Thursday, January 8, 2009

பங்கு சந்தை பாடல்கள் ...



முன்கதை சுருக்கம்...

நம்ம பய ஒருத்தன் ஷேர் மார்கெட்ல இருக்கான்...அதுக்கு அவுங்க அம்மா செம எதிர்ப்பு.... இத நம்ம பய அவன் காதலிகிட்டே சொல்லி பொலம்புறாரு ....ஷேர் மார்கெட்டை தெரியாம பாத்துட்டாராம்…அவரு பாடுற பாட்டையோ (படுறபாட்டையோ) ஒரு உல்டா பாட்டுலே சொல்றேன்... (திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் பாட்டு உல்டா...)


காதலன் :

தெரியாம பாத்துபுட்டேன்...ஒன்னை தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன்....

ஓ...ஓ… தெரியாம பாத்துபுட்டேன்...ஒன்னை தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன்....

என்ன நடக்க போகுதோ... (ஹோ ஹோ) ...எங்கு முடிய போகுதோ... (ஹோ ஹோ)...தொல்லையா ஆச்சுடி ,தூக்கமே போச்சுடி ...


காதலி:


தெரியாம பாத்துபுட்டேன்...ஒன்னை தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன்....

என்ன நடக்க போகுதோ... (ஹோ ஹோ) எங்கு முடிய போகுதோ (ஹோ ஹோ)...தொல்லையா ஆச்சுடா ,தூக்கமே போச்சுடா ...


காதலன் :

ஹிட்லர் போல எங்க அம்மா, (வேலைக்கு போக சொல்லி ) ரொம்ப ஹிம்சை பண்ணுறாளே என்னை...


காதலி:

ரொம்ப பாசம் தான் ...ஒன் மேல தான்... அவ உயிரே நீயின்னு தெரியாதா ....அத சொன்னா ஒனக்கு புரியுமா...


காதலன் :

சொல்லு சொல்லு… என் செல்லம் செல்லம்...நீ சொல்லா காட்டி நான் தூங்கா செல்லம்


காதலி:

நிஃப்ட்டி கொஞ்சம் ஆட்டம் போட்டா ஆடிப்போயிடுவா உங்க அம்மா, உனக்கு நஷ்டம் என்றால் NSE,BSE கூட கொளுத்துவா


காதலன் :

தெரியாம பாத்துபுட்டேன்...ஒன்னை தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன்....


காதலி:

ஷேர் மார்க்கெட் என்பது ஒரு கோட்டை ...கதவு தொறந்துட்டா வேட்டை ....


காதலன் :

உள்ள போவோமோ ... வெல்லம் கசக்குமா ...நான் இரும்புல செஞ்ச எறும்புடி..மார்க்கெட் இருக்கிற வரைக்கும் குளறுபடி...


காதலி:

வேணாம் வேணாம்… என் செல்லம் செல்லம்..... அம்மா பாத்தா ஒன்னை திட்டும் திட்டும் ...


காதலன் :

ஷேர்மார்க்கெட் என்ன பிஸ்தா பருப்பா , நான் அதுல இருக்கிறது எங்கம்மாக்கு ஏண்டி வெறுப்பா…

தெரியாம பாத்துபுட்டேன்... அதை தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன்....

என்ன நடக்க போகுதோ... (ஹோ ஹோ) எங்கு முடிய போகுதோ (ஹோ ஹோ)...தொல்லையா ஆச்சுடி ,தூக்கமே போச்சுடி !!!!



நன்றி ...


No comments: