Monday, February 23, 2009

பங்குசந்தை வரலாற்றில் முதல் முறையாக தமிழில் “OPEN INTEREST”



அடிக்கடி வர்த்தக சேனலில் (CNBC TV 18, NDTV PROFIT ...) அடிபடும் ஒரு வார்த்தை “OPEN INTEREST “அதை பற்றிய விளக்கத்தை இந்த கட்டுரையில் பார்ப்போம் ...

முதலில் OPEN INTEREST என்றால் என்ன?எங்கு இது பயன்படுகிறது?

என்ற விளக்கத்தை பார்ப்போம் ...

OPEN INTEREST என்பது பங்குசந்தையில் FUTURTES AND OPTIONS எனப்படும் DERIVATIVE SEGMENT க்கு உரித்தான வார்த்தை ...

மேலும், OPEN INTEREST என்பது எத்தனை CONTRACT கள் இன்னும் முடிக்கப்படாத நிலையில் வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் உள்ளது என்பதை உணர்த்தும் ஒரு புள்ளி விவரம் ...

ஒரு CONTRACT எப்போது உருவாகும் ?

ஒருத்தர் விற்கிறார் ஒருத்தர் வாங்குகிறார் அப்போது தான் ஒரு CONTRACT உருவாகும் ...

அதனால் OPEN INTEREST என்பது ஒன்று வாங்கியவர்களின் நிலையிலோ அல்லது விற்றவர்களின் நிலையிலோ இருந்து கணிக்கப்படும் ...இந்த இருவர்களின் கூட்டுத் தொகை அல்ல !!!

OPEN INTEREST எப்படி கணக்கிடப்படுகிறது???

முதலாவதாக, புதிதாக ஒருத்தர் விற்கிறார், புதிதாக ஒருத்தர் வாங்குகிறார் அப்போது OPEN INTEREST “1”,

இரண்டாவதாக, அதே மாதிரி வாங்கியவர் விற்று விட்டாலோ , விற்றவர் வாங்கி விட்டு கணக்கை நேர் செய்து கொண்டால் OPEN INTEREST “1” குறைந்து விடும்,

மூன்றாவதாக, ஏற்கனவே வாங்கியவர் புதிதாக வந்த ஒருவரிடம் விற்று விட்டால் அப்போது OPEN INTEREST மாறாது ...

உதாரணமாக,

அசோக், ஸ்ரீதர், ராஜகோபால் மூணு பேரு இருப்பதாக வைத்துக்கொள்வோம் ...

முதலாவதாக , அசோக் விற்கிராரு , ஸ்ரீதர் வாங்குராரு அப்போது OPEN INTEREST “1”,

இரண்டாவதாக, ஸ்ரீதர் வாங்கியதை விற்கிராரு , அசோக் விற்றதை வாங்குராரு அப்போது OPEN INTEREST “0”,(எளிமை கருதி இருவருக்குள் மட்டும் வணிகம் நடந்ததாக எடுத்துக்கொண்டால்)

மூன்றாவதாக, ஸ்ரீதர் வாங்கியதை புதிதாக வந்த ராஜகோபால் என்பவரிடம் விற்கிறார் என்றால் அப்போது OPEN INTEREST மாறாது அதாவது “1”...( ஏனன்றால் ஸ்ரீதர் அவர் கணக்கை முடித்துவிட்டு வெளியேறி விட்டார் ...இப்போது ராஜகோபால் வாங்கி இருக்கிறார் , அசோக் விற்று இருக்கிறார் அதனால் OPEN INTEREST “1”)

லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடம் அல்லவா சந்தை .... அதனால் எளிதாக புரிந்து கொள்ள கீழே உள்ள அட்டவணை உதவும் ...

வாங்குபவர்

விற்பவர்

OPEN INTEREST

புதியவர்

புதியவர்

ஏறும்

புதியவர்

ஏற்கனவே வாங்கியவர்

மாறாது

ஏற்கனவே விற்றவர்

புதியவர்

மாறாது

ஏற்கனவே விற்றவர்

ஏற்கனவே வாங்கியவர்

குறையும்

OPEN INTEREST அதிகமாகிக்கொண்டிருக்கிறது என்றால், நிறைய பணம் உள்ளே வந்திருக்கிறது என்று அர்த்தம் , அதனால் தற்போது உள்ள நிலை அப்படியே தொடரும் (ஏற்றம் நடந்து கொண்டிருக்கிறது என்றால் ஏற்றம் , இறக்கம் நடந்து கொண்டிருக்கிறது என்றால் இறக்கம், பக்கவாட்டு நகர்வு நடந்து கொண்டிருக்கிறது என்றால் பக்கவாட்டு நகர்வு )

OPEN INTEREST குறைகிறது என்றால், தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலை முடிவுக்கு வரப்போகிறது என்று அர்த்தம் .... ( இறக்கம் நடந்து கொண்டிருக்கிறது என்றால் அது முடிவுக்கு வந்து ஒரு ஏற்றதிற்க்கோ அல்லது பக்கவாட்டு நகர்விற்க்கோ தயாராகிறது என்று அர்த்தம் ...)

இதையும் சுருக்கமாக சொல்லப்போனால்

Price

(INDEX/STOCK)

OPEN INTEREST

Interpretation

(கணிப்பு)

(INDEX/STOCK)

ஏறுகிறது

ஏறுகிறது

வலுவுடன் உள்ளது

ஏறுகிறது

குறைகிறது

வலுவிழந்து கொண்டு இருக்கிறது

குறைகிறது

ஏறுகிறது

வலுவிழந்து உள்ளது

குறைகிறது

குறைகிறது

வலுப்பெற்றுக் கொண்டு இருக்கிறது

இதைத் தாங்க டிவியில NIFTY ADDS 3 LAKH SHARES IN OPEN INTEREST , RPL ADDS 5 LAKH SHARES IN OPEN INTEREST அப்படின்னு சொல்லுவாங்க .. (அதாவது OPEN INTEREST அதிகமாகி இருக்கிறது என்று அர்த்தம்)

NIFTY SHEDS 3 LAKH SHARES IN OPEN INTEREST , RPL SHEDS 5 LAKH SHARES IN OPEN INTEREST அப்படின்னு சொல்லுவாங்க (அதாவது OPEN INTEREST குறைந்து இருக்கிறது என்று அர்த்தம்)

அவ்வளவு தாங்க OPEN INTEREST ...

இனிமேல் டிவியில பாத்தாலும் , பேப்பர்ல படிச்சாலும் மேல உள்ள அட்டவணையை வச்சு முடிவு பண்ணிற மாட்டீங்க !!!


7 comments:

MCX Gold Silver said...

எளிதாக புரிய வைத்ததிற்கு நன்றி சார்

Nandhan Sp said...

thanks very much..expecting more particularly daily posts on market directions....

muru said...

நன்றி அசோக்

மிக அருமை,அசத்திட்டீங்க
முருகேசன்

Anonymous said...

Very nice sir.அதுவும் தமிழில். Thank you so much. Expecting much from you.

சிவாஜி த பாஸ் said...

very fine .... thanks a lot for your time...
Keep it up sir, GOOD LUCK!

Anonymous said...

உன்மைதாங்க. ஓப்பன் இண்ட்ரெஸ்ட்டைப் பற்றி நானும் இப்பதான் தெரிஞ்க்கிட்டேன். அருமையாக இருந்தது. நன்றாகவே புரிந்தது. பெரிய டெக்கினிக்கல் விஸயத்தை மிகவும் சாதாரனமாக புரியவைத்ததிற்க்கு நன்றி. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

Anonymous said...

superb ....