Thursday, January 8, 2009

இன்று ஒரு தகவல்...08.01.2009(வியாழன்)



அமெரிக்காவுல வேலை இல்லாதவங்க அதிகமாயிட்டாங்கலாம்...அதனால நேத்து அமெரிக்கா சந்தை எறங்கி போச்சாம்...உங்க ஊர்ல வேலை இல்லாதவங்க அதிகமாயிட்டாங்கன்னு, எங்க ஊருகாரங்களை அனுப்சிராதீங்க...உங்க தேர்தல் கொள்கைய்ல இதூம் ஒண்ணுனு சொன்னாங்க ...


தற்போது தூவங்கிய ஆசிய சந்தைகளும் அண்ணன் அமெரிக்கா வழியில் செல்கிறார்கள் ...


கச்சா எண்ணையின் விலை 43 டாலருக்கு எறங்கி போச்சு ...


சத்யம் கம்ப்யுட்டர் முதலாளி இப்படி பண்ணிபுட்டாரு...உங்களை நம்பி முதலீடு பண்ணுனவங்க இப்போ தெருவுக்கு வந்துட்டாங்க...ஆனா உங்களால பல பேரு நேத்து மட்டும் லட்சாதிபதி ஆயிட்டாங்க... (அதாங்க வித்துட்டு வாங்குனாங்களே அவுக தான் ...)


சத்யம் கம்ப்யூட்டர்க்கு பதிலா ரிலையன்ஸ் கேப்பிட்டல் வர்ற 12 ம் தேதியிலயிருந்து நிஃப்ட்டிக்கு வர போகுதாம்... சத்யம் கம்ப்யூட்டர்க்கு ஆப்பு... ரிலையன்ஸ் கேப்பிட்டலுக்கு மப்பு..


முக்கியமான விஷயம் நேத்தைக்கு நம்ம மார்க்கெட் செய்தியினால உந்தப்பட்டது அதனால இந்த பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் எல்லாம் ஒத்து வராது.... சார்ட்டே வேலைக்கு ஆகாதப்போ இதெல்லாம் எந்த மூலைக்கு... நம்ம கமலகாஸன் புன்னகை மன்னன் படத்துல மேல இருந்து விழுவாரே, அது மாதிரி இப்போ நம்மாளு(நிஃப்ட்டி) மரத்துல மாட்டிக்கிட்டாரு...இப்போ அவரை காப்பாதுவாங்களா இல்ல பாறைல போய் விழப்போறாரான்னு பொறுத்திருந்து பாப்போம்...


இப்பிடி கற்பனை பண்ணி பாருங்க ...


கமலகாஸன் – நிஃப்ட்டி கேரக்டர்

ரேகா - சத்யம் கம்ப்யூட்டர் கேரக்டர்


இதுக்கு மேல கதை நான் சொல்ல தேவை இல்ல ...


நேத்து நடந்த இந்த கொடூரத்திளையும் கிளுகிளுப்பாக இருந்தவர்கள்

(அதாங்க பச்சைல முடிச்சவங்க )


HINDUNILVR +1.72%
INFOSYSTCH +1.63%


அட நம்ம சந்தைக்கு இன்னிக்கு லீவு ...

நண்பர்களே இந்த வெப்சைட்டை மேலும் மேம்படுத்த என்ன என்ன செய்யலாம் என்று ஆலோசனை சொல்லலாமே !!!

5 comments:

Anonymous said...

Your views are really nice and gives some relief from this sharemarket trouble. Continue the same trend with pre-market and post market analysis (after 5.p.m.) Expecting pre-market analysis before 8.30 a.m.

V.SURESH SALEM

Anonymous said...

அசோக்,

இந்த ஸ்டைலேயே தொடர்ந்து எழுதுங்கள். நேற்று பிவோட் பாயிண்ட்பற்றி விளக்கம் கொடுத்ததுபோல் முடியும்போது உங்களுக்கு தெரிந்த டெக்னிக்கல் விஷயங்களையும் எழுதவும். கலக்குங்க நாட்டாமை!

Anonymous said...

Friend your technical lessons are interesting.Expecting more"Technicals" from you. Nice please continue......

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

கலக்கிட்டிங்க நாட்டாமை!
இந்த ஸ்டைலேயே தொடர்ந்து எழுதுங்கள்
நன்றி

Anonymous said...

nattabmai kalakringa epidiye condinue pannunga best of luk