கரடியார் உள்ளே வர துடித்து கொண்டிருக்கிறார் ...
04.02.2009(புதன்)
முதலில் தட்டுத்தடுமாறி ஆரம்பித்த அமெரிக்க சந்தைகள் பிறகு படிப்படியாக உயர்ந்தன ... வீடுகள் விற்பனை பற்றிய செய்திகள் அமெரிக்க சந்தையை மேலே கொண்டு சென்றன ....
தற்போது துவங்கிய ஆசிய சந்தைகள் அண்ணன் அமெரிக்கா வழியிலேயே சென்று கொண்டு இருக்கிறார்கள் …
கச்சா எண்ணையின் விலை 41 டாலரில் சுற்றி கொண்டு இருக்கிறது ...
MARUTI வாகன விற்பனை அதிகம் என்ற செய்தி கசிந்ததினால் அந்த பங்கின் விலை ஏறியது ... இதே மாதிரி சிமெண்ட் பங்குகளான GRASIM,ACC இவர்களுக்கும் விற்பனை அதிகமான செய்தி … விலை ஏறியது !!!
சத்யம் கம்ப்யூட்டர் ஐ வாங்குவதற்கு POLARIS போட்டி போடுகிறது என்ற வதந்தியால் POLARIS பங்கின் விலையும் ஏறியது ... இந்த விஷயத்தினால் SPICETELE ,52 வார புதிய உச்சங்களை அடைந்து கொண்டு இருக்கிறது ... மூன்று நாட்களில் 228 சதவீத ஏற்றம் !!!
ஆனால் DLF , 52 வார குறைந்த பட்ச விலையை தொட்டுக்கொண்டிருக்கிறது ....தொடர்ந்து பாத்துகிட்டே இருப்போம் ...DEMAND கூடும்போது உள்ளே புகுந்து லாபத்தோடு வெளிய வரலாம் ...
NTPC,FUTURE இல் நிறைய SHORT POSITION உருவாகி இருக்கிறது ...
SO உஷாரு ...
2900 CALL OPTION ரைட்டிங் நடந்துட்டு இருக்கு ... அதனால 2900 ஒரு முக்கியமான தடை நிலையா இருக்கும் ...BE CAREFUL.
PLEDGED SHARES பற்றிய அறிக்கை ….
(1) RENUKA SUGAR 8.26%
(2) ABAN 8%
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 03.02.2009) : 2784
இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்
பிவோட் புள்ளி : 2790
தாங்கு நிலைகள் : 2745,2705,2665
தடை நிலைகள் : 2825,2865,2905
அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."
குறிப்பு :
இங்கே சொல்வது சந்தை நிலவரங்கள் ... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல ....
1 comment:
நாட்டமை அவர்களே ரொம்பவுமே உபயோகமான தகவல்கள் சொல்றீங்க. அவசியம் உங்க பதிவை www.newspaanai.com இல் சேர்தீங்கன்னா இன்னும் நிறைய பேருக்கு உதவியா இருக்கும்.
தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
http://www.newspaanai.com/easylink.php
Post a Comment