Thursday, January 1, 2009

இன்று ஒரு தகவல்...02.01.2009(வெள்ளி)



நேற்று நமது சந்தைகள் பணவீக்கம் குறைந்த செய்தியாலும், ஊக்கதொகை அறிவிப்பு வரும் சனிக்கிழமை வெளியிடப்படும் என்ற நம்பிக்கையாலும், மலும் புத்தாண்டு என்ற சென்டிமென்ட்டாலும் நேற்றைய நமது சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்தது......


தற்போது துவங்கிய ஆசிய சந்தைகள் பச்சை நிறத்தை காட்டியுள்ளன.....



கச்சா எண்ணையின் விலை அதே 42 டாலரில் சுற்றி கொண்டு இருக்கிறது .....


3000, 3100 கால் ஆப்ஸனில் OPEN INTREST கொரஞ்சு இருக்காம்....அதனால 3100 முக்யமான தடைக்கல்லா இருக்குமாம்....


கட்டுமான துறை பங்குகளுக்கு இப்போ கொஞ்சம் மவுசு கூடி இருக்கு .....



நிப்ட்டி முடிஞ்சது (as on 01.01.2009) : 3033.45

பிவோட் புள்ளி : 3010

சப்போர்ட் நிலைகள் : 2985,2940,2905

தடுப்பு நிலைகள் : 3060,3085,3135

இன்று ஒரு தகவல்...01.01.02009(வியாழன்)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

புதன் அன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் புத்தாண்டு சந்தோசத்துடன் முடிந்து உள்ளன.... அனேக ஆசிய சந்தைகளுக்கு இன்று விடுமுறை, அமெரிக்கா சந்தைகளுக்கும் இன்று விடுமுறை.....அதனால் நாம் தனித்து செயல்படவேண்டிய கட்டாயம் ....


கச்சா எண்ணையின் விலை 42 டாலரை மறுபடியும் தொட்டு இருக்கிறது ..... ஒரு நாளில் 10 சதவீத ஏற்றம் கண்டுள்ளது….


கடந்த வாரம வெளிவந்த பணவீக்கத்தை விட இன்று பணவீக்கம் குறைய வாய்ப்பு இருப்பதாக CNBC TV 18 கருத்துகணிப்பு தெரிவிக்கின்றன...(6.61% TO 6.36%)


S&P, ரிலையன்ஸ் தர குறியீட்டை குறைச்சு மதிப்பிட்டு இருக்குதுபா....


2008 கதறல்கள் :( 2008 துவக்கத்தில் முதலீடு செய்திருந்தால் இழப்பது எவ்வளவு)


SENSEX, NIFTY -50%

REALTY INDEX-80%

METAL INDEX-74%

CAPITALGOODS INDEX-65%

OIL&GAS INDEX-55%

HEALTHCARE INDEX-33%

FMCG INDEX-14%


நிப்ட்டி முடிஞ்சது (as on 01.01.2009) : 2959.20

பிவோட் புள்ளி : 2965

சப்போர்ட் நிலைகள் : 2930,2900,2865

தடுப்பு நிலைகள் : 2990,3030,3060


குறிப்பு :

நான் இங்கு கூறும் தகவல்கள் ஒரு டைரி எழுதுவது போல் பாவித்து எழுதுகிறேன்.... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல......

Wednesday, December 31, 2008

இன்று ஒரு தகவல் ...31.12.2008 (புதன்)



இன்று வருடத்தின் கடைசி வர்த்தக நாள்.....

செவ்வாய் அன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் குதூகலத்துடன் முடிந்து உள்ளன.... தற்போது துவங்கிய ஆசிய சந்தைகளில் அந்த சுறுசுறுப்பு இப்போ வந்திருக்கு.....

ஜப்பான், தென் கொரிய சந்தைகளுக்கு ஜனவரி 5 ந் தேதி வரை விடுமுறையாம் ......

கச்சா எண்ணையின் விலை 39 டாலரில் சுற்றி கொண்டு இருக்கிறது .....
நேத்து நம்ம ஊரு பயலுகளும் , வெளிநாட்டு பயலுகளும் மாத்தி மாத்தி வாங்கி இருக்கானுங்க....

கொடுக்கிற ஊக்க தொகை அறிவிப்பு மற்றும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவிப்பு இன்றோ அல்லது இந்த வார இறுதிக்குள்ளோ சொல்லுவானுங்க போலிருக்கு....

