27.03.02009(வெள்ளி)
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று தொடர்ந்து அதிகரித்து வரும் அமெரிக்க பங்கு சந்தைகள் ...
தனக்கென்று தனி முத்திரை இல்லாமல் அமெரிக்காவை பின் தொடரும் ஆசியாக்கள் ... நாமும் ஆசியாவில் ஒருவர் தானே ...
காரணம் என்ன தலைஎழுத்தை நான் நிர்ணயிக்கிறேன் என்று பல மில்லியன் டாலர்களுடன் சுற்றி திரியும் வெள்ளிநாட்டு அள்ள கைகள் …
அதில் குப்பைதொட்டியில் வீசப்பட காகிதம் போல் தினமும் தூக்கி எறியப்படும் தின சிறு வணிகர்கள் ...
பேராசை என்ற ஆயுதத்தை கையில் ஏந்தினால் நீயும் காகிதம் தான் என்று தினசரி நிரூபித்து கொண்டிருக்கும் சந்தை ...
ஒருவேளை நல்ல நேரம் வந்து விட்டதோ !!! இப்போது கோதாவில் இறங்கலாமா என்று ஒரு பக்கம் காத்து கிடக்கும் INVESTOR கள் …
ஒருவன் ஓடிக்கொண்டு இருக்கிறான் என்றால் தொடர்ந்து ஓட முடியாது ஒரு இடத்தில சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும் ... அது போல் திரும்பும் ...ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய சரிவு வருமா என்ற குழப்ப நிலையில் தவிக்கும்
TECHNICAL ANALYST கள் …
அதுக்கு யாரவது தும்முனா கூட கோபப்படுவராக மாற வேண்டும் இந்த FII கள் (அதாங்க எதுக்கு எடுத்தாலும் கோபப்படுறது)
இன்னொரு விஷயம் தினசரி வணிகர்களுக்கு சந்தை எப்போதும் இப்படித்தான் இருக்கும் …(ஏனென்றால் செய்திகளை தினசரி கேட்டு கொண்டிருக்கும் அவர்களுக்கு நல்லதும் கெட்டதாக தெரியும் ... கெட்டதும் நல்லதாக தெரியும் …)
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ,
இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்
பிவோட் புள்ளி : 3055
தடை நிலைகள் : 3130,3175,3250
தாங்கு நிலைகள் : 3010,2935,2885
“பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...
ஒரு நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது ... பார்த்து … படித்து தெரிந்து கொள்ளவும் ...
3 comments:
Today your levels are super ....
//பேராசை என்ற ஆயுதத்தை கையில் ஏந்தினால் நீயும் காகிதம் தான் என்று தினசரி நிரூபித்து கொண்டிருக்கும் சந்தை ...// தேர்ந்த எழுத்தாளரை எழுதுகிறிர்கள்.இதேபோல் சந்தையைப் பற்றி அதிகமாக எழுதினால் நன்றாக இறுக்கும். நன்றி
கண்டிப்பாக முயற்சிக்கிறேன் DG …
Post a Comment