Tuesday, January 13, 2009

இன்னிக்கு பங்குச்சந்தை ...(13.01.2009)


13.01.02009(செவ்வாய்)



நேத்தும் அமெரிக்க சந்தைகள் ரத்த கலருல தான் முடிச்சிருக்காங்க!!! காரணம் கேட்டா, உலகத்தின் மூன்றாவது மிகப்பெரிய அலுமினிய கம்பெனி ALCOA INC ,1.19 பில்லியன் டாலர் நஷ்ட கணக்கு காமிச்சிருக்கு ...அதும் இல்லாம கச்சா எண்ணையின் விலை குறைவும் இதுக்கு ஒரு காரணமாம் ...


ஆசியாவும் அமெரிக்க சந்தை வழியிலே போய்கிட்டு இருக்காங்க ...


கச்சா எண்ணையின் விலை 37-38 டாலர்ல இருக்கு ...


நேத்தைக்கும் DLF க்கு வந்த மாதிரி ஒரு வதந்தி ... சத்யமுக்கு SBI , லோன் 500 கோடி கொடுத்தாக ...பாவம் அந்த பிள்ளையையும் (பங்கையும்) போட்டு அடிச்சிட்டாங்க ... அது பொய்யின்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் கொஞ்சம் தேத்தி விட்டாங்க ...ஆனா ஆக்ஸிஸ் பேங்குக்கு ஏதோ லிங்க்கு… லிங்க்கு… இருக்கிற மாதிரியே தெரியுது... நமக்கு எதுக்குப்பா இந்த ஊர் வம்பு ...


நம்ம ரிலையன்ஸ் கேப்பிட்டலை நிஃப்ட்டியில சேத்தாலும் சேத்தாங்க… அய்யா 52 வார கொறஞ்ச பட்ச விலைக்கு பக்கத்துல போய்ட்டாரு...நான் இங்க கூவுறது அணிலுக்கு கேக்கும்மா ....


நேத்து சத்யம் கம்ப்யூட்டர் 44 சதவீதம் ஏறிச்சாம் ... அதுக்கு நல்ல செய்தி வரும்கிற நம்பிக்கைல இல்லையாம் ...எதோ ஷார்ட் கவரிங்குன்னு பேசிக்கிறாங்க ... எது எப்படியோ அந்த பிள்ளைக்கு(பங்குக்கு) ஒரு நல்ல வாழ்வு கொடுக்க பாருங்கப்பா...


இன்னிக்கு இன்போசிஸ் ரிசல்ட்டு ... அதனால எல்லாரும் ரெண்டு காதையும் ஷார்ப்பா தீட்டி வச்சிக்கோங்க ... நீங்க சொல்ற வார்த்தைலதான் இன்னிக்கு நம்ம சந்தையோட உயிரே இருக்கு ... நேத்து நீங்க வந்த வரத்தை பாத்தா எனக்கு என்னமோ டவுட்டாவே இருக்கு ...


ரிஸ்க்கு எடுக்கிறது எனக்கு ரஸ்க்கு சாபிடற மாதிரின்னு சொல்லறவங்க வேணும்னா சேதி உள்ள பங்கு பக்கம் போவாங்க !!! அட நீங்க எப்படி???


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 12.01.2009) : 2773


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2795

சப்போர்ட் நிலைகள் : 2725,2675,2605

தடுப்பு நிலைகள் : 2845,2920,2965


அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."



குறிப்பு :

இங்கே சொல்வது சந்தை நிலவரங்கள்.... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல... அல்ல... அல்ல...




No comments: