Tuesday, February 3, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(03.02.2009)


03.02.02009(செவ்வாய்)


நேத்து அமெரிக்க சந்தைகள் பச்சையும், சிவப்பும் கலந்து முடிந்துள்ளன … இப்போ நடந்துட்டு இருக்கிற ஆசிய சந்தைகள்கிட்டே சுறுசுறுப்பு இல்ல ...பித்து பிடிச்ச மாதிரி கிடக்காங்க .... நம்ம மார்க்கெட் ஆரம்பிச்சாத்தான் அந்த சுறுசுறுப்பு வரும் போல இருக்கு ...


கச்சா எண்ணையின் விலை 40-41 டாலரில் சுற்றி கொண்டு இருக்கிறது ...

SEBI சில கொள்கைகளை மாற்றியுள்ளன ...


(1) UPFRONT PAYMENT ON PREFERENTIAL WARRANTS HIKED TO 25%
(2) DIVIDEND TO BE ANNOUNCED ONLY ON SHARE BASIS
(3) BONUS ISSUES SHOULD BE COMPLETED IN 15-60 DAYS
(4) MORE TIME FOR COMPANIES TO DISCLOSE IPO PRICE BAND.


SPICETELE பங்கு இரண்டே நாளில் 150 சதவீதம் உயர்ந்துள்ளன ...அந்த பங்கில் ஏகப்பட்ட SPECULATIVE ACTIVITY நடந்து கொண்டு இருக்கின்றன ...


EDUCOMP SOLUTION, NALCO இவை இரண்டும் ARBITRAGE செய்யும் வாய்ப்பைத் தந்து கொண்டு இருக்கின்றன ...


சத்யம் கம்ப்யூட்டர்ஐ வாங்குவதற்கு எனக்கு விருப்பம் இல்லை என்று விப்ரோ நிறுவன முதலாளி கூறியுள்ளார் ...


நிஃப்ட்டி 2500,2450 PUT OPTION இவை இரண்டுக்கும் கொஞ்சம் மவுசு கூடியுள்ளது ... அதே மாதிரி 2800 CALL OPTIONனில் OPEN INTREST கூடியுள்ளது …



நிஃப்ட்டி முடிஞ்சது (as on 02.02.2009) : 2766


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2800

தாங்கு நிலைகள் : 2727,2687,2617

தடை நிலைகள் : 2837,2917,2957

அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."


குறிப்பு :


இங்கே சொல்வது சந்தை நிலவரங்கள் ... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல ....



2 comments:

muru said...

THANK YOU ASOAK
GOOD TO READ, BUT TELL ME HOW TO ARBITRAGE EDUCOMP, IN CASH MARKET

REGARDS,
MURUGESAN

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

நாட்டாமைக்கு வணக்கமுங்க