Friday, February 6, 2009

அசோக் நாட்டாமையின் ஒரு பக்க கட்டுரைகள் (பங்குசந்தையைப் பற்றி … )பக்கம் -4


சிறு வணிகர்கள் HEDGING செய்வது எப்படி என்று இன்றைய கட்டுரையில் காண்போம் ...


இன்றைய நமது கட்டுரையின் கதாநாயகன் ரொம்ப விவரமானவர் ...
புது வருடம்(2009) பிறந்த பிறகு சந்தையில் முதலீடு செய்வோம் என்று நினைத்தவர் ,மேலும் சந்தை பற்றிய விவரங்களை கேள்வி ஞானத்தில் தெரிந்து கொண்டவர் ...
ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் சந்தையில் நிஃப்ட்டி 3125 இருக்கும் போது தனது போர்ட்போலியோவை தொடங்கியவர் ...கையில் 50,000 ரூபாய் வைத்துக்கொண்டு களமிறங்கியவர் ...
அவர் வாங்குனா நிஃப்ட்டி பங்குகளை மட்டும் தான் வாங்குவேன் என்ற மன நிலை கொண்டவர் ...மேலும் முழுவதும் முதலீடு செய்யாமல் ஒரு பகுதியாக ரூபாய் 30,000 மட்டும் முதலீடு செய்தவர் ...அவர் என்னென்ன வாங்கி இருக்கிறார் என்று பார்த்தால் ....


05.01.2009 பங்குகள் வாங்கி குவித்த நாள் ...


RPL 50 SHARES @ 92 = Rs 4600.00

SAIL 50 SHARES @ 89 = Rs 4450.00

SUZLON 50 SHARES @ 67 = Rs 3350.00

RELIANCE 10SHARES @ 1365 = Rs 13650.00

ICICI BANK 10 SHARES @ 500= Rs 5000.00

மொத்தமாக 31,050 ரூபாய் ( மேற்சொன்ன விலையெல்லாம் அன்றைய தினத்தின் முடிவுற்ற விலைக்கு அருகில் உள்ளது )

விதி யாரை விட்டது ...சந்தை அவர் வாங்கி முடிந்த மறு நாளில் இருந்து இறங்க ஆரம்பித்து விட்டது ...நம்மாளுக்கு கவலை தொற்றிக்கொண்டது ஏனென்றால் வாகியதெல்லாம் நிஃப்ட்டி பங்குகள் ஆயிற்றே !!!


நிஃப்ட்டி 3000 வந்தவுடன் அவருக்கு பயம் கொடுத்து விட்டது ... நம்மவர் தான் விவரமானவர் ஆயிற்றே !!! கையிலிருக்கும் மீதி பணத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்த போது உதயமானது ஒரு யோசனை ...அதாங்க “HEDGING” ,
இப்போது அவர் MINI NIFTY யை 3000 த்தில் விற்று வைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் …MINI NIFTY ல் 20 பங்குகள் உள்ளன .

(நிஃப்ட்டி 3125 இருக்கும்போது மேல் சொன்ன பங்குகளை வாங்கியவர் )


MINI NIFTY யை விற்பதற்கு 10,000 ரூபாய் இருந்தால் போதும் ... இன்னும் அவர் கையில் 9000 ரூபாய் மீதம் வைத்திருக்கிறார் ...(MTM Loss வந்தால் அதற்காக !!!அதிலும் ஒரு SAFETY!!!)


இன்று அவரது நிலை என்ன as on 06.02.2009 (சரியாக ஒரு மாதம் கழித்து …)

RPL 50 SHARES @ 85 = Rs 4250.00

SAIL 50 SHARES @ 87 =Rs 4350.00

SUZLON 50 SHARES @ 44 = Rs 2200.00

RELIANCE 10SHARES @ 1345 = Rs 13450.00

ICICI BANK 10 SHARES @ 407 = Rs 4070.00


இன்று விற்றிருந்தால் அவர் கையில் கிடைக்கும் தொகை 28,320 ரூபாய் … ஆக நஷ்டம் (Rs 31,050 – Rs 28,320) = Rs 2730/- நஷ்டம்


ஆனால் HEDGING முறையில் MINI NIFTY யை 3000 த்தில் விற்று வைத்திருந்ததால் அவரின் இன்றைய நிலை ( Rs 3000 – Rs 2830 )= Rs 170 * 20 பங்குகள் = Rs 3400 /- லாபம் .


Rs 3400 /- லாபம் - Rs 2730/- நஷ்டம் = Rs 670 லாபம் …


அட இதை கூட இந்த பங்குகளை வாங்கியதற்காக , MINI NIFTY யை ROLL OVER செய்ததற்காக BROKERAGE ஆக வச்சுக்கிட்டாலும் எனக்கு இன்னிக்கும் நஷ்டமில்லைங்கோ !!!


மறுபடியும் சொல்கிறேன் ... HEDGING என்பது லாபம் சம்பாதிக்கும் ஆயுதம் அல்ல ...இது நஷ்டத்தை குறைக்கும் ஆயுதம் ...


உங்களது சந்தேங்களை மின்னஞ்சல் முகவரியுடன் கீழே சொல்லுங்கள் ...




3 comments:

Anonymous said...

Super Sir, தொடரட்டும் இப்பணி.

Jaffer

Anonymous said...

Nice thing it will be very worthable for small invester

Anonymous said...

SUPERB!!!!