21.01.2009(புதன்)
ஆசிய சந்தைகள் அவரவர் சக்திக்கு தகுந்தாற்போல் சிகப்பு வண்ணத்தை காட்டி கொண்டு இருக்கிறார்கள் ...
கச்சா எண்ணையின் விலை 41.12 டாலரை நெருங்கி உள்ளது ...
நேற்று ராக்கெட் போல் சீறி பாய்ந்த பங்குகள் (பவர் செக்டார்) NTPC, POWERGRID,NEYVELI LIGNITE -ஏன்னா நேத்து இவுகளுக்கு நியூஸ், கொஞ்ச நேரத்துல எகிறிட்டாங்க ....
"The Central Electricity Regulatory Commission (CERC) has upped the Return on Equity (RoE) for power units to 15.5% versus 14% " இதாங்க மேட்டரு…
2800 கால் ஆப்ஷன் ரைட்டிங் நடந்து இருக்காம் … அதனால 2800 அப்படிங்கிறது ஒரு தடைக்கல்லா மாறிட்டு வருது ...
வெளிநாட்டு பயலுக தொடர்ந்து வித்துகிட்டே இருக்கானுங்க … அட நேத்து கூட 308 கோடி வித்து இருக்காங்க ... இவனுக வாங்க ஆரம்பிச்சாலும் நிப்பாட்ட முடியாது ...விக்க ஆரம்பிச்சாலும் நிப்பாட்ட முடியாது ...
சந்தைல டர்ன் ஓவர் ரொம்ப கம்மியா இருந்ததுன்னு பொலம்புனாங்க ... ஆனா நேத்தைக்கு கொஞ்சம் பரவா இல்லை ...
YES BANK,UCO BANK,INDIA INFOLINE ,WIPRO,BHEL ,HDFC இந்த புள்ளைங்க இன்னிக்கு ரிசல்ட்டோட வர்றாங்க ...
நாளைக்கு வரப்போகிற ரிலையன்ஸ் ரிசல்ட்டு வச்சு சந்தையின் போக்கு அமையும்னு சொல்றாங்க ...
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 20.01.2009) : 2796
இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்
பிவோட் புள்ளி : 2800
சப்போர்ட் நிலைகள் : 2755,2715,2670
தடுப்பு நிலைகள் : 2840,2885,2925
அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."
குறிப்பு :
இங்கே சொல்வது சந்தை நிலவரங்கள் ... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல ....
1 comment:
Support levels = தாங்கு நிலைகள்
Resistance levels = தடை நிலைகள்
இது சரியா வருமான்னு பாருங்க :)
மத்தபடி....நல்ல முயற்சி, தினமும் வாசிக்கிறேன் தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துகள்....
Post a Comment