Thursday, April 9, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(09.04.2009)

நேற்றைய பங்குசந்தை (08.04.2009)09.04.02009(வியாழன்)

நேற்று மேடு பள்ளங்களுடன் பயணித்த அமெரிக்க சந்தைகள் கடைசியில் POSITIVE ZONEல் முடிவடைந்துள்ளது … ஆசிய சந்தைகளில் தலா 1.5 -2.0 சதவீத ஏற்றம் தென்படுகிறது ...


சிங்கப்பூர் நிஃப்ட்டியாரும் தற்போது அதிகபட்சமாக 3410 வரை சென்றுள்ளார் ...


இன்னிக்கு IIP மற்றும் INFLATION RESULT வருகிறது …அதனால் பன்னிரெண்டு மணி வரை கொஞ்சம் அப்படியும் இப்படியுமா இருக்கும் …


நேத்து வெளிநாட்டு பயலுக சும்மா பூந்து விளையாடிட்டாங்க …
இருக்கிற காசுக்கு கூவுங்கடான்னா OVERஆ கூவுரானுங்க ...


நம்ம உள்ளூறு பசங்க MIDCAP பக்கம் போகாம ,LARGE CAP (NIFTY) பக்கமா மட்டும் சுத்திட்டு இருக்காங்களாம் !!!


200 DAY EMA , 3400 க்கு பக்கத்தில் இருக்கிறது ... இதை சந்தை எப்படி எதிர் கொள்கிறது என்று இன்னிக்கு தெரிந்து விடும் !!!


நேத்து OPEN INTEREST வச்சு கணக்கு பாத்தா கணக்கு TALLY ஆக மாட்டேங்குது …3300 CALL OPTION ல PACK UP நடந்திருக்கு , 3500 CALL OPTION , 3200 PUT OPTION நல்லா ஆக்டிவா இருக்கு ...இப்படிப்பட்ட சூழ்நிலையில் சொல்லிக்கிறது இன்னான்னா ... ,
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 08.04.2009) : 3343


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 3285

தடை நிலைகள் : 3415,3490,3624

தாங்கு நிலைகள் : 3210,3075,3000


பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.htmlஒரு நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது ... பார்த்து … படித்து தெரிந்து கொள்ளவும் ...

Wednesday, April 8, 2009

என்னோட பதிவு புண்படுத்தி இருந்தால் ... மன்னித்து கொள்ளவும் !!!

நேற்று இட்ட பதிவு யார் மனதையும் புண்படுவதற்காகவும் போட்ட பதிவு இல்லை ...அது பங்குச்சந்தை பற்றிய ஜோக்குகள் ... ஆங்கிலத்தில் உலா வந்ததை தான் தமிழில் மொழி பெயர்த்து ஒரு எதுகை மோனையுடன் போட்டேன் ...


சங்கரன்கோவில் அருண் ரொம்ப FEEL பண்ணிட்டாரு ...ஜோக்குன்னா சிரிங்க அதை விட்டுட்டு ஆராய்ச்சி பண்ணாதீங்க ...இது வரைக்கும் எல்லா விசயத்தையும் அப்படிதானே சொல்லிக்கிட்டு இருக்கேன் ...எனக்கு யார் மீதும் எந்த கோபமும் கிடையாது ... அனுபவமே பாடம் என்ற வழியில் சென்று கொண்டிருக்கிறேன் ... முதுகுல குத்துற பழக்கம் திருநெல்வேலிகாரனுக்கு கிடையாது ...

சொன்னது CORRECT ,ஆனா சொன்ன நேரம் தான் தப்பா போச்சு ...வந்து நேர்ல பேசிட்டுபோன நீங்களே இப்படி நினைச்சா மத்தவங்க என்ன நினைச்சிருப்பாங்க !!!


அதுக்கும் மேல நீங்க தப்புன்னு நினைச்சிங்கன்னா அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் ...

