ARBITRAGE என்றால் என்ன?
இதை ஒரு சிறு உதாரணம் மூலம் காண்போம் ....
மதுரையில் சினிமா பட DVD கள் பத்து ரூபாய்க்கு கிடைக்கிறது ...இந்த DVD களை பத்து ரூபாய்க்கு மதுரையில் வாங்கி திருநேல்வேலியில் 25 ரூபாய்க்கு விற்கிறோம் என்றால் அதற்க்கு பெயர் தாங்க ARBITRAGE … அதாவது பொருள் ஒன்று ....ஆனால் விற்கும் இடங்கள் வேறு ...
மூணு விஷயங்கள் நடந்தால் இந்த ARBITRAGE செய்வது நின்று விடும் ... அது என்னென்ன விஷயங்கள் ....
(1) எல்லா ஊர்களில் இருந்தும் மதுரைக்கு DVD வாங்க படையெடுத்தால் பற்றாக்குறை ஏற்பட்டு ,மதுரையில் DVD கிடைக்காமல் போகலாம் …
(2) அல்லது மதுரையிலேயை மீதமிருக்கிற DVD யின் விலை ஏறி விட வேண்டும் ....(DEMAND காரணமாக)
(3) நம்ம திருநேல்வேலியிலேயே பல பேரு DVD கடையை போட்டாங்கன்னா SUPPLY அதிகமாகி DEMAND கம்மியாகி விடும் ...அப்புறம் திருநேல்வேலியிலேயே பத்து ரூபாய்க்கு DVD கிடைக்க வாய்ப்பு வரலாம் ...
எதை எல்லாம் ARBITRAGE என்று சொல்லலாம் !!!
(1)நம்ம சந்தைகளிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு மற்ற (அமெரிக்க,ஐரோப்பிய..) சந்தைகளில் முதலீடு செய்வதும் ஒரு வகையான ARBITRAGE தான் …
(2)நம்ம சந்தைகளிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு COMMODITY (GOLD, SILVER….) சந்தைகளில் முதலீடு செய்வதும் ஒரு வகையான ARBITRAGE தான் …
(3)நம்ம சந்தையிலேயை CASH MARKETக்கும் , FUTUREக்கும் இடையேயான விலை வித்தியாசத்தில் விளையாடுவதும் ஒரு வகை ARBITRAGE தான் …
சரி நம்ம பங்கு சந்தைக்கு ARBITRAGE பயன்படுத்த முடியுமா? என்பதை வரும் நாட்களில் காண்போம் ...
2 comments:
thank you அசோக்
futureலிம் cash மார்கெடிலும் எப்படி விளையாடுவது என்று கூறவும்
thank you very much to respond me
Murugesan
நாட்டாமை சொல்லிட்டாரில்லே....இனி எல்லாம் நலமே..
இந்தக் கட்டுரை பற்றியல்ல ... தொடர்ந்தும் வாசிக்கும் வாசகன் நான்... சந்தை பற்றி இனிய தமிழில்... வாழ்க உங்கள் தொண்டு
Post a Comment