Monday, February 2, 2009
இன்னிக்கு பங்குசந்தை ...(02.02.2009)
02.02.02009(திங்கள்)
வெள்ளி அன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் GDP அறிவிப்பு (3.8%) மற்றும் பல பொருளாதார காரணங்களினால் சிகப்பு வண்ணத்தை காட்டியுள்ளன ...
தற்போது துவங்கிய ஆசிய சந்தைகள் ஒரு கலவையாக காணப்படுகிறது ... (பச்சையும், சிவப்பும் கலந்து காணப்படுகின்றன).
கச்சா எண்ணையின் விலை 42 டாலரை நெருங்கி உள்ளது ...
DLF, UNITECH போன்ற ரியால்டி பங்குகள் ரிசல்ட்டு எதிர்பாத்ததை விட மோசம் தான் ...
SEBI எல்லா கம்பெனிகிட்டையும் PLEDGED SHARES DETAILS கேட்டு உள்ளது ... அதுவும் ஏழு நாள்ல கொடுக்கணுமாம்… இது எத்தனை பேர் வயத்துல புளிய கரைக்க போகுதோ !!!
ACTING பிரதம மந்திரி பிரணாப் இன்று பொதுத்துறை வங்கி நிர்வாகிகளிடம் கலந்துரையாடல் மேற்கொள்கிறார் ...
கம்பெனிகளின் காலாண்டு முடிவு பற்றிய அறிவிப்புகள் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது ...
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 30.01.2009) : 2875
இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்
பிவோட் புள்ளி : 2845
சப்போர்ட் நிலைகள் : 2805,2735,2700
தடுப்பு நிலைகள் : 2915,2950,3020
அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."
குறிப்பு :
இங்கே சொல்வது சந்தை நிலவரங்கள் ... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல ....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment