Friday, April 24, 2009
SORRY TO SAY !!!
Thursday, April 23, 2009
இன்னிக்கு பங்குசந்தை ...(23.04.2009)
23.04.02009(வியாழன்)
நேற்று GAP DOWN ஆக துவங்கிய அமெரிக்க சந்தைகளில் உற்சாகம் தொற்றிக்கொண்டு மேலுயரத் துவங்கியது இறுதியில் போன்ற GM AND MORGAN STANLEY செய்திகளால் சிவப்பு வண்ணத்தில் முடிந்தது !!!
தற்போது துவங்கிய ஆசிய சந்தைகள் கலப்படமாக காணப்படுகின்றன (பச்சையும் ,சிவப்பும் கலந்து)
சிங்கப்பூர் நிஃப்ட்டியாரும் தற்போது குறைந்தபட்சமாக 3315.5 வரை சென்றுள்ளார் ...
நேத்து வெளியூர் பயலுக CASH MARKETல் ரொம்ப கம்மியா வித்து இருந்தாலும் NIFTY FUTUREல போட்டு தாளிச்சுட்டானுங்க !!!
நேத்தும் TURN OVER அமோகம் !!!
இன்னிக்கு தலை (RELIANCE INDUSTRIES) ரிசல்ட்டோட வர்றாரு ... அதனால உஷாரா இருந்துக்கோங்க !!!
INFLATION வேற “0”விலிருந்து (–VE)ஆக எதிர் பாக்கிறாங்க !!!( ரெண்டு வாரமா அப்படி எதிர்பாத்து நடக்கலை ... ஏன்னா INFLATIONக்குள்ளே அரசியல் புகுந்துடுச்சுன்னு சொல்லிக்கிரானுங்க !!!)
இன்னிக்கு ரிசல்ட்டு வரும் மற்ற முக்கிய நிறுவனங்கள் RPL, RNRL,RPOWER,REL.INFRA,IDEA,BAJAJHIND,HCLINFOSYS,HDFC BANK, LICHOUSING…இந்த பங்கை TRADING பண்றவங்க எல்லாம் ALERTஆ இருந்துக்கோங்க !!!
நேத்து 3300 CALL OPTION WRITING பண்ணியும் 3400 PUT OPTION ல PROFIT BOOKING ம் நடந்து இருக்கு !!!
இதுவரைக்கும் நிஃப்ட்டியை 181 புள்ளிகள் இறக்கி இருக்கானுங்க (வாழைப்பழத்துல ஊசி ஏத்துனா மாதிரி நைசா இந்த வேல நடந்து இருக்கு !!!)
இன்றைய தமாசு …
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 22.04.2009) : 3330.30
இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்
பிவோட் புள்ளி : 3345
தடை நிலைகள் : 3390,3445,3490
தாங்கு நிலைகள் : 3285,3240,3180
“
பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...
http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.html
Wednesday, April 22, 2009
நானும் பங்குசந்தையும் !!!(இருவர்)
இருவர் படத்தில் வரும் பாடல் (கவிதை) வரிகளின் ஒரு உல்டா …
உல்டா சரியான்னு CHECK பண்ண இங்கே சொடுக்குங்க !!!
http://www.musicplug.in/songs.php?movieid=372
பங்குசந்தையில் நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்,
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே !!!
தொண்ணுறு நிமிடங்கள் பங்குகள் வாங்கி வைத்த காலம் தான் ...
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கணக்குதடி !!!
பார்வையிலே சில நிமிடம் , பயத்தோடு சில நிமிடம் ,
நஷ்டமடைந்தபடி கண்ணீரில் சில நிமிடம் !!!
டெக்னிக்கலே பாராமல் எல்லா பங்குகளையும் வாங்கி
குவித்த மோகத்தில் சில நிமிடம் !!!
பங்குசந்தையில் நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்,
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே !!!
எது லாபம் எது நஷ்டம் இருவருக்கும் தோன்றவில்லை !!!
அது 9.55 AM ம்மா 2.30 FACTOR ரா அதை பற்றி அறியவில்லை !!!
யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை !!!
இருவருமே தொடங்கி விட்டோம் , இது வரைக்கும் கேள்வி இல்லை !!!
அச்சம் களைந்தேன் ஆசையை நீ அணைத்தாய் !!!
பணத்தை இழந்தேன் லாபத்தை நீ கொடுப்பாய் !!!
கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தால் ...
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி !!!
பங்குசந்தையில் நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்,
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே !!!
பங்குசந்தையில் நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்,
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே !!!
இன்னிக்கு பங்குசந்தை ...(22.04.2009)
நேற்றைய பங்குசந்தை (21.04.2009)
22.04.02009(புதன்)
நேற்று TECHNOLOGY பங்குகள் எதிர்பார்த்ததை விட நல்ல EARNINGS காண்பித்ததால் சுணக்கமாக துவங்கிய அமெரிக்க சந்தை முடிவில் தலா இரண்டு சதவீதம் மேலேறி முடிந்தது !!!
தற்போது துவங்கிய ஆசிய சந்தைகளில் சுறுசுறுப்பு இல்லை !!!மப்பு அடிச்சிட்டு மல்லாக்க கவுந்த மாதிரி இருக்காங்க !!!
சிங்கப்பூர் நிஃப்ட்டியாரும் தற்போது அதிகபட்சமாக 3391 வரை சென்றுள்ளார் ...
நேத்தும் உள்ளூர் பயலுகளும் , அசலூர் பசங்களும் சேந்து CASH MARKET ல் வித்து வச்சுட்டானுங்கோ !!! 10 நாள் கழிச்சு நேத்து தான் அசலூர்க்காரனுங்க வித்து இருக்கானுங்க !!! நேத்து FUTURE பக்கமும் ரொம்ப போகாம OPTION பக்கம் போய்ட்டானுங்க !!!
நேத்து TURN OVER அமோகமா இருந்துச்சுன்னு பேசிக்கிரானுங்க !!!
இன்னிக்கு ரிசல்ட்டு வரும் முக்கிய நிறுவனங்கள் HCLTECH,WIPRO,ACC,AMBUJACEMENT,YES BANK, ZEE ENTERPRISES …இந்த பங்கை TRADING பண்றவங்க எல்லாம் ALERTஆ இருந்துக்கோங்க !!!
அடுத்த வாரம் F&O EXPIRY (30.04.2009)ஆகிற அன்னிக்கு சந்தைக்கு விடுமுறையாம் !!! கேட்டா மும்பையில எலக்க்ஷன்னு சொல்லுறானுங்க !!! அதனால புதன்கிழமை (29.04.2009) F&O EXPIRY!!! MINDல வச்சுக்கோங்க !!!
நம்பலைன்னா கீழ உள்ள LINKஐ சொடுக்குங்கோ !!!
http://www.moneycontrol.com/india/news/market-news/nse-advances-fo-contracts-expiry-to-apr-29/392824
50 பங்குகளை F&O வில் இருந்து தூக்க போறானுங்க , யாரு அவுக எல்லாம்னு பாக்கப்போனா ,3i Infotech, Ballarpur Industries, Bata India, Edelweiss, Gateway Distriparks, Gitanjali Gems, Hindustan Oil Exploration, Jet Airways, MindTree, MRF, NIIT, NDTV, S. Kumar’s Nationwide, TVS Motor, UTV Software , Wockhardt. AND RELIANCE INFRA !!! இப்போ ஓடுற CONTRACT ஓடிக்கிட்டே தான் இருக்கும் , ஜூலை மாசத்துலே இருந்து இவுக ஆட்டைக்கு கிடையாது ...
இப்பவும் நம்பலைன்னா கீழ உள்ள LINKஐ சொடுக்குங்கோ !!!
http://www.thehindubusinessline.com/2009/04/22/stories/2009042251181000.htm
இன்னிக்கு இவனா(3310) ? இவனா (3420) ?
இன்னிக்கு ஒரு மொக்கை …
இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்
பிவோட் புள்ளி : 3365
தடை நிலைகள் : 3420,3465,3520
தாங்கு நிலைகள் : 3310,3255,3205
“
Tuesday, April 21, 2009
இன்னிக்கு பங்குசந்தை ...(21.04.2009)
நேற்றைய பங்குசந்தை (20.04.2009)
21.04.02009(செவ்வாய்)
நேற்று அமெரிக்க சந்தைகள் ரத்த வாந்தி எடுத்துள்ளன , காரணம் கேட்டா முதலீட்டாளர்களுக்கு வங்கி பங்குகள் மீது ஒரு வித பயம் வந்து பைசாவை உருவிட்டாங்கலாம் ... தற்போது அனைத்து ஆசிய சந்தைகளும் ரத்தம் கக்கிக் கொண்டு உள்ளன !!!
