Saturday, February 21, 2009
Friday, February 20, 2009
பங்குசந்தை பஞ்ச் டயலாக் !!!
"கண்ணு இருக்கும், காது இருக்கும், மூக்கு இருக்கும், முழி இருக்கும்
ஆனா உடம்புல உயிர் இருக்காது !!! அது ….."
"கம்ப்யூட்டர் இருக்கும், கரண்ட் இருக்கும், டீ-மேட் A/C இருக்கும்,
இன்டர்நெட் இருக்கும் ஆனா TRADING A/C ல பணம் இருக்காது !!!
அது …"
இன்னிக்கு பங்குசந்தை ...(20.02.2009)
20.02.02009(வெள்ளி)
எப்போதும் பங்குசந்தையில் “மூளை” சொல்வதை கேளுங்க !!! மனசுக்கு ஒருவித இரக்க குணம் உண்டு , அது எப்போதும் STOPLOSS ஐ பயன்படுத்த விடாது … அதனால் பங்குசந்தையைப் பொறுத்தவரை அதுவே அரக்கனாக மாறிவிடும் ...
உதாரணமாக,
நீங்கள் TRADING செய்து தோற்ற வணிகமே உங்களுக்கு சிறந்த உதாரணம் ...
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 19.02.2009) : 2789
இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்
பிவோட் புள்ளி : 2790
தடை நிலைகள் : 2810,2845,2880
தாங்கு நிலைகள் : 2760,2725,2690,2660,2635
மகாசிவராத்திரியை முன்னிட்டு வரும் திங்கள் கிழமை சந்தை விடுமுறை ...
“
Thursday, February 19, 2009
இன்னிக்கு பங்குசந்தை ...(19.02.2009)
“கண்ணா , பன்னீங்கதான் கூட்டமா வரும் ...சிங்கம் SINGLEலாத்தான் வரும் !!!”
அதாவது “ SELL ON NEWS, BUY ON RUMOUR”
உதாரணமாக,
இந்த வருட பட்ஜெட் பற்றிய அறிவிப்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை ... இது CONFIRMED NEWS. (SELL ON NEWS)
“EDUCOMP”எந்த ஒரு ஆதாரப் பூர்வமான தகவல்கள் இல்லாமல் 2000 ரூபாயிலிருந்து இறங்கி 1342 வரை சென்றது ஆனால் இன்று அது மீண்டும் 2114 !!! (BUY ON RUMOUR)
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 18.02.2009) : 2776
இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்
பிவோட் புள்ளி : 2775
தடை நிலைகள் : 2810,2845,2880
தாங்கு நிலைகள் : 2740,2705,2670
“
Wednesday, February 18, 2009
இன்னிக்கு பங்குசந்தை ...(18.02.2009)
“ VOLUME மோட இறங்குற பங்குசந்தையும்,
VOLUME இல்லாம ஏற்ற பங்குசந்தையும்
நிலைச்சி நின்னதா சரித்திரமே இல்லை !!!”
18.02.02009(புதன்)
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 17.02.2009) : 2770
இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்
பிவோட் புள்ளி : 2790
தடை நிலைகள் : 2830,2890,2930
தாங்கு நிலைகள் : 2730, 2690, 2630
“
பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...Tuesday, February 17, 2009
அசோக் நாட்டாமையின் ஒரு பக்க கட்டுரைகள் (பங்குசந்தையைப் பற்றி … )பக்கம் - 5
இன்று நமது கட்டுரையில் OPTION என்றால் என்ன என்பதை பற்றி காண்போம் ...
OPTIONக்கு சிறந்த உதாரணம், ஒரு இடத்தை நாம் விலைக்கு வாங்கும் முன்பு எப்படி ஒரு சிறு தொகையை ADVANCEஆக கொடுத்து அந்த இடத்தின் உரிமையை வாங்கி வைப்போமோ அது மாதிரி சிறு தொகையை கொடுத்து அந்த பங்கின் உரிமையை வாங்குவது தான் OPTION. அந்த சிறு தொகைக்கு பெயர் “PREMIUM” ….
இந்த PREMIUM இரண்டு விலைகளை உள்ளடக்கியுள்ளது ... ஒன்று INTRINSIC VALUE, இரண்டு TIME VALUE …
அதாவது,
PREMIUM = INTRINSIC VALUE + TIME VALUE
இதைப் பற்றி பிறகு விளக்கமாக காண்போம் ....
OPTION ல ரெண்டு வகை உண்டு ...
(1) CALL OPTION
(2) PUT OPTION
முதலில் CALL OPTION பற்றிய விளக்கங்களை பார்ப்போம் ...
CALL OPTION – நாம் ஒரு பங்கின் விலை ஏறும்னு நினைத்தால் இதை வாங்கலாம் … பங்கின் விலை குறைந்து போனால் இதன் விலையும் குறையும்...
உதாரணமாக,
ஒரு இடம் 3 லட்சம் போகும் என்று நினைத்து நாம் ஒரு 10,000 ரூபாய் ADVANCE கொடுப்பதாக வைத்து கொள்வோம் ... நாம் என்ன செய்கிறோம் என்றால் அந்த இடத்தை வேறு ஒருவரிடம் விற்பதற்கு தயாராகிறோம் ...
வேறு ஒருவர் அதே இடம் 4 லட்சம் செல்லும் என்று நினைத்து உங்களுக்கு 15,000 ரூபாய் ADVANCE கொடுத்துவிட்டு அந்த இடத்தின் உரிமையை பெற்றுகொள்கிறார் ...அதனால் உங்களுக்கு லாபம் 5,000 ரூபாய் …
இதனால் நீங்கள் அறிந்து கொள்வது என்ன !!! அந்த இடத்தை வாங்குவதற்கு முழுப்பணமும் கொடுக்கவில்லை ....(அதாவது 3 லட்சம் ரூபாய்) நீங்கள் கொடுத்தது 10,000 ரூபாய் அதற்க்கு உங்களுக்கு லாபம் 5,000 ரூபாய் …
சரி விற்றவர் இதற்க்கு ஒத்துக்கொள்வாரா ...அவரும் இதை மாதிரி 8000 ரூபாய்க்கு வேறு ஒருவரிடம் வாங்கி 10,000 ரூபாய்க்கு நமக்கு கொடுத்தவராக இருக்கலாம் ...அல்லது ஒரு பெரும் தொகையை கட்டி அந்த இடத்திற்கு பட்டா போட்டவராக இருக்கலாம் ...
சரி அந்த இடத்தின் விலை இறங்கிவிட்டால் என்ன ஆகும் ...
3 லட்சம் மதிப்புள்ள இடம் தற்போது 2 லட்சம் தான் போகும் என தெரிகிறது ...யாராவது 2000 ரூபாய் அல்லது 2500 ரூபாய் ADVANCE கொடுத்தால் வந்ததை பெற்றுக்கொண்டு அந்த இடத்திலிருந்து விடுதலை வாங்கி விட வேண்டியது தான் …
நான் கொடுத்த பணம் எந்தனை நாளைக்கு செல்லுபடியாகும் என்பது நாம் போட்ட AGREEMENT படிதான் ... (ஒரு மாதம், இரண்டு மாதம், மூன்று மாதம்) ஒவ்வொரு மாதத்தின் கடைசி வியாழக்கிழமை அன்று AGREEMENT நிறைவு பெறும் ...
மாதத்தின் கடைசி வியாழக்கிழமை அன்று அந்த இடத்தை வாங்க யாரும் முன்வரவில்லை என்றால், நமக்கு ADVANCEஆக கொடுத்த 10,000ரூபாய் நஷ்டம் !!!
