Friday, April 17, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(17.04.2009)

நேற்றைய பங்குசந்தை (16.04.2009)



17.04.02009(வெள்ளி)

அமெரிக்காவில் பல DATAக்கள் எதிர்பாத்ததை விட சிறப்பாக இருந்ததால் தன்னை பச்சை நிறத்தில் தக்க வைத்துக்கொண்டது ...

ஆசியாக்கள் அண்ணாச்சி வழியிலேயே சென்று கொண்டிருக்கிறார்கள்...


சிங்கப்பூர் நிஃப்ட்டியாரும் தற்போது அதிகபட்சமாக 3450 வரை சென்றுள்ளார் ...


நேத்து நம்ம உள்ளூருக்காரன்வோ லாபத்தை வெளிய எடுத்துட்டாங்க ... அசலூர்க்காரங்க எவ்வளவோ முயற்சி பண்ணியும் சந்தயை காப்பாத்த முடியல !!!


அதனால அசலூர்க்காரங்க நம்ம லோக்கல் பயலுக மேல காண்டாத்தான் இருக்காங்க !!! அவுக எவ்வளவு கோவப்பட்டாலும் தாக்கு பிடிக்க முடியுமா நம்ம பயளுகளால !!!


நேற்று நமது சந்தையின் TURNOVER ரொம்ப நன்னா இருந்துச்சுன்னு பேசிக்கிறாங்க !!! சும்மாவா நம்மாளுங்க எனக்கு இன்னொரு முகம் இருக்குனுல்லா காமிச்சிருக்காங்க !!!


நேத்து SUZLON பங்கை சும்மா 19 சதவீதம் இறக்கி இருக்கானுங்க ... இன்னான்னு கேட்டா BLADE SUPPLY PROBLEM ன்னு சொல்றாங்க !!! துவைக்கனும்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் சோப்பு போட்டு துவைச்சா என்ன , சும்மா கல்லுல போட்டு குமுறுனா என்ன !!!(காரணம் தேடுறாங்களாம் …)


இன்னிக்கு ரெண்டு GATE PASS இருக்குதுங்க !!! 3310 க்கு கீழே முடிச்சா ...3480 நெருங்க முயற்சி பண்ணினா …


இப்படிப்பட்ட சூழ்நிலையில் சொல்லிக்கிறது இன்னான்னா ...,



நிஃப்ட்டி முடிஞ்சது (as on 16.04.2009) : 3370

இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 3410

தடை நிலைகள் : 3470,3565,3625

தாங்கு நிலைகள் : 3310,3255,3155


பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

Thursday, April 16, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(16.04.2009)


நேற்றைய பங்குசந்தை (15.04.2009)


16.04.02009(வியாழன்)

நேற்று முடிந்த அமெரிக்க சந்தைகள் நம்ம அளவுக்கு இல்லைனாலும் பரவாயில்லை , பச்சையில முடிச்சிட்டாங்க ...!!! ஆசிய சந்தைகள் நேற்று நாம் செய்த வேலையே செய்து கொண்டு இருக்கின்றன !!!


சிங்கப்பூர் நிஃப்ட்டியாரும் தற்போது அதிகபட்சமாக 3563 வரை சென்றுள்ளார் ...


நேற்று வெளியூர் பசங்களும் , உள்ளூர் பயலுகளும் சேந்து வாங்கி இருக்காங்க !!!


நேற்று நமது சந்தையின் TURNOVER ரொம்ப நன்னா இருந்துச்சுன்னு பேசிக்கிறாங்க !!! சும்மாவா 200 DAY EMA ,அவுக VOLUME மோட CROSS செய்றாங்களாம் ...


இப்ப எல்லாம் தின வணிகர்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க ... அவுகளும் CHART எல்லாம் பாத்துட்டு பல RESISTANCE நிலைகளை மனசுல வச்சுக்கிட்டு SHORT போய்றாங்க ... நம்ம அண்ணன் நிஃப்ட்டி அசால்ட்டா LONG JUMP பண்ணி போய்கின்னே இருக்காரு ...


இன்னிக்கு INFLATION DATA வெளிவரும் ... இது இன்னிக்காச்சு –VE வா வரணும்,அதை சாக்கா வச்சுகிட்டாச்சு சந்தை இறங்கனும்னு பல பேரு கோவிலுக்கு நேந்து இருக்காங்க !!!


நேத்தைக்கு OPEN INTEREST வச்சு கணக்கு பாத்தா, CALL OPTION மோகம் கொறஞ்சு இருக்கு !!! அதனால என்ன சொல்ல வர்றேன்னா இன்னிக்கு LONG போறவங்க கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க !!! நேத்து மாதிரி VOLUME இருந்தாலொழிய LONG போக வேணாம்னு நினைக்கிறேன் ...


இப்படிப்பட்ட சூழ்நிலையில் சொல்லிக்கிறது இன்னான்னா ...,


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 15.04.2009) : 3484

இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 3430

தடை நிலைகள் : 3550,3615,3735

தாங்கு நிலைகள் : 3365,3245,3180


பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

Wednesday, April 15, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(15.04.2009)

நேற்றைய பங்குசந்தை (13.04.2009)



15.04.02009(புதன்)
அவசர வேலையாக வெளியே செல்ல இருப்பதால் இன்னிக்கு பெருசா ஏதும் எழுதிட இயலவில்லை ....
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 13.04.2009) : 3383

இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 3380

தடை நிலைகள் : 3425,3460,3505

தாங்கு நிலைகள் : 3340,3295,3255


பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.html

Monday, April 13, 2009

I FIRST !!!


எனது வலைத்தளத்திற்கு வந்து செல்லும் நண்பர்கள் மற்றும் வலையுலக தோழர்கள் அனைவருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் !!!

இன்னிக்கு பங்குசந்தை ...(13.04.2009)

நேற்றைய பங்குசந்தை (09.04.2009)




13.04.02009(திங்கள்)

வியாழன் அன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் செம PEAK !!! ஆசிய சந்தைகள் அவரவர் சக்திக்கு ஏற்றாற்போல் பச்சை வண்ணத்தை காட்டிக்கொண்டுள்ளன ... இன்னிக்கு ஹாங்காங் பங்குசந்தைக்கு விடுமுறை (ஈஸ்டர் திங்கள்) !!!


சிங்கப்பூர் நிஃப்ட்டியாரும் தற்போது அதிகபட்சமாக 3417.5 வரை சென்றுள்ளார் ...


வியாழக்கிழமை வெளியூர் பசங்களும் , உள்ளூர் பயலுகளும் சேந்து வாங்கி இருக்காங்க !!! அப்ப வித்தது யாரு ??? மனசுக்குள்ளயே இந்த கேள்வியே வச்சுக்குவோம் !!!


அப்புறம் இந்த மாசம் ANNUAL ரிசல்டு வர்ற காலம் ... அதனால துறை வாரியா இழுவை இருக்கும்னு எதிர்பாக்கிறாங்கோ !!!


2850,2925,3150,3250 போன்ற தடை நிலைகளை சும்மா அசால்ட்டா LONG JUMP போட்டு தாண்டிடுச்சு !!! 3450, 3525 இதை எப்படி தாண்டப் போகுதுன்னு பொறுத்திருந்து பாப்போம் !!!


வியாழக்கிழமை இன்னான்னா 3300 PUT OPTION , WRITING பண்ணி இருக்காங்கோ , 3400,3500 CALL OPTION வாங்கி இருக்காங்கோ !!! அதனால ட்ரேடிங் ரேஞ்சு என்னான்னு சொல்லாம சொல்லிட்டேன் ... இன்னும் நிஃப்ட்டி ப்யூச்சரில் வெளிநாட்டு பய புள்ளைங்க LONG POSITION தான் எடுத்துட்டு இருக்காங்க !!!



இப்படிப்பட்ட சூழ்நிலையில் சொல்லிக்கிறது இன்னான்னா ...,





நிஃப்ட்டி முடிஞ்சது (as on 09.04.2009) : 3342

இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 3350

தடை நிலைகள் : 3395,3445,3485

தாங்கு நிலைகள் : 3300,3255,3205


பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.html

Thursday, April 9, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(09.04.2009)

நேற்றைய பங்குசந்தை (08.04.2009)



09.04.02009(வியாழன்)

நேற்று மேடு பள்ளங்களுடன் பயணித்த அமெரிக்க சந்தைகள் கடைசியில் POSITIVE ZONEல் முடிவடைந்துள்ளது … ஆசிய சந்தைகளில் தலா 1.5 -2.0 சதவீத ஏற்றம் தென்படுகிறது ...


சிங்கப்பூர் நிஃப்ட்டியாரும் தற்போது அதிகபட்சமாக 3410 வரை சென்றுள்ளார் ...


இன்னிக்கு IIP மற்றும் INFLATION RESULT வருகிறது …அதனால் பன்னிரெண்டு மணி வரை கொஞ்சம் அப்படியும் இப்படியுமா இருக்கும் …


நேத்து வெளிநாட்டு பயலுக சும்மா பூந்து விளையாடிட்டாங்க …
இருக்கிற காசுக்கு கூவுங்கடான்னா OVERஆ கூவுரானுங்க ...


நம்ம உள்ளூறு பசங்க MIDCAP பக்கம் போகாம ,LARGE CAP (NIFTY) பக்கமா மட்டும் சுத்திட்டு இருக்காங்களாம் !!!


200 DAY EMA , 3400 க்கு பக்கத்தில் இருக்கிறது ... இதை சந்தை எப்படி எதிர் கொள்கிறது என்று இன்னிக்கு தெரிந்து விடும் !!!


நேத்து OPEN INTEREST வச்சு கணக்கு பாத்தா கணக்கு TALLY ஆக மாட்டேங்குது …3300 CALL OPTION ல PACK UP நடந்திருக்கு , 3500 CALL OPTION , 3200 PUT OPTION நல்லா ஆக்டிவா இருக்கு ...



இப்படிப்பட்ட சூழ்நிலையில் சொல்லிக்கிறது இன்னான்னா ... ,




நிஃப்ட்டி முடிஞ்சது (as on 08.04.2009) : 3343


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 3285

தடை நிலைகள் : 3415,3490,3624

தாங்கு நிலைகள் : 3210,3075,3000


பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.html



ஒரு நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது ... பார்த்து … படித்து தெரிந்து கொள்ளவும் ...

Wednesday, April 8, 2009

என்னோட பதிவு புண்படுத்தி இருந்தால் ... மன்னித்து கொள்ளவும் !!!

நேற்று இட்ட பதிவு யார் மனதையும் புண்படுவதற்காகவும் போட்ட பதிவு இல்லை ...அது பங்குச்சந்தை பற்றிய ஜோக்குகள் ... ஆங்கிலத்தில் உலா வந்ததை தான் தமிழில் மொழி பெயர்த்து ஒரு எதுகை மோனையுடன் போட்டேன் ...


சங்கரன்கோவில் அருண் ரொம்ப FEEL பண்ணிட்டாரு ...ஜோக்குன்னா சிரிங்க அதை விட்டுட்டு ஆராய்ச்சி பண்ணாதீங்க ...இது வரைக்கும் எல்லா விசயத்தையும் அப்படிதானே சொல்லிக்கிட்டு இருக்கேன் ...



எனக்கு யார் மீதும் எந்த கோபமும் கிடையாது ... அனுபவமே பாடம் என்ற வழியில் சென்று கொண்டிருக்கிறேன் ... முதுகுல குத்துற பழக்கம் திருநெல்வேலிகாரனுக்கு கிடையாது ...

சொன்னது CORRECT ,ஆனா சொன்ன நேரம் தான் தப்பா போச்சு ...



வந்து நேர்ல பேசிட்டுபோன நீங்களே இப்படி நினைச்சா மத்தவங்க என்ன நினைச்சிருப்பாங்க !!!


அதுக்கும் மேல நீங்க தப்புன்னு நினைச்சிங்கன்னா அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் ...





"உன்னோட உயர்வுக்கு, உன்னோட வியர்வை …

என்னோட உயர்வுக்கு, என்னோட வியர்வை …

யாரோட உயர்வையும் யாராலையும் தடுத்து ... நிறுத்த முடியாது !!!"



