
01.04.02009(புதன்)
நேற்று நாளின் நெடுகில் உயர துவங்கிய அமெரிக்க சந்தைகள் , கடைசியில் அதன் உயரத்தை தக்க வைக்க முடியாமல் போனது ... ஆனால் பச்சை நிறத்தில் முடிவடைந்து சிறிது ஆறுதலை தந்துள்ளது ...
ஆசிய சந்தைகளும் அவரவர் சக்திக்கு தகுந்தாற்போல் ஏறியுள்ளன …
நேற்றைய தினம் கணக்கு தீர்த்து கொள்ளும் நாள் என்றால் மிகையில்லை ...இதுவரை இல்லாத அளவுக்கு நம்ம உள்ளூறு பயலுக சும்மா வாங்கி குமிச்சிட்டானுங்க ...இப்போ தான் தெரியுது ஏன் MUTUAL FUND , NAV எல்லாம் கொறையுதுன்னு ...என் புருசனும் சண்டைக்கு போறான்னு போன மாதிரி எல்லா பணத்தையும் கணக்கு முடிக்க கொண்டு வந்து போட்டால் , வெளியூர்கார பய புள்ளைகளுக்கு தோதா போய்டுது ...அவனுக சுருட்டிட்டு போய்டுரானுங்க ...
இன்னிக்கு புதுசா கணக்கு ஆரம்ப்பிக்கிற நாள் ... தற்போது வணிகமாகிக் கொண்டு இருக்கும் சிங்கப்பூர் நிஃப்ட்டி பச்சை வண்ணத்திலேயே ஆரம்பித்து சென்று கொண்டு இருக்கிறார் ...
நேற்றைய சந்தையைப் பொறுத்த வரையில் ஒரே நெருடலான விஷயம் UP WITHOUT VOLUME … 2900 PUT OPTION, WRITING செஞ்சு வச்சு இருக்காங்க ... அதனால இன்னிக்கு அது ஒரு நல்ல சப்போர்ட்டா இருக்கும்னு நினைக்கிறேன்...
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சொல்லிக்கிறது இன்னான்னா ... ,
இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்
பிவோட் புள்ளி : 3015
தடை நிலைகள் : 3060,3100,3150
தாங்கு நிலைகள் : 2975,2925,2885
“பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...
http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.html
ஒரு நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது ... பார்த்து … படித்து தெரிந்து கொள்ளவும் ...
5 comments:
good review
by
rajendrann
நன்றி ராஜேந்திரன் ....
'என் புருசனும் சண்டைக்கு போறான்னு போன மாதிரி எல்லா பணத்தையும் கணக்கு முடிக்க கொண்டு வந்து போட்டால் , வெளியூர்கார பய புள்ளைகளுக்கு தோதா போய்டுது ...அவனுக சுருட்டிட்டு போய்டுரானுங்க ...
'
அருமையான் பதிவு
வாங்க குமார் ...
உங்களுடைய ப்ளாக் எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது.நன்றி
Post a Comment