சத்யம் கம்ப்யூட்டர் பத்தி டெய்லி செய்திகள் வந்துட்டே இருந்தாலும் "என் வழி தனி வழி" ன்னு போய்க்ன்கினே இருக்காரு....ஜனவரி 10 ந் தேதி தெரிஞ்சுரும் அவர் யாருன்னு....

நம்ம எதிர் பாக்கிறது எல்லாம் அதிகமாத்தான் இருக்கு....ஆனா எதிர் பாத்த அளவுக்கு தகவல்கள் வருமா ? பொறுத்திருந்து பாப்போம்.
இந்த வருஷம் மார்க்கெட் சரிந்தாலும் முதலீட்டார்களுக்கு வருமானத்தை இந்த மூணு கம்பெனியும் கொடுத்திருக்காம்....

HUL (18%),

HEROHONDA(16%),

GLAXOMITH PHARMA(12%)

எதுக்கும் மைன்ட்ல வச்சுக்குவோம்


இன்னிக்கு நிப்ட்டி பிவோட் நிலைகள்.........


நிப்ட்டி முடிஞ்சது (as on 30.12.2008)


பிவோட் புள்ளி :

சப்போர்ட் நிலைகள் : 2920,2860,2828

தடுப்பு நிலைகள் : 3020,3060,3120

Thursday, December 25, 2008

இன்று ஒரு தகவல்....30.12.2008(செவ்வாய்)

திங்கள் அன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் கொஞ்சம் சிவப்பு நிறத்தை காட்டி உள்ளன.... தற்போது துவங்கிய ஆசிய சந்தைகள் குதுகலத்துடன் தொடங்கி இருக்கு....


கச்சா எண்ணையின் விலை 40 டாலரை தாண்டிருச்சு.....


கவர்மெண்ட் நல்ல சேதி சொல்லும்ன்கிற நம்பிக்கைல நேத்து மார்க்கெட் ஏத்திட்டானுங்க.....எல்லாம் நம்ம ஊரு பயலுகதான்(DII) வாங்கி இருக்கானுங்க ......


பெட்ரோல், டீசல் விலை குறைப்பாங்கன்னு எதிர் பாக்காங்கலாம்….


PNB, BOB வட்டி விகிதத்தை 100 BPS குறைச்சு இருகாங்கலாம் ......


சத்யம் கம்ப்யூட்டர்ல மூணு பெருந்தலைகள் பதவிய தொறந்துட்டாங்களாம்...



இன்னிக்கு நிப்ட்டி பிவோட் நிலைகள்.........

நிப்ட்டி முடிஞ்சது (as on 29.12.2008) : 2922.௨0

பிவோட் புள்ளி : 2890

சப்போர்ட் நிலைகள் : 2845,2770,2727

தடுப்பு நிலைகள் : 2965,3005,3080

குறிப்பு :

நான் இங்கு கூறும் தகவல்கள் ஒரு டைரி எழுதுவது போல் பாவித்து எழுதுகிறேன்.... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல......




இன்று ஒரு தகவல் ...29.12.2008(திங்கள்)


வெள்ளி அன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் கொஞ்சம் பச்சை நிறத்தை காட்டி உள்ளன.... தற்போது துவங்கிய ஆசிய சந்தைகள் FLAT and NEGATIVE bias போல் நடந்துட்டு இருக்கு....


கச்சா எண்ணையின் விலை 39.25 டாலரை நெருங்கி உள்ளது......


சத்யம் கம்ப்யூட்டர் இன்று நடக்கவிருந்த போர்டு மீட்டிங் ஜனவரி 10 ந்த் தேதி ஒத்தி போட்டுட்டாங்கலாம்….. தை பொறந்தாலாச்சு வழி பொறகட்டும்……


வெள்ளிக்கிழமை சந்தைல டர்ன் ஓவர் ரொம்ப கம்மியா இருந்ததுன்னு பொலம்பறாங்க...காரணம் இன்னானா நம்ம ஊர்ல முதலீடு செய்ற வெளிநாட்டுகாரங்க லீவுல போய்டாங்கலாம்...... இந்த புள்ளைங்க இப்பிடி பொறுப்பு இல்லாம இருக்கானுங்க.....


இந்த வாரம் கவர்மெண்ட் பேங்குக்கு நல்ல சேதி சொல்லும் போல தெரியுது .......எதுக்கும் பேங்க், ரியல் எஸ்டேட் பங்குல எல்லாம் ஒரு கண்ணை வச்சுக்கலாம்........


கவர்மெண்ட் சொல்ற நல்ல சேதி வந்துச்சுன்னா மறுபடியும் நிபிட்டி 3000 போகும்னு பேசிக்கிரானுங்க.... வரலைனா ?????
ஆனா என்னமோ நம்ம ஊர்ல முதலீடு செய்ற வெளிநாட்டுகராங்களுக்கு வித்துட்டு போக வழி விடுரோமோன்னு டவுட்டாவே இருக்கு....


இன்னிக்கு நிப்ட்டி பிவோட் நிலைகள்.........


நிப்ட்டி முடிஞ்சது (as on 26.12.2008) : 2857.25


பிவோட் புள்ளி : 2890


சப்போர்ட் நிலைகள் : 2815,2775,2700


தடுப்பு நிலைகள் : 2930,3000,3045


குறிப்பு :

நான் இங்கு கூறும் தகவல்கள் ஒரு டைரி எழுதுவது போல் பாவித்து எழுதுகிறேன்.... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல......




இன்று ஒரு தகவல் ...26.12.2008 (வெள்ளி)


புதன் அன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் கொஞ்சம் பச்சை நிறத்தை காட்டி உள்ளன.... தற்போது துவங்கிய ஆசிய சந்தைகள் மதில் மேல் பூனை போல் பயனிக்கின்றன.....

கச்சா எண்ணையின் விலை 36 டாலரை நெருங்கி உள்ளது......

கடந்த வாரம வெளிவந்த பணவீக்கத்தை விட இன்று பணவீக்கம் குறைய வாய்ப்பு இருப்பதாக CNBC TV 18 கருத்துகணிப்பு தெரிவிக்கின்றன..(6.84% TO 6.59%)

சத்யம் - உலக வங்கி பனிப்போர் தொடர்கின்றன…..

இன்று ஹாங் காங் சந்தை
விடுமுறை….(கிறிஸ்துமஸ் இன்னும் முடியவில்லை)


இன்றைய நிப்ட்டி பிவோட் நிலைகள்.........

நிப்ட்டி முடிவுற்ற நிலை(as on 24.12.2008) : 2968.65

பிவோட் புள்ளி : 2990

சப்போர்ட் நிலைகள் : 2935, 2905,2855

தடுப்பு நிலைகள் : 3020,3070,3105.

குறிப்பு :

நான் இங்கு கூறும் தகவல்கள் ஒரு டைரி எழுதுவது போல் பாவித்து எழுதுகிரேன்.... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல......

பங்கு வர்த்தகத்திற்கு பத்து கட்டளைகள்!!!

(1)முதலில் நீங்கள் INVESTOR அல்லது DAY TRADER என்பதை முடிவு செய்யவும்....


(2)நீங்கள் செய்த வர்த்தகம் உங்களுக்கு எதிராக செல்வதை உணர்ந்தால்...தயவு செய்து எப்போது வெளி வரலாம் என்று உணர்ச்சி வசப்படாமல் சிந்திக்கவும்....


(3)அதிக எண்ணிக்கையில் வர்த்தகமாகும் பங்குகளை தேர்ந்தேடுக்கவும்.....(Active & High volume stocks)


(4)தயவு செய்து குறைந்த விலையில் கிடைக்கிறது என்று வாங்காதீர்கள் ......(ஏனென்றால் இன்னும் விலை குறைய நிறைய வாய்ப்பு இருக்கும்...)


(5)அதிகமாக வர்த்தகம்(TRADING) செய்வதை தவிருங்கள்...


(6)நம் மக்கள் பலர் நஷ்டம் வந்தால் கை கட்டி கொண்டு பார்த்து கொண்டு இருப்பார்கள் ஆனால் அதே லாபத்தே வளர விட மாட்டார்கள் ...உடனே கவர் செய்து விடுவார்கள் .....அதனால் ஒவ்வொரு வர்த்தகத்திலும் ஸ்டாப்-லாஸ் கண்டிப்பாக பின்பற்றுங்கள்.....


(7)நஷ்டத்தை குறைக்க மீண்டும் வாங்கியோ அல்லது விற்றோ ஆவ்வேரஜ் செய்யாதீர்கள்....அந்த வர்த்தகத்தை மறந்து அடுத்த வர்த்தகத்திற்கு தயாராகுங்கள்....


(8)இன்னும் சிலர் இருக்கிறார்கள், எதாவது ஒன்று அல்லது இரண்டு பங்குகளை மட்டுமே பார்த்து கொண்டு இருப்பார்கள்....சில சமயம் நாம் எதிர் பார்த்த நகர்வுகளை அந்த பங்கு தராமல் பல் இளித்து விடும்...அதனால் ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கிணங்க தினசரி கூட வெவ்வேறு பங்குகளில் வர்த்தகம் செய்யலாம்... (வர்த்தகம் தொடங்குவதற்கு முன் அதன் நகர்வுகளை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளவும் )


(9)தினமும் நீங்கள் செய்த வர்த்தகத்தின் வெற்றி தோல்விகளை குறிப்பெடுத்து கொள்ளுங்கள்...தோல்விகளை எல்லாம் வெற்றி ஆக்கும் வழிகளை கண்டறியுங்கள்.... வெற்றி தோல்விகளை பக்குவமாக எடுத்து கொள்ள மனத்தை தயார் படுத்துங்கள்....


(10)ஒரு நாளைக்கு சுமார் 50000 TO 70000 கோடிகள் வர்த்தகம் ஆகின்றன ...இதில் என்னால் நான் விருப்பப்பட்ட நேரத்தில் எனக்கு தேவையான பணத்தை எடுத்து கொள்ள முடியும் என்ற எண்ணத்திற்கு வாருங்கள் ... என் வீட்டு பீரோவிலிருந்து பைசா எடுக்க எனக்கென்ன பயம் என்ற நிலை வர வேண்டும். எப்போ வேணும்னாலும் நாம கோடிகள் சம்பாதிக்கலாம் ..... (WAIT FOR THE RIGHT TIME)

சந்தை ஏறுவதும்,இறங்குவதும்.........(சிறுகதை)

ஒரு தீவு. அந்த தீவில் புழக்கத்தில் இருந்தது இரண்டு ‘ஒரு ரூபாய்’ நாணயங்கள் மட்டுமே.

அந்த தீவில் குடியிருப்போர் மூன்று பேர். முகேஷ் மற்றும் அனில் ஆளுக்கொரு ரூபாய் வைத்திருந்தனர். மூர்த்தியிடம் பணம் இருக்கவில்லை. ஆனால் அவன் ஒரு தென்னங்கன்று வளர்த்தான்.

முகேஷ் அதை ஒரு பணம் காய்ச்சி மரம் என்பதை எப்படியோ புரிந்து கொண்டு மூர்த்திக்கு ஒரு ரூபாய் கொடுத்து மரத்தை வாங்கினான். இப்போது தீவின் மதிப்பு மூன்று ரூபாய்கள். அதாவது மூர்த்தி அனில் இருவரிடமும் ஒவ்வொரு ரூபாயும் முகேஷிடம் ஒரு ரூபாய் மதிப்புள்ள மரமும் இருக்கிறது.

இதைக் கண்ட அனில் பணம் காய்ச்சி மரம் பிற்காலத்தில் பயன்படும் என்று மூர்த்தியிடம் ஒரு ரூபாய் கடன் வாங்கி தனது ஒரு ரூபாயையும் சேர்த்து முகேஷிடமிருந்து இரண்டு ரூபாய் கொடுத்து மரத்தை வாங்கினான். இப்போது தீவின் மதிப்பு நான்கு ரூபாய்கள். அதாவது மரம் 2 ரூபாய், முகேஷிடம் 2 ரூபாய்.

மரத்தின் விலை ஏறுவதைக் கண்ட மூர்த்தி அதை விற்றதற்காக மனம் வருந்தி முகேஷிடம் 2 ரூபாய் கடன் வாங்கி அனிலிடம அவன் (அனில்)ஏற்கனவே பட்டிருந்த ஒரு ரூபாய் கடனையும் தள்ளுபடி செய்து மீண்டும் மரத்தை வாங்கினான். இப்போது மரத்தின் மதிப்பு 3 ரூபாய்கள். அனிலிடம் 2 ரூபாய்கள். தீவின் மதிப்பு 5 ரூபாய்கள்.

அடடே மரத்தின் விலை கூடிக்கொண்டே போகிறதே என்று முகேஷ் அனிலிடம் 2 ரூபாய் கடன் வாங்கி மூர்த்தியின் 2 ரூபாய் கடனை தள்ளுபடி செய்து 4 ரூபாய்களுக்கு மரத்தை கிரயம் செய்தான். இப்போது மூர்த்தியிடம் 2 ரூபாய்கள். தீவின் மதிப்பு 4 +2 =6 ரூபாய்கள்.

திடீரென்று அனிலுக்கு கவலைப் பிடித்துக்கொண்டது. மரம் நினைத்தபடி பலன் தராமல் போய்விட்டால் முகேஷ் எப்படி தன்னுடைய 2 ரூபாய் கடனை திருப்பித்தர முடியும். மூர்த்திக்கும் அதே கவலை பிடித்துக் கொண்டது. அதனால் கையில் பணமிருந்தும் அவன் மரத்தை விலை பேச முன்வரவில்லை. என்னதான் சொன்னாலும் காய்க்காத தென்னங்கன்றின் மதிப்பு ஒரு ரூபாய்தான் என்பதை புரிந்து கொண்டான் அவன்.

இப்போது மரத்தை வாங்குவோர் இல்லை. மூர்த்தியிடம் 2 ரூபாய்கள் இருக்கிறது. முகேஷிடம் 4 ரூபாய் மதிப்புள்ள மரம் ஒரு ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. எனவே அவன்
அனிலுக்கு கொடுக்க வேண்டிய 2 ரூபாய் கடனில் ஒரு ரூபாய் மட்டுமே திருப்பித்தர இயலும்.

முகேஷ் திவாலாகிப் போனான். முகேஷ் பட்ட கடனை அனில் திரும்பாதக் கடனாகத் தள்ளுபடி செய்தான். இப்பொது தீவின் மதிப்பு மீண்டும் 3 ரூபாய்கள். 6 ரூபாயில் இழந்த 3 ரூபாய்கள் எங்கே போயிற்று ?

கதை சொல்லும் நெறி.

எளிமை கருதி வர்த்தகம் மூவருக்குள்ளே நடப்பதாக காட்டப்பட்டது. அங்கே இன்னுமொரு மரம் இருந்து ரத்தன் என்பவன் சொந்தக்காரனாக இருந்திருந்தால் இன்னும் ருசிகரமான கைமாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். ரத்தன் விளையாட்டில் சேராமல் வேடிக்கைப் பார்த்தாலும் அவனுடைய மரத்தின் விலையும் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்திருக்கும். அதற்குதகுந்தாற்போல் தீவின் மதிப்பு ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கும்.

இதைத் தவிர வெளித் தீவிலிருந்து யாரேனும் முதலீடு செய்ய முற்பட்டிருந்தால் பணபுழக்கம் அதிகரித்து தீவின் மதிப்பும் காகிதத்தில் உயர்ந்து கொண்டே போகும். புத்திசாலியான வெளியாள் செயற்கையாக விலையை ஏற்றி, மரத்தை சமயம் பார்த்து உள்ளுர்காரனுக்கே அதிக விலையில் விற்று தன்னுடைய வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்றிக் கொண்டு போயே போய் விடுவான். அப்போது தீவில் உள்ளவர்கள் ஏமாளிகளாக அமர்ந்திருக்க வேண்டியது தான்.

பங்குச் சந்தை செய்கின்ற குளறுபடிகளும் இப்படிபட்டதே. எவனொருவன் வேகமாய் பணமாக மாற்றிக் கொள்வானோ அவனே புத்திசாலி. பங்கு காகிதத்தை நம்பி பணம் கொடுத்த வங்கிகளுக்கும், கடன் வாங்கி முதலீடு செய்வோருக்கும் கடைசியில் தலையிலே துண்டு.

சுப்பன்,ரங்கன் அரட்டை…(22.12.2008-26.12.2008)

சுப்பன் :

என்ன ரங்கா இன்னிக்கு மார்க்கெட் இப்பிடி எறங்கி போச்சு...

ரங்கன் :

அட போ சுப்பா.... காலைல நல்லாத்தான் ஆரம்பிச்சுது.... சரி பணவீக்கம் வந்தா சரியாடும்னு பாத்தா இறங்கிட்டே போகுது .... முன்னே எல்லாம் பணவீக்கம் ஏறுதுனு கவலை பட்டாங்க... நியாயம்,மார்கட் இறங்கிச்சு....இப்போ என்னடான்னா பணவீக்கம் இறங்கினாலும் கவலைபடறதை இல்ல....என்னமோ போடா சுப்பா...

சுப்பன் :

ரிலையன்ஸ் பெட்ரோலியம்ஏதோ உற்பத்தி ஆரம்பிச்சுட்டாங்கலாமே.....

ரங்கன் :

புலி வருது கதையா இருந்தது இன்னிக்குஅந்த சேதி வந்தாலும் வந்தது 79 ரூபாய்க்கு முடிச்சதை கொண்டு 90 ரூபாய்க்கு கொண்டு போய்டாங்க ...ஆனா பாவம் மார்க்கெட் இறங்கும் போது... அவங்களும் சேர்ந்தே உடன்கட்டை ஏறிட்டாங்க...திங்கள் கிழமை பார்போம் என்ன தான் மனசுல நினைச்சிட்டு இருக்காங்கனு .....

சுப்பன் :

சத்யம் கம்ப்யூட்டர் ஒரு மாதிரியா நிக்கான் ....

ரங்கன் :

அவரு இப்போ ஓவரா குடிச்சிட்டு வாந்தி எடுத்தா எப்படி இருக்கும்.. அது மாதிரி நிக்கிறாரு...

சுப்பன் :

புரியலய...

ரங்கன் :

அதான்பா ஏன்டா குடிச்சோம் ஏன்டா வாந்தி எடுத்தோம்னு தோணுமே அது மாதிரி ஏன் அந்த மைதா(Mytas Infra) வாங்க போறோம்னு சொன்னோம் ...இப்படி இறக்கி விட்டுடாங்களே...போதா கொறைக்கு உலக வங்கி சேதி வேற....பிலட்(FLAT) ஆகுதா இல்ல தெளிஞ்சு வருதானு பாப்போம்

சுப்பன் :

இன்னாப்பா ரியல் எஸ்டேட் பூராத்தையும் ரீல் எஸ்டேட் ஆக்கிட்டாங்க....

ரங்கன் :

அந்த சோகத்தை ஏன் கேக்குறே...கவர்மேண்ட் ரெப்போ ரேட் கட் பண்ணாங்க ....பேங்க் எல்லாம் வட்டிய கொரச்சாங்க... சரி உயிர் வந்திருச்சோன்னு பாத்தா ....போர் அப்படிங்கிற போர்வய போட்டு அடி அடின்னு அடிகிறாங்க....நானும் எவ்வளவு நாள் தான் நல்லவனா நடிக்கிறது, வடிவேலு கத ஆக்கிட்டாங்கப்பா.....

சரி பேசிட்டே இருந்தா இவனுக கதைய பேசிட்டே இருக்கலாம் ...ரெண்டு நாள் இதை எல்லாம் மறந்துட்டு சந்தோசமா இருக்கலாம்,,,. அடுத்த வாரம் பாக்கலாம்....

ஊட்டுல பொண்டாடிய புள்ளைய கேட்டதா சொல்லு.....குளிர் மாசம் வேற ஒடம்ப பத்ரம்மா பாத்துக்க..... அடுத்த வாரம் பாக்கலாம்....

சுப்பன் :

ஒனக்கு தான் கல்யாணம் ஆகலை ....அதனால உன்னை நீயே பாத்துக்கோ .....பாப்போம் அடுத்த வாரம்....


(சுப்பன்,ரங்கன் அரட்டை தொடரும்.......)

Sunday, October 26, 2008

பங்கு சந்தை பாடல்கள் ...

லாபம் வருமா என …

(SING THIS SONG LIKE NEE VARUVAAI ENA……)

பார்த்து பார்த்து கண்கள் பூத்து இருப்பேன் ….. லாபம் வருமா என….

பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன் ….. லாபம் வருமா என….

GAP UP ஆஹ நீ வருவாயா HAPPY ஆகிறேன்…

GAP DOWN ஆஹ நீ வருவாயா சோகமாகிறேன்….

DIVIDEND ஆஹ நீ வருவாயா டாலடிக்கிறேன்……

லாபம் வருமா என……லாபம் வருமா என……

COMPANY TECHNICAL NEWS உனக்கென தினம் தினம் சேகரிக்கிறேன்…..

தமிழில் பங்கு வணிகம் ,பணம் பண்ணலாம் வாங்க நீ படிப்பாய் என வாசகன் ஆகிவிட்டேன்…..

சோம வள்ளியப்பன் புக்கோடு செல்லமுத்து குப்புசாமி புக்கையும் உனக்காய் சேமிக்கிறேன்…..

கனவில்… உன்னை என்ன செய்யலாம் தினமும் யோசிக்கிறேன்….

உன்னை பத்தி ஒரு நியூஸ் கிடைச்சாலும் அந்த SITE போய் பார்க்கிறேன்….

லாபம் வருமா என……


லாபம் வருமா என……

நன்றி...