Wednesday, January 14, 2009

இன்னிக்கு பங்குச்சந்தை ...(14.01.2009)



14.01.2009(புதன்)

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ...

நேற்று அமெரிக்க சந்தைகள் பச்சை நிறத்திற்கு வர முயற்சி செய்து அதில் சிறிது வெற்றியும் கண்டன.... தற்போது துவங்கிய ஆசிய சந்தைகளும் பச்சை நிறத்திலேயே வணிகமாகிக் கொண்டு இருக்கின்றன ...


கச்சா எண்ணையின் விலை 39 டாலர்ல இருக்கு ...


நேத்தைக்கு துவைத்து எடுக்கப்பட்ட பங்கு ROLTA , வழக்கம் போல வதந்திகளும் , இல்லையென்று கம்பெனி முதலாளி டிவி யில் வந்து கதறுவதும் , மீண்டும் அது பழைய நிலைக்கு திரும்புவதும் வாடிக்கை ஆகி விட்டது.... இன்னிக்கு யாரோ ????


வணிகர்கள் 2700,2800 புட் ஆப்சன் ல இருந்து 2500,2600 புட் ஆப்சனுக்கு தாவி இருக்காங்களாம் … எல்லாம் ஓபன் இன்ட்ரஸ்ட் கணக்கை வச்சி சொல்றாங்க ... இதுலிருந்து நமக்கு என்ன புரியுது !!!


சத்யம் பெயில் அவுட் பிளான் கவர்மென்ட்டுகிட்டே இருக்கு போல இருக்கு ...எதுக்கும் மைன்ட்ல வச்சுக்குவோம்...


இன்னிக்கு HDFC BANK ரிசல்ட்டு , அதனால அதுல என்னதான் நடக்குதுன்னு பாக்கலாம் ….


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 13.01.2009) : 2745


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2755

சப்போர்ட் நிலைகள் : 2705,2675,2625

தடுப்பு நிலைகள் : 2790,2835,2875


அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."


2 comments:

Anonymous said...

2000 Cr bail out for satyam from govt

Anonymous said...

http://ibnlive.in.com/news/satyam-may-get-rs-2k-cr-govt-aid--debate-worth-it/82663-7.html