Saturday, January 24, 2009

அசோக் நாட்டாமையின் ஒரு பக்க கட்டுரைகள் (பங்குசந்தையைப் பற்றி … )பக்கம் -2


HEDGING என்றால் என்ன ? என்பதைப் பற்றி சென்ற கட்டுரையில் பார்த்தோம் ...இப்போது இதை எப்படி நமது பங்குசந்தையில் பயன்படுத்துவது என்பதைப் பற்றி காண்போம் …


HEDGING நஷ்டத்தை குறைக்கும் ஒரு யுத்தியாக பயன்படுகின்றது ...


நாம் செய்த முதலீடு 8 சதவீதம் குறைந்து விட்டதென்றால் உஷாராகி விட வேண்டும் ...இது நினைவில் கொள்ளவேண்டிய முக்கியமான ஒன்று .இதற்கு மேலே கம்பெனி தாங்காதுன்னு தோணிச்சுன்னா HEDGING பண்ணிற வேண்டியது தான் …


உதாரணமாக,"UNITECH "

நாம் உஷாராக இருக்கிறோம்னு நினைச்சு ஜனவரி 2008 ல் வராம மே 2008 ல நம்ம சந்தைக்குள்ள வர்றோம் … எல்லா பங்கும் மலிவா கிடைக்குதுன்னு சொல்லி 471 ரூபாய்க்கு போனது 330 ரூபாய்க்கு வந்துருச்சுன்னு சொல்லி அதை வாங்கிட்டோம் ...


இதே உஷாரு 8 சதவீதம் குறையும் போதும் இருந்ததுன்னா HEDGING சங்கதிக்கு போயிருக்கனும், போயிருந்தால் …


IN CASH MARKET ,

Rs 330 * 900 பங்குகள் =Rs 2,70,000 முதலீடு பண்ணியாச்சு … Rs 303 வரும் போது நம்மாளு உஷாராயிட்டாரு … நேரா UNITECH FUTUREல Rs 300 க்கு ஷார்ட் போறாரு … (அதாங்க வித்துருதாரு )


Rs 300 * 900 பங்குகள் , இதற்கு அன்று தேவைப்பட்ட மார்ஷின் தொகை
Rs 80000 …


நேத்து வரைக்கும் அவரு ரோல் ஓவர் பண்ணிட்டு இருந்தால் , நேற்றைய கணக்குப்படி ,


IN CASH MARKET,

Rs 27 * 900 பங்குகள் = Rs 24,300 (Rs 2,70,000 - Rs 24,300 = Rs 2,45,700 நஷ்டம்)


IN FUTURE MARKET,


( Rs 300 – Rs 27 )=Rs 273 * 900 பங்குகள் =Rs 2,45,700 லாபம்,


சரி கணக்கை முடிச்சுடுவோம்னு நேத்து நினைச்சிருந்தால் ,

Rs 2,45,700 லாபம் IN FUTURE MARKET + Rs 24,300 CASH MARKET ல் வித்தது = Rs 2,70,000


அட இந்த கொலை வெறி புடிச்ச சந்தையிலையும் நமக்கு 5 பைசா
நஷ்ட்டமில்லைடா சாமி ...



பங்கின் விலை குறைய குறைய உங்கள் மார்ஷின் தொகையும் குறைந்து அதுவும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் உங்கள் டீமேட் கணக்கில் வந்து விடும் ..அதனால் அதை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை …

திரு. ராம்பிரசாத் கூறிய கணக்குப்படி,


CASH MARKET ,


BUY BROKERAGE -Rs 450.00


SELL BROKERAGE - Rs 40.00

NSDL /CDSL CHARGES -Rs 15.00


8 மாதத்திற்கு F&O(ROLL OVER)


BUY BROKERAGE –Rs 120.00


SELL BROKERAGE – Rs 480.00


என்னுடைய டீமேட் கணக்குப்படி மொத்தமாக ஒரு 1100 ரூபாய் நஷ்டம் ...தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதே ....



சரி ,கையில இந்த மாதிரி Rs 3,50,000(Rs 2,70,000+ Rs 80,000) இருந்தா இதெல்லாம் பண்ணலாம் ...சிறு வணிகர்கள் எப்படி HEDGING பண்ணலாம் ... என்று அடுத்த கட்டுரையில் பார்ப்போம் ...


பங்கு“சந்தை கீதம்” ( தீவிர சந்தையில் ஈடுபட்டவர்களுக்கு இது தேசிய கீதம் !!!)

நமது பங்குசந்தையில் உள்ளவர்களுக்கென்று ஒரு பாடல் வைத்தால் என்ன பாடல் வைக்கலாம் என்று நினைத்த போது ... இந்த பாடல் வரிகள் நினைவில் உதித்தது ...



"ஒரே கனா என் வாழ்விலே ...அதை நெஞ்சில் வைத்திருந்தேன்!!!
கனா ... மெய்யாகும் நாள் வரை உயிர் கையில் வைத்திருப்பேன் !!!
வானே … என் மேல் சாய்ந்தாலுமே நான் மீண்டு காட்டுவேன் !!!
நீ என்னை கொஞ்சம் கொஞ்சினால் நிலாவை வாங்குவேன் !!! "



நமது பங்குசந்தையில் பல பேருக்கு கை சுட்டு புண்ணாகி இருக்கும் ... கண்ணை மூடி அமர்ந்து இந்த பாடலை கேட்டால் கண்டிப்பாக நமக்கு புத்துயிர் வரும் ...


கீழே உள்ள லிங்கில் சென்று பாடலை கேளுங்க ...


http://www.techsatish.net/2007/01/23/guru-tamil-movie-mp3-songs/


இந்த பாடல் நமது சந்தையில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் ஒரு “சந்தை கீதம்” ஆக இருக்கும் என்று நம்புகிறேன் ...

அசோக் நாட்டாமையின் ஒரு பக்க கட்டுரைகள் (பங்குசந்தையைப் பற்றி … )பக்கம் - 1



HEDGING என்றால் என்ன ? இது எப்படி வந்தது ? எதற்காக இந்த வழிமுறையை பின்பற்றுகிறோம் என்று ஒரு உதாரணம் மூலம் சொல்கிறேன் ...


நான் ஒரு தொழில் அதிபர் ... எனக்கு ஒரு FOREIGN ORDER வருது ... ஒரு பொருளை 30 ரூபாய்க்கு செஞ்சு தர்றேன்னு ஒரு CONTRACT போட்டேன்...இது செஞ்சு முடிக்க எனக்கு ரெண்டு மாசம் ஆகும் என்று வைத்து கொள்வோம் .இந்த 30 ரூபாயில்,15 ரூபாய் மூலதனப்பொருளின் விலை ,10 ரூபாய் மற்ற செலவுகள் (ஊதியம், போக்குவரத்து செலவு மற்றும் பல ...) ,5 ரூபாய் எனக்கு லாபம் .இதான் கணக்கு .


இப்போ இந்த மூலதனப்பொருளை முழுசா என்னாலே வாங்கி வைக்க முடியாது ... ஏன்னா இந்த வேலையை முடிக்க ரெண்டு மாசம் ஆகும் ...அதே சமயத்தில் மூலதனப்பொருளின் விலை 2 ரூபாய் அதிகமானா கூட என்னோட லாபம் குறைந்து விடும் ... ஆனா CONTRACT போட்டது போட்டதுதான் ... இந்த நிலையை சரிகட்ட நான் உபயோகிக்கும் ஒரு வழிதான் HEDGING…


அதற்காக நான் அதே மூலதனப்பொருளை அதே விலையில்(15 ரூபாய் ) FUTURE CONTRACT ல் வாங்கி வைத்து கொள்கிறேன் ...

"இதன் முக்கிய குறிக்கோள் எனக்கு நஷ்டம் ஏற்படக்கூடாது ..."

இப்போது இரண்டே இரண்டு வழிகள் தான் உள்ளன ...இந்த இரண்டு மாதத்தில் மூலதனப்பொருளின் விலை ஏற வேண்டும், இல்லை இறங்க வேண்டும் .


(1) இந்த இரண்டு மாதத்தில் மூலதனப்பொருளின் விலை ஏறினால் ( 15 ரூபாய்க்கு பதிலாக 20 ரூபாய் ஆனால்) FUTURE CONTRACT ல் எனக்கு 5 ரூபாய் லாபம் , அந்த பொருளை வாங்க செல்லும் போது அதே 5 ரூபாய் நஷ்டம் …


(2) இந்த இரண்டு மாதத்தில் மூலதனப்பொருளின் விலை இறங்கினால் (15 ரூபாய்க்கு பதிலாக 10 ரூபாய் ஆனால்) FUTURE CONTRACT ல் எனக்கு 5 ரூபாய் நஷ்டம், அந்த பொருளை வாங்க செல்லும் போது அதே 5 ரூபாய் லாபம் …


கூட்டி கழிச்சு பாக்கும் போது நான் CONTRACT போடும் போது எதிர்பாத்த லாபம்(5 ரூபாய்) முழுசா இருக்கும் ...


இப்படி உபயோகப்பட்டது தான் இந்த HEDGING !!!


இனி இதை எப்படி நமது பங்குசந்தையில் பயன்படுத்துவது என்று அடுத்த கட்டுரையில் பார்ப்போம் ...


Friday, January 23, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(23.01.2009)

வரிசையா மூணு நாள் லீவு வருது ... அதனால மேல இருக்கிற படத்துல உள்ளது மாதிரி இன்னிக்கு யாரை வேணும்னாலும் ஏவி விடுவாங்க ...

23.01.02009(வெள்ளி)

நேற்று முடிந்த அமெரிக்க சந்தைகள் மைக்ரோசாப்ட் ரிசல்ட், வேலையற்றவர்கள் எண்ணிக்கை தொடர்பான அறிக்கை மற்றும் பல பொருளாதார காரணங்களினால் சிகப்பு வண்ணத்தை காட்டியுள்ளன ...


தற்போது துவங்கிய ஆசிய சந்தைகள் சிவப்பு கம்பளத்தில் நடனமாடிக் கொண்டுள்ளன ...


கச்சா எண்ணையின் விலை 42.90 டாலரில் சுற்றி கொண்டு இருக்கிறது ...


MC DOWELL என்ற UNITED SPIRITS இந்த புள்ள மார்க் கம்மியா எடுததுனால போட்டு குமுறிட்டாங்க ... அதாங்க நஷ்ட கணக்கு காமிச்சுட்டான் !!!


EDUCOMP SOLUTIONS - கீழ விழுந்த பய மேல ஏறி ,எனக்கு அடி படலைன்னு சொல்லிட்டான் ...


ரிலையன்ஸ் ரிசல்ட்டு எதிர்பாத்ததே விட நல்லா வந்திருக்காம் ...அவனால இன்னிக்கு எதாவது சலசலப்பு வருதான்னு பாப்போம் ...


RCOM, RNRL,PUNJLLOYD,UNION BANK, IDBI ,CANARA BANK …இந்த புள்ளைங்க இன்னிக்கு ரிசல்ட்டோட வர்றாங்க ... இவுங்க எல்லாம் ஓரமா உட்கார்ந்து இருந்தாலும் நல்லா படிச்ச புள்ளைங்க தான் ... இன்னிக்கு எப்படி மார்க் வாங்குராங்கன்னு பாப்போம் !!!


ஆப்ஷன்ல TIME VALUE , INTRINSIC VALUE அப்படின்னு ரெண்டு உண்டு ... இன்னும் CONTRACT முடிய அஞ்சு நாள் தான் இருக்கதுனால TIME VALUE கொறஞ்சுகிட்டே வரும் ...கடைசியில INTRINSIC VALUE மட்டும் தான் இருக்கும் ... ரொம்ப கேர்ஃபுல்லா வாங்குங்க ... அப்புறம் கடைசி நேரத்துல 5 பைசாவுக்கு போய்ட்டேன்னு வருத்தப்படாதீங்க !!!


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 22.01.2009) : 2713


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 2713

தாங்கு நிலைகள் : 2680,2650,2620

தடை நிலைகள் : 2745,2775,2805


அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."


குறிப்பு :


இங்கே சொல்வது சந்தை நிலவரங்கள் ... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல ....



Thursday, January 22, 2009

இன்னிக்கு பங்குச்சந்தை ...(22.01.2009)


நன்றி திரு .சரவணகுமார் (http://panguvaniham.wordpress.com/), நேற்று உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டமைக்கு !!! தங்கள் வருகையால் உள்ளம் மகிழ்ந்தேன் ...


