ரங்கன் :
ஹாப்பி நியூ இயர் சுப்பா....
சுப்பன் :
சேம் டு யு டா...
ரங்கன் :
அப்புறம் போனவாரம் என்ன ஏதாவது லாபம் பாத்தியா ....
சுப்பன் :
இல்ல ரங்கா....இந்த நியூ இயர் ஆரம்பமே எனக்கு நஸ்டத்தே கொடுத்துடுச்சு...மார்க்கெட் ஏறங்கும்னு நினைச்சு நிபிட்டில ஷார்ட் போய்ட்டேன்...செம லாசுப்பா.....
ரங்கன் :
நான் தான் சொன்னேன்ல... அரசு அறிவுப்பு இருக்குதுன்னு... அப்புறம் ஏன் இப்படி பண்ண.....
சுப்பன் :
முடிஞ்சதுக்கு அப்புறம் சொல்றது ஈசி....முன்னாடியே அடிச்சு சொல்லணும்.... ( ஆ...ஏண்டா அடிக்கிற ...)
ரங்கன் :
நீ தானே அடிச்சு சொல்லணும் சொன்னே ....அதான்....
சுப்பன் :
சரி இந்த வாரம் என்ன நடக்கும்னு நினைக்கிறே சொல்லு பாப்போம் ....
ரங்கன் :
அப்படி கேளு சுப்பா .... இந்த நல்ல சேதி வரும்னு முன்னாடியே தெரிஞ்சு போச்சு அதனால தேவையானத நம்ம லோக்கல் பயலுகளும் , வெளிநாட்டு பயலுகளும் வாங்கி போட்டுட்டாங்க...அதனால கொஞ்சம் கேர்புல்லா இருக்கனும்....
ரங்கன் :
2900,2985,3030,3090,3120,3250 இந்த ஆறு லெவலையும் மனசுல வச்சிக்கோ....இந்த இடம் வரும்போது வாங்கிறவங்க ரொம்ப அதிகமா இருந்தா வாங்கிப் போடு ....இல்லனா வித்துடு... முன்னாடி உள்ளத சப்போர்ட்டாவும் பின்னாடி உள்ளத ரெசிஸ்டன்ஸாவும் வச்சுக்கோ.... டெய்லி ஒனக்கு சொல்லிட்டு இருக்க முடியாது…..
சுப்பன் :
(ஆமா இததான் எல்லோரும் சொல்லுவாங்களே....ட்ரேடிங் செய்ரப்போதானே அல்லு அந்து போகுது....)
ரங்கன் :
எல என்ன முனகுரே .....
சுப்பன் :
ஒன்னும் இல்ல ...ஒன்னும் இல்ல...
ரங்கன் :
அப்புறம் இந்த நல்ல சேதி வந்ததுல்ல...அதனால L&T, IDFC, PFC,REC,HINDUSTAN CONSTRUCTION, அப்புறம் ஆட்டோ துறையில TATA MOTORS,ASHOK LEYLAND,ESCORTS அப்புறம் ரியல் எஸ்டேட் துறையில DLF,PARSVNATH DEVELOPERS ,ANSAL PROPERTIES இவனுங்களுக்கெள்ளாம் நல்ல காலம் வரும்னு எதிர் பாக்றானுங்கோ.....அதனால நீயும் ஒரு கண்ணு வச்சுக்கோ...
சுப்பன் :
இப்படியே மொட்டையாவே சொல்லு...வாரமலர்ல கருப்பு பூனை சொல்லறது மாதிரியே....
ரங்கன் :
டேய் இப்போ தானே வந்திருக்கேன்...பொறு,,, இப்போதைக்கு என் காதுக்கு வந்த செய்தி மட்டும்தான் சொல்ல முடியும் .....
ரங்கன் :
சரி … 2009 கனவுகன்னி யாரு... CNBC பாத்துட்டு இருந்ததினாலே... சன் டிவி பாக்க முடியல..
சுப்பன் :
ரொம்ப ரொம்ப முக்யம் பாரு .....போடா போய் உருபடுற வழிய பாரு...
ரங்கன் :
டேய் மூஞ்ச தொங்க போட்டு திரியாத டா ...நாய் வந்து கடிச்சிரப்போது....அடுத்த வாரம் நல்ல காலம் பொறக்கும்... கவலை படாம இரு....
சற்று தெளிந்த மனிலையில் சுப்பன் அங்கிருந்து விடை பெறுகிறான்.....
(சுப்பன்,ரங்கன் அரட்டை தொடரும்.......)
No comments:
Post a Comment