Sunday, January 11, 2009
இன்னிக்கு பங்குசந்தை ... (12.01.2009)
12.01.02009(திங்கள்)
வேலை இல்லாதவங்க எண்ணிக்கை அமெரிக்காவுல அதிகமாயிட்டாங்களாம் .... அதனால வெள்ளி அன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் ரத்த கலருல முடிஞ்சிடுச்சு ....
இன்னிக்கு ஜப்பானுக்கு லீவாம் ...மற்றபடி இப்போ நடக்கிற ஆசிய சந்தையில ஒரு பெரிய ஏற்றத்தாழ்வு இல்ல .... நம்ம மார்க்கெட் ஆரம்பிச்சா தான் சூடு கிளம்பும் போல இருக்கு ...
கச்சா எண்ணையின் விலை 40-41 டாலர்ல இருக்கு ...
நிஃப்ட்டிக்கு ரிலையன்ஸ் கேப்பிட்டல் வரப்போராருன்னு தெரிஞ்சும் எறக்கி விட்டாங்க ...இன்னிக்கும் இது தொடர்ந்துசுன்னா அணிலுக்கு அவமானம் ...ஆனா சன் பார்மா ஏறி இருக்கான் ...
இன்னிக்கு எக்ஸைட் இன்டஸ்ட்ரீஸ் Q3 ரிசல்ட் , அதனால அதுல என்னதான் நடக்குதுன்னு பாக்கலாம் …. ஆக்ஸிஸ் பேங்க் Q3 ரிசல்ட் வந்துச்சு , நல்லா தான் இருந்துச்சு ... ஒரு சின்ன விசயத்தினாலே (NPA) எறக்கி விட்டுட்டாங்க...
அப்புறம் இன்னிக்கு IIP நம்பர் வருதாம் ... -0.36% வரும்னு எதிர்பாக்கிறாங்க ... நம்மாளுங்க சும்மாவே வெறும் வாயை மெல்லுவானுங்க ... இன்னிக்கு வாய்க்கு எதாவது கிடச்சா சும்மாவா விடுவானுங்க.... அதனால கொஞ்சம் கேர்புஃல்லா இருக்கனும் ...
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 09.01.2009) : 2873
இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்
பிவோட் புள்ளி : 2870
சப்போர்ட் நிலைகள் : 2815,2750,2690
தடுப்பு நிலைகள் : 2930,2990,3050
அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நாட்டாமை தீர்ப்பு சூப்பர்
நன்றி
Post a Comment