Friday, April 17, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(17.04.2009)

நேற்றைய பங்குசந்தை (16.04.2009)



17.04.02009(வெள்ளி)

அமெரிக்காவில் பல DATAக்கள் எதிர்பாத்ததை விட சிறப்பாக இருந்ததால் தன்னை பச்சை நிறத்தில் தக்க வைத்துக்கொண்டது ...

ஆசியாக்கள் அண்ணாச்சி வழியிலேயே சென்று கொண்டிருக்கிறார்கள்...


சிங்கப்பூர் நிஃப்ட்டியாரும் தற்போது அதிகபட்சமாக 3450 வரை சென்றுள்ளார் ...


நேத்து நம்ம உள்ளூருக்காரன்வோ லாபத்தை வெளிய எடுத்துட்டாங்க ... அசலூர்க்காரங்க எவ்வளவோ முயற்சி பண்ணியும் சந்தயை காப்பாத்த முடியல !!!


அதனால அசலூர்க்காரங்க நம்ம லோக்கல் பயலுக மேல காண்டாத்தான் இருக்காங்க !!! அவுக எவ்வளவு கோவப்பட்டாலும் தாக்கு பிடிக்க முடியுமா நம்ம பயளுகளால !!!


நேற்று நமது சந்தையின் TURNOVER ரொம்ப நன்னா இருந்துச்சுன்னு பேசிக்கிறாங்க !!! சும்மாவா நம்மாளுங்க எனக்கு இன்னொரு முகம் இருக்குனுல்லா காமிச்சிருக்காங்க !!!


நேத்து SUZLON பங்கை சும்மா 19 சதவீதம் இறக்கி இருக்கானுங்க ... இன்னான்னு கேட்டா BLADE SUPPLY PROBLEM ன்னு சொல்றாங்க !!! துவைக்கனும்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் சோப்பு போட்டு துவைச்சா என்ன , சும்மா கல்லுல போட்டு குமுறுனா என்ன !!!(காரணம் தேடுறாங்களாம் …)


இன்னிக்கு ரெண்டு GATE PASS இருக்குதுங்க !!! 3310 க்கு கீழே முடிச்சா ...3480 நெருங்க முயற்சி பண்ணினா …


இப்படிப்பட்ட சூழ்நிலையில் சொல்லிக்கிறது இன்னான்னா ...,



நிஃப்ட்டி முடிஞ்சது (as on 16.04.2009) : 3370

இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 3410

தடை நிலைகள் : 3470,3565,3625

தாங்கு நிலைகள் : 3310,3255,3155


பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

3 comments:

Anonymous said...

"அசல் தல "அசோக் தங்கள் பார்வைக்கு தேங்க்ஸ்





by
rajendrann

Anonymous said...

"அசல் தல "அசோக் தங்கள் பார்வைக்கு தேங்க்ஸ்
by
rajendran

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

நாட்டமைக்குவணக்கமுங்க

(நம்மாளுங்க எனக்கு இன்னொரு முகம் இருக்குனுல்லா காமிச்சிருக்காங்க !!!)

அருமைங்க :)

( இன்னிக்கு ரெண்டு GATE PASS இருக்குதுங்க !!! 3310 க்கு கீழே முடிச்சா ...3480 நெருங்க முயற்சி பண்ணினா )

இப்பிடி சூசுகம சொன்ன எப்பிடி
கொன்சம் விளக்கம சொல்லுங்க அப்பு அப்ப தானே புரியும் எங்களுக்கு :-D :-)

நன்றி

முருகன் -சென்னை