Sunday, January 11, 2009
சுப்பன்,ரங்கன் பங்கு சந்தை அரட்டை ...(05.01.2009 - 09.01.2009)
ரங்கன் :
என்ன சுப்பா எப்படி இருக்கே ....பொங்கலுக்கு எதாவது இனிப்பான சேதி இருக்கா ...
சுப்பன் :
அட போ ரங்கா இனிப்பான சேதியே வேண்டாம் ....கசப்பா எதாச்சும் வராம இருந்தா சரி தான் ... போன வாரம் ஒழுங்கா போய்கிட்டிருந்த மார்கெட்டை சத்யம் கம்ப்யூட்டர் தலையெழுத்தையே மாத்திருச்சு ...
ரங்கன் :
இன்னா பண்றது...ராமலிங்க ராஜு பண்ண தப்பால நம்ம இந்தியாவே தலை குனிஞ்சு நிக்குது ... நம்ம அரசாங்கம் நல்ல முடிவோட வந்தாத்தான் காப்பாத்த முடியும் ... இப்போதைக்கு இயக்குனர்களை மட்டும் பாத்து வச்சிருக்காங்க...
அவரு செஞ்ச காரியத்த பாத்தா ராஜேஷ்குமார் திகில் நாவல் படிச்சா மாதிரி இருக்கு... இன்னும் விஷயம் முழுசா வெளிய வரலை ...வந்தா இன்னும் எங்கெங்க கொண்டு போய் விட போகுதோ ...
சுப்பன் :
இங்க தான் இவ்வளவு பிரச்சனைன்னு பாத்தா... லாரி வேலை நிறுத்தம், பெட்ரோல் கிடைக்காம மக்கள் தவிக்கிறது .... கெட்ட நேரம் வந்தா ஒட்டகத்துல போனாலும் நாய் மூக்கை கடிக்கும்னு சொல்லுவாங்க ....அது மாதிரி இருக்கு....
ரங்கன் :
வர்ற செவ்வாய் கிழமை இன்போசிஸ் ரிசல்ட் வருது ... அவுக வயத்துல பால வார்த்தாதான், நம்ம பங்கு சந்தைக்கு கொஞ்சம் உயிர் வரும் ...
இப்போ எல்லாம் பெரிய கம்பெனில பெருந்தலைகள் சும்மா தும்முனா கூட விஷயம் வேற மாதிரி வெளிய வருது...
சுப்பன் :
எத சொல்ற ...DLF மேட்டர் தானே ...
ரங்கன் :
அட ஆமாப்பா ... சொந்த அக்கௌன்ட்ல வச்சிருந்த 1 லட்சம் சத்யம் ஷேரை வித்ததுக்கு .... சம்பந்தம் இல்லாம,விஷயம் வேற மாதிரி வந்து 225 ரூபாய்க்கு திரிஞ்சுட்டு இருந்தவனை 144 ரூபாய்க்கு கொண்டு வந்து வச்சிட்டாங்க...அப்புறம் அந்த மொதலாளி டிவில வந்து கதறுனதுக்கு அப்புறம் தான் பழைய நிலைமைக்கு வந்துச்சு....
இப்போ இருக்கிற நிலமைய பாத்தா , ரொம்ப மோசமா இருக்கு ...நம்ம அரசாங்கம் எதாவது எலும்பு துண்டை போட்டுகிட்டே இருந்தாதான் நம்ம சந்தை தப்பிக்கும்...
சுப்பன் :
இப்போ எல்லாம் நம்ம மார்கெட்டை பாத்தாலே பயம்மா இருக்கு... தீடீர்னு ஏறுது, தீடீர்னு எறங்குது...சரியா சிக்கலைன்னா சின்னா பின்னம் ஆய்டுவோம் போல இருக்கு ....
ரங்கன் :
அப்பு இதெல்லாம் கோடிகளை கைல வச்சுட்டு விளையாடுரானுங்க ... அவுக வழி தெரிஞ்சா அவுகளோடயே போய்ட்டு வா ... இல்லையா மூடிட்டு பாத்துகிட்டே இரு...நீ தெருகோடிக்கு போயிறாதே...
சுப்பன் :
சரி பொங்கல் லீவுக்கு நம்ம நட்புங்க எல்லாம் வந்துட்டாங்க....ஆனா நமக்கு தான் லீவு இல்ல ...
ரங்கன் :
அட போ சுப்பா ...வாரத்துல ரெண்டு நாள் லீவையே ஓட்ட முடியல ...இதுல வேற இன்னும் லீவு விட்டா... தாங்க முடியாதுடா சாமி...
அப்புறம் முக்யமான விஷயம் 2720-2750 அப்படிங்கிற சப்போர்ட்டை நிபிட்டி ஒடைக்காத வரைக்கும் பிரச்சனை இல்ல ....அதனால கொஞ்சம் பாத்து டீல் பண்ணு...
இந்த வாரம் 2690,2750,2820,2880,2930,2990,3050 இதையும் மனசுல வச்சுக்குவோம்...
சுப்பன் :
ஆமா அப்படியே வரிசையா எல்லா நம்பரையும் சொல்லிடு...
ரங்கன் :
சரிடா ரொம்ப டைம் ஆச்சு... அடுத்த வாரம் பாக்கலாம் ...
ஹாப்பி பொங்கல் சுப்பா...
சுப்பன் :
ஸேம் டு யு டா.....
(சுப்பன்,ரங்கன் அரட்டை தொடரும்.......)
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
nalla irukku.
nalla irukku.
சுப்பன்,ரங்கன் அரட்டை தொடரட்டும்
மிகவும் அருமை நாட்டாமை
nalla irukku
Post a Comment