகும் ....ஆனா அது நிலைகுமான்னுதான் பாக்கணும்....
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 02.01.2009) : 3046.75
இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்
பிவோட் புள்ளி : 3050
சப்போர்ட் நிலைகள் : 3020,2990,2960
தடுப்பு நிலைகள் : 3080,3105,3135
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment