Tuesday, April 21, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(21.04.2009)


நேற்றைய பங்குசந்தை (20.04.2009)


21.04.02009(செவ்வாய்)



நேற்று அமெரிக்க சந்தைகள் ரத்த வாந்தி எடுத்துள்ளன , காரணம் கேட்டா முதலீட்டாளர்களுக்கு வங்கி பங்குகள் மீது ஒரு வித பயம் வந்து பைசாவை உருவிட்டாங்கலாம் ... தற்போது அனைத்து ஆசிய சந்தைகளும் ரத்தம் கக்கிக் கொண்டு உள்ளன !!!


சிங்கப்பூர் நிஃப்ட்டியாரும் தற்போது குறைந்தபட்சமாக 3306.5 வரை சென்றுள்ளார் ...


நேத்தும் உள்ளூர் பயலுகளும் , அசலூர் பசங்களும் சேந்து CASH MARKET ல் வாங்கி இருந்தாலும் , FUTURE MARKET ல் வித்து வச்சி இருக்கானுங்க !!! நேத்து TURN OVER கொறஞ்சு போச்சுன்னு ஒரே FEELINGS !!!


இன்னிக்கு ரிசல்ட்டு வரும் முக்கிய நிறுவனங்கள் HERO HONDA, ROLTA, ULTRATECH CEMENT,PRAJ INDUSTRIES…இந்த பங்கை TRADING பண்றவங்க எல்லாம் ALERTஆ இருந்துக்கோங்க !!!


அது மட்டும் இல்லாம இன்னிக்கு RBI , MONETARY POLICY சொல்லப் போறாங்களாம் , நேத்து சொன்ன MACRO ECONOMIC REPORT ல GDP GROWTHபத்தி கொஞ்சம் கொறச்சு தான் மதிப்பிட்டுருக்காங்க, அதனால BECAREFUL !!!


3285-3310ஒரு முக்கிய தாங்கு நிலையாகவும் , 3390 முக்கிய தடை நிலையாகவும் இருக்க வேண்டும் , எந்த எண் உடைபடுகிறதோ அந்த திசையில் பயணிப்போம் ...


இன்னிக்கு தத்துவத்தை விட்டுட்டு ஒரு மொக்கை ஜோக் சொல்லலாம்னு நினைக்கிறேன் …

நிஃப்ட்டி முடிஞ்சது (as on 20.04.2009) : 3377

இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 3385

தடை நிலைகள் : 3435,3485,3530

தாங்கு நிலைகள் : 3330,3285,3230

பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...