Tuesday, February 17, 2009

அசோக் நாட்டாமையின் ஒரு பக்க கட்டுரைகள் (பங்குசந்தையைப் பற்றி … )பக்கம் - 5


இன்று நமது கட்டுரையில் OPTION என்றால் என்ன என்பதை பற்றி காண்போம் ...


OPTIONக்கு சிறந்த உதாரணம், ஒரு இடத்தை நாம் விலைக்கு வாங்கும் முன்பு எப்படி ஒரு சிறு தொகையை ADVANCEஆக கொடுத்து அந்த இடத்தின் உரிமையை வாங்கி வைப்போமோ அது மாதிரி சிறு தொகையை கொடுத்து அந்த பங்கின் உரிமையை வாங்குவது தான் OPTION. அந்த சிறு தொகைக்கு பெயர் “PREMIUM” ….



இந்த PREMIUM இரண்டு விலைகளை உள்ளடக்கியுள்ளது ... ஒன்று INTRINSIC VALUE, இரண்டு TIME VALUE …

அதாவது,


PREMIUM = INTRINSIC VALUE + TIME VALUE

இதைப் பற்றி பிறகு விளக்கமாக காண்போம் ....

OPTION ல ரெண்டு வகை உண்டு ...

(1) CALL OPTION

(2) PUT OPTION


முதலில் CALL OPTION பற்றிய விளக்கங்களை பார்ப்போம் ...


CALL OPTION – நாம் ஒரு பங்கின் விலை ஏறும்னு நினைத்தால் இதை வாங்கலாம் … பங்கின் விலை குறைந்து போனால் இதன் விலையும் குறையும்...


உதாரணமாக,

ஒரு இடம் 3 லட்சம் போகும் என்று நினைத்து நாம் ஒரு 10,000 ரூபாய் ADVANCE கொடுப்பதாக வைத்து கொள்வோம் ... நாம் என்ன செய்கிறோம் என்றால் அந்த இடத்தை வேறு ஒருவரிடம் விற்பதற்கு தயாராகிறோம் ...


வேறு ஒருவர் அதே இடம் 4 லட்சம் செல்லும் என்று நினைத்து உங்களுக்கு 15,000 ரூபாய் ADVANCE கொடுத்துவிட்டு அந்த இடத்தின் உரிமையை பெற்றுகொள்கிறார் ...அதனால் உங்களுக்கு லாபம் 5,000 ரூபாய் …


இதனால் நீங்கள் அறிந்து கொள்வது என்ன !!! அந்த இடத்தை வாங்குவதற்கு முழுப்பணமும் கொடுக்கவில்லை ....(அதாவது 3 லட்சம் ரூபாய்) நீங்கள் கொடுத்தது 10,000 ரூபாய் அதற்க்கு உங்களுக்கு லாபம் 5,000 ரூபாய் …


சரி விற்றவர் இதற்க்கு ஒத்துக்கொள்வாரா ...அவரும் இதை மாதிரி 8000 ரூபாய்க்கு வேறு ஒருவரிடம் வாங்கி 10,000 ரூபாய்க்கு நமக்கு கொடுத்தவராக இருக்கலாம் ...அல்லது ஒரு பெரும் தொகையை கட்டி அந்த இடத்திற்கு பட்டா போட்டவராக இருக்கலாம் ...


சரி அந்த இடத்தின் விலை இறங்கிவிட்டால் என்ன ஆகும் ...
3 லட்சம் மதிப்புள்ள இடம் தற்போது 2 லட்சம் தான் போகும் என தெரிகிறது ...யாராவது 2000 ரூபாய் அல்லது 2500 ரூபாய் ADVANCE கொடுத்தால் வந்ததை பெற்றுக்கொண்டு அந்த இடத்திலிருந்து விடுதலை வாங்கி விட வேண்டியது தான் …


நான் கொடுத்த பணம் எந்தனை நாளைக்கு செல்லுபடியாகும் என்பது நாம் போட்ட AGREEMENT படிதான் ... (ஒரு மாதம், இரண்டு மாதம், மூன்று மாதம்) ஒவ்வொரு மாதத்தின் கடைசி வியாழக்கிழமை அன்று AGREEMENT நிறைவு பெறும் ...


மாதத்தின் கடைசி வியாழக்கிழமை அன்று அந்த இடத்தை வாங்க யாரும் முன்வரவில்லை என்றால், நமக்கு ADVANCEஆக கொடுத்த 10,000ரூபாய் நஷ்டம் !!!


இதைத் தான் ஆங்கிலத்தில் “A CALL OPTION GIVES THE HOLDER THE RIGHT BUT NOT THE OBLIGATION TO BUY AN ASSET BY A CERTAIN DATE FOR A CERTAIN PRICE”


அதாவது தமிழில் “அந்த இடத்தை வாங்கணும் அப்படிங்கிற அவசியம் இல்லை ஆனால் AGREEMENT தேதி வரை கை மாத்தி விடுவதற்கு உரிமை உண்டு ....”

சரி சொன்ன கதை எல்லாம் EASYயா புரியுது, SHAREக்கு CALL OPTION எப்படி??? அதை வரும் நாட்களில் பார்ப்போம் ...

1 comment:

வடுவூர் குமார் said...

இது எனக்கு ரொம்ப புதுசு!!
இதில் இறங்க இருப்பவர்கள் மற்றும் காலை நனைத்திருப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.