22.01.02009(வியாழன்)


அமெரிக்க சந்தைகள் முந்தா நாள் விட்டதை நேத்து பிடிச்சிட்டாங்க ... அதாங்க நல்ல பச்சையில முடிச்சிருக்காங்க…
இப்போ நடந்துட்டு இருக்கிற ஆசிய சந்தைகள்கிட்டே அந்த சுறுசுறுப்பு இல்ல ...பித்து பிடிச்ச மாதிரி கிடக்காங்க .... நம்ம மார்க்கெட் ஆரம்பிச்சாத்தான் அந்த சுறுசுறுப்பு வரும் போல இருக்கு ...


கச்சா எண்ணையின் விலை 44.10 டாலர்ல இருக்கு ...

நேத்து கொலை குத்து வாங்கினவரு EDUCOMP SOLUTIONS ... இந்த புள்ளைக்கும் ஒரு வதந்தி பரவிட்டு இருக்கு ...அதை கண்டுபிடிக்க சொல்லி கேஸ் எல்லாம் போட்டு இருக்காங்களாம் ...அடுத்த சத்யம் ஆகிடாதீங்க , அவ்வளவு தான் சொல்லுவேன்!!!

நிஃப்ட்டி 2500,2600 புட் ஆப்ஷன் நிறைய வாங்கிட்டு இருகாங்கலாம் ...அடுத்த மாச கான்ட்ராக்ட்லேயும் வியாபாரம் அதிகமா நடக்குதாம் .... இன்னும் கீழே எதிர்பாக்காங்க போல .... அதனால ஒவ்வொரு உயர்விலையும் சத்தமில்லாம வெளிய வர பழகிக்கணும் … எதாவது நல்ல சேதி வந்தா தான் இதெல்லாம் தவிடு பொடியாகும் ...

நிஃப்ட்டி மட்டும்தான் டிஸ்கௌன்ட்னு பாத்தா ஏகப்பட்ட பங்குகள் டிஸ்கௌன்ட்ல இருக்கு ...
NALCO,DLF,NTPC,SBI,BHARTI,EDUCOMP,SBI,ICICIBANK இப்படி சொல்லிகிட்டே போகலாம் ...

RELIANCE, REL.POWER,REL.INFRA,BHARTHI AIRTEL,IDEA,BANK OF INDIA,KOTAK BANK இந்த புள்ளைங்க இன்னிக்கு ரிசல்ட்டோட வர்றாங்க ... பூரா பர்ஸ்ட் பெஞ்சு பசங்க ...


இன்னிக்கு நமக்கு கொஞ்சம் கேப்-அப் ஒப்பனிங் தான் ... தக்க வைக்கும்மா என்பது ரிசல்ட்டின் தன்மையை பொறுத்து அமையும் ...

நிஃப்ட்டி முடிஞ்சது (as on 21.01.2009) : 2706

இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 2727

தாங்கு நிலைகள் : 2667,2627,2570

தடை நிலைகள் : 2767,2827,2857

அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."

குறிப்பு :

இங்கே சொல்வது சந்தை நிலவரங்கள் ... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல ....

Wednesday, January 21, 2009

பங்குசந்தையில் FII ,DII ஆக பார்த்திபனும், வடிவேலுவும் ...


கவுண்டமணி ,செந்திலுக்கு காளை கரடி ரோல் கொடுத்தாச்சு... நம்ம FII மற்றும் DII க்கு பார்த்திபன் ,வடிவேலு பாத்திரம் கொடுத்துடுவோம்…


Foreign Institutional Investor (FII) - பார்த்திபன்

Domestic Institutional Investor(DII) - வடிவேலு


எவ்வளவு அடி கொடுத்தாலும் தாங்குறானே ...இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க ... நானும் எவ்வளவு நேரம் தான் அழாம இருக்கிறது ...

(இன்றைய பங்குசந்தையை நினைவில் கொண்டால் இதன் அர்த்தம் புரியும் ...)

பங்குசந்தையில் காளை,கரடியாக கவுண்டமனியும் ,செந்திலும் !!!


அட எவ்வளவு நாள் தான் நம்ம பங்கு சந்தையில காளை, கரடி இந்த ரெண்டு மிருகங்களை வச்சியிருப்பாங்க ...ஒரு சேஞ்சுக்கு நம்ம கவுண்டமணி செந்திலை வச்சு பாக்கலாமே ...இப்போ ரெண்டு பேருக்குமே மார்க்கெட் இல்ல ...இந்த மார்கெட்லயாவது கலக்கட்டுமே ...


கவுண்டமணி = காளை


செந்தில் = கரடி


என்ன நண்பர்களே, உங்கள் அபிப்ரயாங்களை சொல்லுங்க !!!