இதைத் தான் ஆங்கிலத்தில் “A CALL OPTION GIVES THE HOLDER THE RIGHT BUT NOT THE OBLIGATION TO BUY AN ASSET BY A CERTAIN DATE FOR A CERTAIN PRICE”
அதாவது தமிழில் “அந்த இடத்தை வாங்கணும் அப்படிங்கிற அவசியம் இல்லை ஆனால் AGREEMENT தேதி வரை கை மாத்தி விடுவதற்கு உரிமை உண்டு ....”
சரி சொன்ன கதை எல்லாம் EASYயா புரியுது, SHAREக்கு CALL OPTION எப்படி??? அதை வரும் நாட்களில் பார்ப்போம் ...
இன்னிக்கு பங்குசந்தை ...(17.02.2009)
17.02.02009(செவ்வாய்)
இங்கு தினமும் காலையில் POWERCUT செய்ய ஆரம்பித்து விட்டார்கள் ...அதனால் வரும் நாள்களில் விரிவான சந்தை செய்திகளை எழுத முடியாது ... நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள் மட்டும் தெரிவிக்கப்படும் ...
மேலும் மாலையில் நேரம் கிடைக்கும்போது OPTION பற்றிய ஒரு பக்க கட்டுரைகள் எழுத உள்ளேன் ...
ஒரு முக்கியமான செய்தி , அடுத்த மாதம் முதல் F&Oவில் LOTSIZE மாற உள்ளது ... புதிய LOTSIZE ஐ தெரிந்து கொள்ள கீழே உள்ள LINKஐ பயன்படுத்தவும் ...
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 16.02.2009) : 2848
இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்
பிவோட் புள்ளி : 2880
தடை நிலைகள் : 2920,2990,3030
தாங்கு நிலைகள் : 2808,2768,2698
“
Monday, February 16, 2009
நான் (சந்தை) கடவுள் !!!
பல்லவி
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே … என் அய்யனே …
யாம் ஒரு, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே … என் அய்யனே …
பல்லவி
பங்குசந்தை என்னும் D-MAT A/C டோடு
TRADING A/C, SAVINGS A/Cவும் அடங்கிய TRADING என்னும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே …
பங்குசந்தை என்னும் D-MAT A/C டோடு
TRADING A/C, SAVINGS A/Cவும் அடங்கிய TRADING என்னும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே …
சரணம்
இல்லை SEBI ன் வல்வினை சூழ்ந்ததா !!!
NSE யும், BSE யும் தந்ததா !!!
இல்லை SEBI ன் வல்வினை சூழ்ந்ததா !!!
பங்கு சந்தையை நான் அறியாததா !!!
பங்கு சந்தையை நான் அறியாததா !!!
சிறு INVESTOR நிலையினில் உண்மையை உணர்ந்திட …
பல்லவி
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே …
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே …
சரணம்
அத்தனை செல்வமும் SHAREMARKETல்
நான் வேலைக்கு செல்வது எவ்விடத்தில் …
அத்தனை செல்வமும் SHAREMARKETல்
நான் வேலைக்கு செல்வது எவ்விடத்தில் …
வெறும் D-MAT A/C உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில் ...
ஒரு முறையா, இரு முறையா,பல முறை பணத்தை இழக்க வைத்தாய் !!!
புது வினையா ... பல வினையா …
கணம் கணம் தினம் என்னை துடிக்க வைத்தாய் !!!
கொள்ளை லாபத்துக்கு அலைந்திடும்
பொருளற்ற TRADING துரத்துதே ….
TRADING TRADING TRADING என்று அலைகின்ற மனம்
இன்று பிதற்றுதே ….
அருள் விழியால் நோக்குவாய் ... மலர் பதத்தால் தாங்குவாய் ...
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனது அருள் பெற …
பல்லவி
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே …
பங்குசந்தை என்னும் D-MAT A/C டோடு
TRADING A/C,SAVINGS A/Cவும் அடங்கிய TRADING என்னும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே …