Friday, March 20, 2009

இது 100 வது பதிப்பு !!! உங்களிடமிருந்து விடை பெறும் தருணம் !!!

எனது வலைத்தளத்திற்கு வந்து செல்பவர்கள் நினைப்பது …

சரி டென்ஷன் நிறைந்த இந்த சந்தையை கொஞ்சம் ரிலாக்ஸாக சொல்வோம் என்று ஆரம்பித்தது தான் இந்த ப்ளாக் …

ரெண்டு வாரத்திற்கு முன்பு சுற்றுலா சென்று இருந்த போது என் கூட்டாளி ஒரு கேள்வி கேட்டான் ....

நானும் சொன்னேன் ஒரு நாளைக்கு 100-120 பேராவது என் ப்ளாக் பார்கிறாங்க ... நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை அப்படின்னு நானும் விட்டு கொடுக்காம பேசினேன் ...

தினமும் ஒரு மணி நேரமாவது செலவழித்து ப்ளாக் அப்டேட் செய்றியே ... யாராவது ஒருத்தர் ஒரு நிமிடம் செலவழித்து உனக்கு ஒரு “ஹாய்” சொல்றாங்களா ...

ஆக்கப்பூர்வமா எழுதினா நாலு பேர் வந்து “GOOD , KEEP IT UP”ன்னு சொல்லிட்டு போறாங்க …மத்த நேரம் எல்லாம் ஒரு நாதி இருக்கா !!!

ஏற்கனவே நிறைய பேர் பங்குசந்தையை பற்றி எழுதி கொண்டு இருக்கிறார்கள் ... சரி நாமளும் எதுக்கு கொழப்ப வேண்டும் என்று ஒதுங்க முடிவு செய்துட்டான் இந்த அசோக் நாட்டாமை ...

16 comments:

தமிழ் அமுதன் said...

அய்யா நாட்டாம! இப்போ கொஞ்ச நாளாதான் உங்க பதிவுகள பார்க்குறேன்!

ரொம்ப பயனுள்ள விசயங்கள தரீங்க! இப்படி பொசுக்குன்னு நிறுத்துறேன்னு சொன்னா

எப்படிங்க? நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லுங்க!!!!

ttpian said...

நாடகம்!
எவ்வளவு நடிகர்கள்?
அடப்பாவிகளா!
நேற்று வரை நமக்கு குரல்....ஆனால், இன்ட்று
பதவி மோகம்.....
தமிழ் நாட்டு தமிழர்கள் என்ன செய்ய போகிரோம்?

எம்.எம்.அப்துல்லா said...

தினமும் நமக்கு எத்தனை ஹிட் என்பதை வைத்துதான் நம்மை அளவிட வேண்டுமே தவிர பின்னூட்டங்களை வைத்து அல்ல என்பது என் கருத்து. என்னைப் பொருத்தவரை பின்னூட்டம் என்பது துறை சார்ந்து எழுதும் பதிவுகளுக்கு பெரும்பாலும் யாரும் இடுவதில்லை.ஆனால் என்ன முரண்பாடு என்றால் அதிகம் பேர் படிக்கும் பதிவு டெக்னிகல் சம்மந்தப்பட்டதாகவே இருகும். நீங்களே சொன்னீர்களே 200 பேர் வருகின்றார்கள் என்று! நான் கூட உங்க பதிவுக்கு வருபவந்தான். ஆனால் பின்னூட்டம் இட்டதில்லை. தொடருங்கள் சகோதரரே...

எம்.எம்.அப்துல்லா said...

உங்கள் பதிவில் யார் பின்னூட்டம் இட்டார்கள் என்பது தெரியாது. அதனால் கூட வருபவர்கள் பின்னூட்டம் இடாது போகலாம் அல்லவா?? அதை சரி செய்யுங்களேன் :)

கோவி.கண்ணன் said...

//ஆக்கப்பூர்வமா எழுதினா நாலு பேர் வந்து “GOOD , KEEP IT UP”ன்னு சொல்லிட்டு போறாங்க …மத்த நேரம் எல்லாம் ஒரு நாதி இருக்கா !!!//

இதற்கு ஓரளவு எனக்கு தெரிந்தவழிமுறை சொல்லி இருக்கிறேன். இவற்றில் எதோனும் செய்திருக்கிறீர்களா ? என்று பாருங்கள்.

cool said...