நாளைக்கு நம்ம சந்தை சூப்பர் ஸ்டார் ஆகுமா ????


நாளைக்கு நம்ம சந்தை சூப்பர் ஸ்டார் ஆகுமா ???? உங்கள் எண்ணங்களை கீழே சொல்லுங்கள் ....

இன்னிக்கு பங்குச்சந்தை ...(21.01.2009)

21.01.2009(புதன்)


ஒபாமா பதவியேற்ற நேற்றைய தினம் அமெரிக்க பங்கு சந்தையிலும் மறக்க முடியாத நாளாகி விட்டது ... ஆம் ... டவ் ஜோன்ஸ் 8000க்கு கீழ் முடிவுற்றது .இந்த காட்சி NOV 2008க்கு அப்புறம் நேற்று தான் அரங்கேறியது ...அப்போ இதுவும் மறக்க முடியாத நாள் தானே ... வங்கி பங்குகளில் ஏற்பட்ட பீதி தான் இதற்கு காரணம் ...


ஆசிய சந்தைகள் அவரவர் சக்திக்கு தகுந்தாற்போல் சிகப்பு வண்ணத்தை காட்டி கொண்டு இருக்கிறார்கள் ...


கச்சா எண்ணையின் விலை 41.12 டாலரை நெருங்கி உள்ளது ...


நேற்று ராக்கெட் போல் சீறி பாய்ந்த பங்குகள் (பவர் செக்டார்) NTPC, POWERGRID,NEYVELI LIGNITE -ஏன்னா நேத்து இவுகளுக்கு நியூஸ், கொஞ்ச நேரத்துல எகிறிட்டாங்க ....

"The Central Electricity Regulatory Commission (CERC) has upped the Return on Equity (RoE) for power units to 15.5% versus 14% " இதாங்க மேட்டரு…



2800 கால் ஆப்ஷன் ரைட்டிங் நடந்து இருக்காம் … அதனால 2800 அப்படிங்கிறது ஒரு தடைக்கல்லா மாறிட்டு வருது ...


வெளிநாட்டு பயலுக தொடர்ந்து வித்துகிட்டே இருக்கானுங்க … அட நேத்து கூட 308 கோடி வித்து இருக்காங்க ... இவனுக வாங்க ஆரம்பிச்சாலும் நிப்பாட்ட முடியாது ...விக்க ஆரம்பிச்சாலும் நிப்பாட்ட முடியாது ...


சந்தைல டர்ன் ஓவர் ரொம்ப கம்மியா இருந்ததுன்னு பொலம்புனாங்க ... ஆனா நேத்தைக்கு கொஞ்சம் பரவா இல்லை ...


YES BANK,UCO BANK,INDIA INFOLINE ,WIPRO,BHEL ,HDFC இந்த புள்ளைங்க இன்னிக்கு ரிசல்ட்டோட வர்றாங்க ...


நாளைக்கு வரப்போகிற ரிலையன்ஸ் ரிசல்ட்டு வச்சு சந்தையின் போக்கு அமையும்னு சொல்றாங்க ...


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 20.01.2009) : 2796

இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 2800

சப்போர்ட் நிலைகள் : 2755,2715,2670

தடுப்பு நிலைகள் : 2840,2885,2925

அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."

குறிப்பு :

இங்கே சொல்வது சந்தை நிலவரங்கள் ... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல ....

Tuesday, January 20, 2009

இன்னிக்கு பங்குச்சந்தை ...(20.01.2009)


நேற்றைய அமெரிக்க சந்தைகள் விடுமுறை ... ஆனால் காலையில் துவங்கிய ஆசிய சந்தைகள் ரத்த கலருல இருக்கு ...

ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து மிக பெரும் நஷ்ட கணக்குடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது ...

கச்சா எண்ணையின் விலை 41 டாலர்ல இருக்கு ...


நேத்து கடைசி அரைமணி நேரத்துல JETAIRWAYS ஐ குபீர்னு தூக்கிட்டு போய்ட்டாங்க …

UNITECH,HDIL ரெண்டு பெரும் நேத்து பொங்கல் வச்சாங்க ...அதாங்க எறங்கி ஏறிட்டாங்க ...

ஒரு நாள் பேங்கு பங்குகள் எல்லாம் ராக்கெட் விட வருவாங்க ...கவனமா அமுக்க ரெடியா இருக்கனும் ...

நேத்தும் நம்ம வெளிநாட்டு பயலுக வித்து இருக்கானுங்க ...இவுக பணத்தை இதுலேருந்து எடுத்துட்டு எங்க போறாங்கன்னு பாத்தா , அரசு கடன் பத்திரங்கள் பக்கம் அதாங்க BONDS பக்கம் போறாங்களாம் ...

WIPRO, RELIANCE CAPITAL,NAGARFERT,HEROHONDA,LIC HOUSING,DR.REDDY இந்த புள்ளைங்க இன்னிக்கு ரிசல்ட்டோட வர்றாங்க ...

சத்யம் கம்ப்யூட்டர்ல் 53,000 பேருக்கு சம்பளம் கொடுக்க ஒரு மாசத்துக்கு 500 கோடி ரூபாய் தேவைப்படுதாம் ...பெருக்கி வகுத்து பாத்தா ஒரு ஆளுக்கு சராசரியா 95000 ரூபாய் வருது ...நல்ல வாழ வச்சியிருக்காரு ராஜு ...


நாம் மட்டும் விதிவிலக்கா என்ன ? நாமளும் கேப் டவ்ன் ஒபெனிங் தான் ....


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 19.01.2009) : 2846


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 2845

சப்போர்ட் நிலைகள் : 2820,2795,2770, 2720

தடுப்பு நிலைகள் : 2870,2890,2920


அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."



Monday, January 19, 2009

இன்னிக்கு பங்குச்சந்தை ...(19.01.2009)



19.01.02009(திங்கள்)


வெள்ளி அன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் பச்சை நிறத்திற்கு வர முயற்சி செய்து அதில் சிறிது வெற்றியும் கண்டன.... தற்போது துவங்கிய ஆசிய சந்தைகளும் பச்சை நிறத்திலேயே வணிகமாகிக் கொண்டு இருக்கின்றன ...


கச்சா எண்ணையின் விலை 36-37 டாலர்ல இருக்கு ...


ITC,TTML,ROLTA,TRIVENI ENGINEERING இவனுங்களுக்கேல்லாம் இன்னிக்கு Q3 ரிசல்ட் , போற போக்குல என்னதான் செய்றாங்கன்னு பாக்கலாம் ...

இன்று அமெரிக்க சந்தைகள் விடுமுறை ...


இன்னிக்கு சொல்ற அளவுக்கு முக்யமான சேதி வேற ஏதும் இல்ல ...


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 16.01.2009) : 2828


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2797


சப்போர்ட் நிலைகள் : 2757,2687,2647


தடுப்பு நிலைகள் : 2867,2907,2977



அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."

Sunday, January 18, 2009

சுப்பன் , ரங்கன் பங்குசந்தை அரட்டை …(12.01.2009 -16.01.2009)



ரங்கன் :

என்ன சுப்பா எப்படி இருக்கே !!!... பொங்கல் எல்லாம் சிறப்பா முடிஞ்சுதா ???


சுப்பன் :

பொங்கல் என்னவோ செழிப்பாத்தான் நடந்தது ...ஆனா நம்ம சந்தையிலதான் செழிப்பு இல்ல ....


ரங்கன் :

நீ சொல்றது சரி தான் சுப்பா ...சத்யம் வெவகாரம் வந்ததுலே இருந்து வெளிநாட்டு பயலுக தொடர்ந்து வித்துகிட்டே இருக்காங்க .... நம்ம உள்ளூறு பயலுகளும் கொஞ்சம் கூட சலிக்காம வாங்குறாங்க ... என்ன அவுக விக்கிறதுலே பாதி தான் நம்மாளுங்களாள வாங்க முடியுது ...


சுப்பன் :

வர்ற செவ்வாய் கிழமை ஒபாமா பதவி ஏற்கிறார் போல இருக்கு ...


ரங்கன் :

ஆமா சுப்பா ...இப்போ அவரு வாய்ல இருந்து என்ன வார்த்தை வரும்னு காத்துட்டு இருக்காங்க ...


புயல் வந்தா அதுக்கு ஒரு பேரு வைப்பாங்க ...அது மாதிரி இதுக்கு “ஒபாமா ரேலி” அப்படின்னு பேரு வச்சியிருக்காங்க


சுப்பன் :

பாப்போம் ...அவரு புயலா வர்ராரா !!! இல்லை தென்றலா வர்ராரா !!!


சுப்பன் :

நம்ம சந்தையை ஆட்டி படைக்கிறது வெளிநாட்டு பயலுக தான் !!! நினைச்சா ஏத்துரானுங்க …நினைச்சா இறக்குரானுங்க ...


ரங்கன் :

நம்ம நாட்டுல இப்போ INFLATION கொரஞ்சிடுச்சு (5.24%) ,


IIP(Index of Industrial Production) (2.4%) இதூம் பரவாயில்லை …

இப்படி எல்லாமே நல்லா இருந்தும் ...நம்மளாள ஜொலிக்க முடியலை ...

இதுக்கு காரணம் என்னான்னா நம்ம நாட்டுல RETAIL INVESTORS சதவீதம் ரொம்ப கம்மி ... நம்ம மக்கள் எல்லோரும் இந்த களத்துல இறங்கிட்டா அவனுங்களே ஒரு கை பாத்துடலாம் ...

நம்ம நாட்டுல இருக்கிற மக்கள் தொகைக்கு ... வெளிநாட்டு பயலுக முதலீடு எல்லாம் கால் தூசி ...


சுப்பன் :

எதாவது கெட்ட சேதின்னா , விழுகிற மொத அடி ரியல் எஸ்டேட் பங்கு பக்கம் தான் போல இருக்கு ...


ரங்கன் :

நீ சொல்றது உண்மைதான் சுப்பா ... ஆனா என்னிக்காவது ஷார்ட் கவரிங்ன்னு வரும் போது , உள்ளே புகுந்து லாபத்தோடு வெளிய வந்துடு ...அடிவாங்கிட்டு இருக்கிற எல்லாத்துக்கும் ஒரு நாள் திருவிழா வரும் ...அன்னிக்கு பொங்கல் வச்சிரு ...


சுப்பன் :

இந்த வாரம் சந்தை எப்படிப்பா இருக்கும் ...


ரங்கன் :

நிஃப்ட்டி 2950 தாண்டுனாத்தான் எதையும் சொல்ல முடியும் ...


சுப்பன் :

என்ன ரங்கா , டாக்டர் கெடு கொடுத்த மாதிரி பேசிட்டு இருக்கே ...


ரங்கன் :

நானாவா சொல்றேன் ...டேட்டா அப்படி சொல்லுது ...

இதுல எதாவது மாற்றம் வந்தால் மேல போகும் ...


இந்த வாரம் நிஃப்ட்டி

சப்போர்ட் நிலைகள் : 2790,2690,2620,2490,2450

தடுப்பு நிலைகள் : 2880,2950,(3050,3150)


சுப்பன் :

அதெப்படி ரங்கா வரிசையா எல்லா நம்பரும் சொல்றே ...


ரங்கன் :

சுப்பா இந்த இடம் வரும்போதெல்லாம் வாங்குறதா இருந்தாலும் , விக்கிறதா இருந்தாலும் கொஞ்சம் நல்லா யோசிச்சு முடிவு எடுக்க தான் சொல்றேனே தவிர. நீ இதைதான் பண்ணனும்னு சொல்ல வரலை ..


சுப்பன் :

சரிடா எடுபட்டவனே ...அடுத்த வாரம் பாக்கலாம் ...


ரங்கன் :

போடா நன்னாரிக்கு பொறந்த மன்னாரு ...




(சுப்பன்,ரங்கன் அரட்டை தொடரும் ...)








சென்ற வார பங்குச்சந்தை ...(12.01.2009 - 16.01.2009)

INDICES ...


NIFTY (2828) -1.6%

SENSEX (9324) -0.9%

BSE IT (2185) +2.5%

BANKEX (5038) -6.4%

BSE MIDCAP (3432) +10%

BSE SMALLCAP (3413) -4%



வென்றதில் முதல் ஐந்து இடம் ...



GWALIOR CHEM (66) +38%

MIDAS PHARMA (15) +27%

WELL PACK (41) +22%


RUBBER PRODUCTS (10) +19%

TIPS INDUSTRIES (28) +19%




தோற்றதில் முதல் ஐந்து இடம் ...



TANLA (44) -26%

ASIAN STAR (963) -24%

ROLTA (87) -23%

SINTEX (149) -23%

BL KASHYAP (223) -23%