சிங்கப்பூர் நிஃப்ட்டியாரும் தற்போது குறைந்தபட்சமாக 3306.5 வரை சென்றுள்ளார் ...
நேத்தும் உள்ளூர் பயலுகளும் , அசலூர் பசங்களும் சேந்து CASH MARKET ல் வாங்கி இருந்தாலும் , FUTURE MARKET ல் வித்து வச்சி இருக்கானுங்க !!! நேத்து TURN OVER கொறஞ்சு போச்சுன்னு ஒரே FEELINGS !!!
இன்னிக்கு ரிசல்ட்டு வரும் முக்கிய நிறுவனங்கள் HERO HONDA, ROLTA, ULTRATECH CEMENT,PRAJ INDUSTRIES…இந்த பங்கை TRADING பண்றவங்க எல்லாம் ALERTஆ இருந்துக்கோங்க !!!
அது மட்டும் இல்லாம இன்னிக்கு RBI , MONETARY POLICY சொல்லப் போறாங்களாம் , நேத்து சொன்ன MACRO ECONOMIC REPORT ல GDP GROWTHபத்தி கொஞ்சம் கொறச்சு தான் மதிப்பிட்டுருக்காங்க, அதனால BECAREFUL !!!
3285-3310ஒரு முக்கிய தாங்கு நிலையாகவும் , 3390 முக்கிய தடை நிலையாகவும் இருக்க வேண்டும் , எந்த எண் உடைபடுகிறதோ அந்த திசையில் பயணிப்போம் ...
இன்னிக்கு தத்துவத்தை விட்டுட்டு ஒரு மொக்கை ஜோக் சொல்லலாம்னு நினைக்கிறேன் …
இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்
பிவோட் புள்ளி : 3385
தடை நிலைகள் : 3435,3485,3530
தாங்கு நிலைகள் : 3330,3285,3230
“
Monday, April 20, 2009
இன்னிக்கு பங்குசந்தை ...(20.04.2009)
நேற்றைய பங்குசந்தை (17.04.2009)
20.04.02009(திங்கள்)
வெள்ளியன்று முடிவடைந்த அமெரிக்க சந்தைகள் பச்சை வண்ணத்தை தொட்டு முடிவடைந்துள்ளன !!! அனைத்து ஆசிய சந்தைகளும் ரத்தம் கக்கிக் கொண்டு உள்ளன !!!
சிங்கப்பூர் நிஃப்ட்டியாரும் தற்போது அதிகபட்சமாக 3395 வரை சென்றுள்ளார் ...
வெள்ளிக்கிழமை உள்ளூர் பயலுகளும் , அசலூர் பசங்களும் சேந்து CASH MARKET ல் வாங்கி இருந்தாலும் , FUTURE MARKET ல் வித்து வச்சி இருக்கானுங்க !!! HEDGING பண்ண ஆரம்பிச்சிருக்கானுங்க !!! MIND ல வச்சுக்குவோம் …
இன்னிக்கு ரிசல்ட்டு வரும் முக்கிய நிறுவனங்கள் TCS, SESA GOA, AXIS BANK …இந்த பங்கை TRADING பண்றவங்க எல்லாம் ALERTஆ இருந்துக்கோங்க !!!
வெள்ளிக்கிழமை OPEN INTEREST ஒண்ணும் பெரிய மாற்றம் இல்லை !!! இருந்தாலும் முன்னாள் சேகரித்த தகவல்கள் 3200 PUT WRITING, 3600,3700 CALL WRITING நடந்திருப்பதாக தெரிவிக்கின்றன ...
இப்போதைக்கு ஒரு RANGEக்குள்ளே (3200 -3500) இருக்கிறது ... இந்த RANGEல் BREAK OUT ஏற்படுகிறதா என்று இன்று பாப்போம் !!!
இந்த RANGE ல இன்னிக்கு முக்கிய நிலைகள் என்னவா இருக்கலாம்னு பாத்தா 3330 மற்றும் 3440 !!!
இன்னிக்கு தத்துவம் இன்னான்னா …
அதுக்காக ENERGYசேர்த்து வைக்கிறேன்னு தூங்கிட்டே இருக்காதீங்க !!!
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 17.04.2009) : 3385
இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்
பிவோட் புள்ளி : 3410
தடை நிலைகள் : 3465,3540,3595
தாங்கு நிலைகள் : 3330,3280,3200
“பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...
http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.html