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ? ஜாலியா டெய்லி படிக்கரமுங்க . திடீர்னு இப்படி சொன்னா என்ன பன்னுவோங்க என்ன பன்னுவோங்க என்ன பன்னுவோங்க .plz update daily

Anonymous said...

நாட்டாமை தீர்ப்பை மாத்திக்கூறு..

அருமையான பதிவுகள் உங்களது.. பலவிடயங்கலைக்கற்றுக்கொண்டோம். ஆனாலும் என்ன? தொழில்துறை சார்ந்த பதிவுகளில் 'ஆஹா அபாரம் பேஷ் பேஷ் ..இந்த வகையில் பதில் கூற முடியாது. உங்கள் கணிப்புகளை கற்றுக்கொள்ளலாமே தவிர கணிக்க முடியாது.

உங்கள் வசதிப்படி செய்யுங்கள் தொடர்ந்தால் மகிழ்வோம்..

-அன்புடன் எல்லாளன் கனடா

kumar said...

நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு, உங்களோட பிளாக்குல தொடர்ந்து பார்துக்கிட்டு வர்ரவஙளை ஏமாத்தாதே.

அசோசியேட் said...

தினமும் நமக்கு எத்தனை ஹிட் என்பதை வைத்துதான் நம்மை அளவிட வேண்டுமே தவிர பின்னூட்டங்களை வைத்து அல்ல என்பது என் கருத்து. என்னைப் பொருத்தவரை பின்னூட்டம் என்பது துறை சார்ந்து எழுதும் பதிவுகளுக்கு பெரும்பாலும் யாரும் இடுவதில்லை.ஆனால் என்ன முரண்பாடு என்றால் அதிகம் பேர் படிக்கும் பதிவு டெக்னிகல் சம்மந்தப்பட்டதாகவே இருகும். நீங்களே சொன்னீர்களே 200 பேர் வருகின்றார்கள் என்று! நான் கூட உங்க பதிவுக்கு வருபவந்தான். ஆனால் பின்னூட்டம் இட்டதில்லை. தொடருங்கள் சகோதரரே...

REPEATED/REPEATED/REPEATED......

GANESH PL said...

தினமும் நமக்கு எத்தனை ஹிட் என்பதை வைத்துதான் நம்மை அளவிட வேண்டுமே தவிர பின்னூட்டங்களை வைத்து அல்ல என்பது என் கருத்து. என்னைப் பொருத்தவரை பின்னூட்டம் என்பது துறை சார்ந்து எழுதும் பதிவுகளுக்கு பெரும்பாலும் யாரும் இடுவதில்லை.ஆனால் என்ன முரண்பாடு என்றால் அதிகம் பேர் படிக்கும் பதிவு டெக்னிகல் சம்மந்தப்பட்டதாகவே இருகும். நீங்களே சொன்னீர்களே 200 பேர் வருகின்றார்கள் என்று! நான் கூட உங்க பதிவுக்கு வருபவந்தான். ஆனால் பின்னூட்டம் இட்டதில்லை. தொடருங்கள் சகோதரரே...

I AM ALSO REPEAT HIS COMMENTS, PLEASE CONTINUE YOUR BLOG AS USUAL..

Anonymous said...

Ashok i like your blog very much.very jolly blog.one of my favorite blog. even in your last episode I enjoied yoyr way of writing.try to write daily.iwe will meet monday. Nithya.

Anonymous said...

please continue ... don't stop!!!

மிளகாய் said...

இப்பத்தான் நூல் பிடிச்ச மாதிரி, உங்களுக்குன்னு ஒரு தனி பாணியில வளர ஆரம்பிச்சிருக்கீங்க....அதுக்குள்ள சுணங்குனா எப்படி...

தேவர் மகன் படத்துல ஒரு வசனம் வரும்...

http://www.youtube.com/watch?v=ul9Xvjt83eI

இதுல சிவாஜி இந்த பதிவை படிக்கறவய்ங்க....கமல் நீங்க...புரிஞ்சிக்கங்க... :)

muru said...

THANK YOU Ashok ofcourse iam not regular reader of your blog,but most of the time i am reading your blog ,i feel you are doing good job,please continue dont worry about comments
Rome not bulit in one day.100 can 1000 and more.think again before stopping

Thanks and regards,

Murugesan

Anonymous said...

hai asok
continue your blog
its intresting
by sriram

கிரி said...

இப்படி எல்லாம் கலக்கமடையலாமா! கோதாவுல இறங்குங்க :-)