"உன்னோட உயர்வுக்கு, உன்னோட வியர்வை …

என்னோட உயர்வுக்கு, என்னோட வியர்வை …

யாரோட உயர்வையும் யாராலையும் தடுத்து ... நிறுத்த முடியாது !!!"இதாங்க நம்ம PRINCIPLE ...நேற்றைய பங்குசந்தை (06.04.2009)இன்னிக்கு பங்குசந்தை ...(08.04.2009)நிஃப்ட்டி முடிஞ்சது (as on 06.04.2009) : 3257

இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 3255


தடை நிலைகள் : 3300,3350,3395


தாங்கு நிலைகள் : 3210,3165, 3115பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.htmlஒரு நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது ... பார்த்து … படித்து தெரிந்து கொள்ளவும் ...

Tuesday, April 7, 2009

பத்தே நாளில் பத்து லட்சம் சம்பாதிப்பது எப்படி !!!

பத்தே நாளில் பத்து லட்சம் சம்பாதிப்பதற்கு ஒரே வழி பங்குசந்தைதான் !!!


இனி இதை சம்பாதிக்க என்ன செய்ய வேண்டும் என்று நம்ம அண்ணன்

“நாய் சேகர்” சொல்லுவார் ...

சும்மா ஒரு 25 லட்சம் எடுத்துக்கிட்டு பங்குசந்தைக்கு வாங்க ... பங்குகளை வாங்குங்க ... பத்து நாள் மட்டும் பொறுத்திருங்க ... நீங்க போட்ட முதல் பத்து லட்சம் ஆயிடும்... எடுத்துக்கிட்டு போய்க்கிட்டே இருங்க !!!


இதை விட EASY யான வழி எனக்கு தெரியலங்க ...
"ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக வேண்டுமா !!! "

அதுக்கும் கைவசம் IDEA இருக்கு ... பின்னூட்டம் சொல்றவங்களுக்கு மட்டும் தனியாக சொல்லப்படும் ...

Monday, April 6, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(06.04.2009)

நேற்றைய பங்குசந்தை (02.04.2009)06.04.02009(திங்கள்)

வியாழன் அன்று அமெரிக்க சந்தைகள் சரியான ஏற்றம் !!! வெள்ளியன்று சுணக்கதுடன் ஆரம்பித்து POSITIVE ZONEல் முடிவடைந்தது ... ஆசிய சந்தைகளும் இந்த ஓட்டத்தை நிறுத்தாமல் சென்று கொண்டிருக்கின்றன ...


சிங்கப்பூர் நிஃப்ட்டியாரும் தற்போது 3300ல் நிலைப்பெற்று உள்ளார் …


வியாழக்கிழமை வெளிநாட்டு பயலுக சும்மா பூந்து விளையாடிட்டாங்க ...மார்ச் 31 ந்த் தேதி வித்தத்துக்கு சேத்து வாங்கி பூட்டாங்க ....


வெளிநாட்டு பயலுக 1615 கோடி NIFTY FUTUREல் வாங்கி இருந்தாலும், CHANGE IN OEN INTEREST பார்த்தீங்கன்னா 3.96% …உள்ளூறு பசங்க லாபத்தை புக் பண்ணிட்டாங்க போல ... ஒருவேளை மார்க்கெட் இறங்கிச்சுன்னா தூக்கி விட வருவாங்களோ என்னமோ !!!


PUT CALL RATIO 1.67 ன்னு இருக்காம் ... 1.7 - 1.8வந்துச்சுன்னா PROFIT BOOKING இருக்கும்ன்னு பேசிக்கிறாங்க ...


அப்புறம் முக்கியமான விஷயம் ... வியாழக்கிழமை 3100 PUT, 3400 CALL ,WRITING பண்ணி வச்சு இருக்காங்களாம் ...


இப்படிப்பட்ட சூழ்நிலையில் சொல்லிக்கிறது இன்னான்னா ... ,நிஃப்ட்டி முடிஞ்சது (as on 02.04.2009) : 3211

இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 3165

தடை நிலைகள் : 3275,3335, 3440

தாங்கு நிலைகள் : 3105,3000,2940


பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.html


ஒரு நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது ... பார்த்து … படித்து தெரிந்து கொள்ளவும் ...