Thursday, February 5, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(05.02.2009)


05.02.2009(வியாழன்)


நேற்று சற்றே ஏற்றத்தில் ஆரம்பித்த அமெரிக்க சந்தைகள் கடைசியில் சற்றே இறக்கத்தில் முடிவடைந்தன ... தற்போது துவங்கிய ஆசிய சந்தைகள் குழப்பமான மனநிலையில் பயணித்துக் கொண்டிருக்கின்றன ….

கச்சா எண்ணையின் விலை 40 டாலர் பக்கத்தில் சுற்றிக்கொண்டு இருக்கிறது ...

கடந்த வாரம வெளிவந்த பணவீக்கத்தை விட இன்று பணவீக்கம் குறைய வாய்ப்பு இருப்பதாக CNBC TV 18 கருத்துகணிப்பு தெரிவிக்கின்றன...(5.64% TO 5.2%)

நேற்று நட்சத்திரமாக மின்னிய பங்கு WWIL …

ஒவ்வொரு நாளும் குறிப்பிட சில பங்குகளை விலை ஏற்றும் நடவடிக்கைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன ...(WWIL,DISH TV, OSWAL CHEMICALS …)

DLF பங்கு நேற்று கொஞ்சம் மீண்டு வந்தாலும் அதில் இன்னும் SHORT POSITIONS அதிகமாக இருக்கின்றன ...

SPICETELE ல் பல பேர் பங்குகளை கையில் இல்லாமல் விற்றிருகிறார்கள் ...ஏறக்குறைய NSE ல் 1.37 லட்சம் பங்குகள் AUCTION MARKETக்கு சென்றுள்ளன

2800, 2900,3000 CALL OPTIONS ரைட்டிங் நடந்து கொண்டும், 2500,2450 PUT OPTIONS ஐ வாங்கி கொண்டும் இருக்கிறார்கள் ...

PLEDGED SHARES பற்றிய அறிக்கை ….

(1) TORRENT POWER 11.07%

(2) MURUDESWAR CERAMICS 20%


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 04.02.2009) : 2803


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 2810

தாங்கு நிலைகள் : 2775,2745,2715

தடை நிலைகள் : 2835,2870,2900

அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."

குறிப்பு :

இங்கே சொல்வது சந்தை நிலவரங்கள் ... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல ....

No comments: