சரி டென்ஷன் நிறைந்த இந்த சந்தையை கொஞ்சம் ரிலாக்ஸாக சொல்வோம் என்று ஆரம்பித்தது தான் இந்த ப்ளாக் …
ரெண்டு வாரத்திற்கு முன்பு சுற்றுலா சென்று இருந்த போது என் கூட்டாளி ஒரு கேள்வி கேட்டான் ....
நானும் சொன்னேன் ஒரு நாளைக்கு 100-120 பேராவது என் ப்ளாக் பார்கிறாங்க ... நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை அப்படின்னு நானும் விட்டு கொடுக்காம பேசினேன் ...
தினமும் ஒரு மணி நேரமாவது செலவழித்து ப்ளாக் அப்டேட் செய்றியே ... யாராவது ஒருத்தர் ஒரு நிமிடம் செலவழித்து உனக்கு ஒரு “ஹாய்” சொல்றாங்களா ...
ஆக்கப்பூர்வமா எழுதினா நாலு பேர் வந்து “GOOD , KEEP IT UP”ன்னு சொல்லிட்டு போறாங்க …மத்த நேரம் எல்லாம் ஒரு நாதி இருக்கா !!!