இதாங்க நம்ம PRINCIPLE ...



நேற்றைய பங்குசந்தை (06.04.2009)



இன்னிக்கு பங்குசந்தை ...(08.04.2009)



நிஃப்ட்டி முடிஞ்சது (as on 06.04.2009) : 3257

இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 3255


தடை நிலைகள் : 3300,3350,3395


தாங்கு நிலைகள் : 3210,3165, 3115



பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.html



ஒரு நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது ... பார்த்து … படித்து தெரிந்து கொள்ளவும் ...

Tuesday, April 7, 2009

பத்தே நாளில் பத்து லட்சம் சம்பாதிப்பது எப்படி !!!

பத்தே நாளில் பத்து லட்சம் சம்பாதிப்பதற்கு ஒரே வழி பங்குசந்தைதான் !!!


இனி இதை சம்பாதிக்க என்ன செய்ய வேண்டும் என்று நம்ம அண்ணன்

“நாய் சேகர்” சொல்லுவார் ...





சும்மா ஒரு 25 லட்சம் எடுத்துக்கிட்டு பங்குசந்தைக்கு வாங்க ... பங்குகளை வாங்குங்க ... பத்து நாள் மட்டும் பொறுத்திருங்க ... நீங்க போட்ட முதல் பத்து லட்சம் ஆயிடும்... எடுத்துக்கிட்டு போய்க்கிட்டே இருங்க !!!


இதை விட EASY யான வழி எனக்கு தெரியலங்க ...




"ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக வேண்டுமா !!! "

அதுக்கும் கைவசம் IDEA இருக்கு ... பின்னூட்டம் சொல்றவங்களுக்கு மட்டும் தனியாக சொல்லப்படும் ...

Monday, April 6, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(06.04.2009)

நேற்றைய பங்குசந்தை (02.04.2009)



06.04.02009(திங்கள்)

வியாழன் அன்று அமெரிக்க சந்தைகள் சரியான ஏற்றம் !!! வெள்ளியன்று சுணக்கதுடன் ஆரம்பித்து POSITIVE ZONEல் முடிவடைந்தது ... ஆசிய சந்தைகளும் இந்த ஓட்டத்தை நிறுத்தாமல் சென்று கொண்டிருக்கின்றன ...


சிங்கப்பூர் நிஃப்ட்டியாரும் தற்போது 3300ல் நிலைப்பெற்று உள்ளார் …


வியாழக்கிழமை வெளிநாட்டு பயலுக சும்மா பூந்து விளையாடிட்டாங்க ...மார்ச் 31 ந்த் தேதி வித்தத்துக்கு சேத்து வாங்கி பூட்டாங்க ....


வெளிநாட்டு பயலுக 1615 கோடி NIFTY FUTUREல் வாங்கி இருந்தாலும், CHANGE IN OEN INTEREST பார்த்தீங்கன்னா 3.96% …உள்ளூறு பசங்க லாபத்தை புக் பண்ணிட்டாங்க போல ... ஒருவேளை மார்க்கெட் இறங்கிச்சுன்னா தூக்கி விட வருவாங்களோ என்னமோ !!!


PUT CALL RATIO 1.67 ன்னு இருக்காம் ... 1.7 - 1.8வந்துச்சுன்னா PROFIT BOOKING இருக்கும்ன்னு பேசிக்கிறாங்க ...


அப்புறம் முக்கியமான விஷயம் ... வியாழக்கிழமை 3100 PUT, 3400 CALL ,WRITING பண்ணி வச்சு இருக்காங்களாம் ...


இப்படிப்பட்ட சூழ்நிலையில் சொல்லிக்கிறது இன்னான்னா ... ,



நிஃப்ட்டி முடிஞ்சது (as on 02.04.2009) : 3211

இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 3165

தடை நிலைகள் : 3275,3335, 3440

தாங்கு நிலைகள் : 3105,3000,2940


பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.html


ஒரு நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது ... பார்த்து … படித்து தெரிந்து கொள்ளவும் ...

Friday, April 3, 2009

பங்குசந்தையில் கைப்புள்ளையும், கட்டதுரையும் …


நேற்றைய பங்குசந்தையில் கைப்புள்ளையாக SMALL INVESTORம் ,கட்டதுரையாக FII ம் இருந்தால் எப்படி இருந்திருக்கும் …
இப்படித்தான்,


(கைப்புள்ளை நிஃப்ட்டி 2920 ல SHORT போய் வச்சிருக்காரு ...)


கைப்புள்ளை ஆளு :


தல … தல ... சீக்கிரம் வெளிய வா தல ...

FII ஆளுங்க நம்ம பங்குசந்தையை ஏத்து ஏத்துன்னு ஏத்துறாங்க ...



கைப்புள்ளை :


FII க்கு கட்டம் சரியில்லை ...நம்ம கூட விளையாடுறதே அவனுக்கு வேலையா போச்சுடா ...

இன்னிக்கு முடிவு பண்றேண்டா ... இந்த கைப்புள்ளையா ... அந்த FIIயான்னு …


எடுறா வண்டிய ...அமுக்குடா ஹாரனை ...



மக்கள் :


அய்யயோ கைப்புள்ள பத்தாயிரத்தோட கிளம்பிட்டானே ... இன்னிக்கு பங்குச்சந்தை என்ன ஆகப்போகுதோ தெரியலயே !!!



கட்டதுரை :


என்ன கோடு இது ...



கைப்புள்ளை :

3150 , இந்த BORDERஐ தாண்டி நீயும் வரக்கூடாது ...நானும் வரமாட்டேன் ... பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் !!!



கட்டதுரை ஆளு :


சரி என்ன விஷயமா இங்க வந்தே ...



கைப்புள்ளை :


பங்குசந்தையை ஏத்துனது எவன் ...



கட்டதுரை :


அன் ...அன் ...சரியா காதுல விழலே ...கொஞ்சம் பக்கத்துல வந்து சொல்லு ...



கைப்புள்ளை :


நான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டேன் ... என் ஆளு அங்க வருவான் … சொல்லியனுப்பு !!!



கைப்புள்ளை ஆளு :


ஏத்துனது எவன்டா …



கட்டதுரை :


என்ன “டா”வா .. பிச்சிடுவேன் ...



கைப்புள்ளை :


டேய் FII ,நீ ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தேன்னா என் ஆளை அடிச்சி பாரு ...


(கைப்புள்ளை ஆள் அடிவாங்கிவிட்டார்)



கைப்புள்ளை :


டேய் …நான் ஒத்துக்கிறேன் .. ஓன் தாய் பத்தினிங்கிறதே ஒத்துக்கிறேன் ...NEXT MEET பண்றேன்



கைப்புள்ளை :



உங்களை எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு ... இதுவரைக்கும் 2600 கீழ போனதில்லே ...



கட்டதுரை ஆளு :


போன மாசம் தானே 2526 வந்தே ...



கைப்புள்ளை :


அது போன மாசம் … நான் சொல்றது இந்த மாசம் ...



கைப்புள்ளை :


இப்போ போறன் ...ஆனா திரும்பி ...



கட்டதுரை ஆளு :


திரும்பி …


கைப்புள்ளை :


வரமாட்டேன்னு சொல்ல வந்தேன் ...


வேணாம் …வேணாம் … வலிக்குது ….அழுதுர்வேன் !!!



கட்டதுரை :


நம்பர் சொல்லுடா மாபிள்ளை ...


3150,3185,3205,3242 ….



கைப்புள்ளை :


ஐயோ என் பணம் … பணம் ...அம்மா …



கைப்புள்ளை ஆளு :


என்ன தல … இந்த தடவ LOSS கொஞ்சம் OVER ஓ!!!



மக்கள் :


பத்தாயிரத்தை பறி கொடுத்த கைப்புள்ளைக்கே இந்த கதின்னா ... பங்குசந்தைக்கு என்ன அடி விழுந்திருக்கும் ...



கைப்புள்ளை :


இப்படி சொல்லி சொல்லியே பணத்தை பூரா புடிங்கிட்டாங்க ... இன்னுமா இந்த ஊரு நம்மளை நம்பிக்கிட்டு இருக்கு ...