சத்யம் கம்ப்யூட்டர் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு அவர்கள், தான் செய்த தவறை நினைத்து கொஞ்சம் பீல் பண்ணி பாடினா எப்படி இருக்கும்... இதோ ஒரு உல்டா பாட்டு .....
"FRAUD" அப்படிங்கிற வார்த்தை அவரை ரொம்ப பாதிச்சிருச்சாம் …
குறிப்பு :
இசையுடன் படிக்க ... இந்த லிங்கை பயன்படுத்துங்கள்!!!
http://www.musicplug.in/songs.php?movieid=4923
பல்லவி :
வார்த்தை ஒண்ணு ... வார்த்தை ஒண்ணு ... கொல்லப்பாக்குதே ...
அது வாளெடுத்து ... வாளெடுத்து ... வெட்டப்பாக்குதே ....
பல்லவி :
வார்த்தை ஒண்ணு ... வார்த்தை ஒண்ணு ... கொல்லப் பாக்குதே ...
அது வாளெடுத்து வாளெடுத்து வெட்டப்பாக்குதே ....
நான் திமிரா செஞ்ச காரியம் ஒண்ணு தப்பா போனதே ...
என் SEBI இப்போ எனக்கு எதிரா போனதே ...
கம்பெனி எனக்கு சொந்தமில்லை என்று சொன்னவுடன்
மனசு வேர்த்து போச்சே …
என் நிழலில் கூட இப்போ ரத்தம் கொட்டுதடி,
இதயம் சுருங்கி போச்சே ...
பல்லவி :
வார்த்தை ஒண்ணு ... வார்த்தை ஒண்ணு ... கொல்லப்பாக்குதே ...
அது வாளெடுத்து வாளெடுத்து வெட்டப்பாக்குதே ...
சரணம் :
BALANCE SHEET ல என்ன பண்ணேன்ணு தெரியல ...
என் ஆடிட்டருக்கு சொல்லியும் கொடுக்கலை ...
மொத்தத்துல இப்ப எல்லாருமே உள்ள ...
செஞ்சதுக்கு தண்டனைய ஏத்துகிட்டேன் ....
இன்வெஸ்டார் ரத்தத்துல துக்கத்தை நான் தெளிச்சிட்டேன் ...
மக்கள் மனசில அரளிய விதச்சிட்டேன் ...
அட்டை கத்தி தான்னு நான் ஆடிப்பாத்தேன் விளையாட்டு ...
வெட்டுகத்தியாக, அது மாறி இப்ப வினையாச்சு ...
குடும்பத்து மேல பழிகள் வந்து மூடியதே ...
நான் ஆடுன ஆட்டத்துல என் கம்பெனிய இப்ப காணலியே ...
பல்லவி :
வார்த்தை ஒண்ணு ... வார்த்தை ஒண்ணு ...
சரணம் :
படைச்சவன் போட்ட முடிச்சிது ...
என் கழுத்துல மாட்டி இருக்குது ...
நினைக்கையிலே மனசு தான் பதறுது ...
கனவுல நடந்தது போல இருக்குது ...
விடிஞ்சா அதுவும் மறையுது ...
முகமே சோகமா உறையுது ...
சூர தேங்காய் போல நான் சுக்கு நூறா ஒடஞ்சனே ...
சொக்கபனை போல தீயில வெந்தனே ...
கோர்ட்டுக்கு… போகையிலே ஈரக்குல வேகிறதே ...
களிசோறு திங்கயிலே செஞ்ச தப்பு உறைக்குதே ...
பல்லவி :
வார்த்தை ஒண்ணு ... வார்த்தை ஒண்ணு ... கொல்லப்பாக்குதே ...
அது வாளெடுத்து வாளெடுத்து வெட்டப்பாக்குதே ....
நான் திமிரா செஞ்ச காரியம் ஒண்ணு தப்பா போனதே ...
என் SEBI இப்போ எனக்கு எதிரா போனதே ...
கம்பெனி எனக்கு சொந்தமில்லை என்று சொன்னவுடன்
மனசு வேர்த்து போச்சே …
என் நிழலில் கூட இப்போ ரத்தம் கொட்டுதடி, இதயம் சுருங்கி போச்சே ...
3 comments:
Song is good. Same time we can't blame single person. It is good team work. We have to appreciate things. He has done onething all indian companies are under pressure . All companies are under scrutnizing and squezing.
By yours friend Prem 98651 66117
Song is good. One thing people has to undrstood software or hardware we should not believe the comopanies.
//He has done onething all indian companies are under pressure . All companies are under scrutnizing and squezing.//
yes! Well Said!
Post a Comment