Tuesday, February 10, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(10.02.2009)


10.02.02009(செவ்வாய்)
நேற்று அமெரிக்க சந்தைகள் FLAT ஆக முடிந்துள்ளன ...பணத்தை வாரி இறைப்பது மட்டும் அரசின் நோக்கம் அல்ல ...90 சதவீத வேலை வாய்ப்பையும் தனியார் நிறுவனங்களின் வாயிலாக ஏற்படுத்தி தருவதும் அரசின் நோக்கமாகும் என்று ஒபாமா வீராவேசமா பேசி இருக்கிறார் ...

தற்போது துவங்கிய ஆசிய சந்தைகள் மதில் மேல் பூனை போல் பயணித்துக் கொண்டு இருக்கின்றன ...


கச்சா எண்ணையின் விலை 39-40 டாலர்ல இருக்கு ...


நேற்றைய வணிகத்தில் INFRA STRUTURE துறை பங்குகள் மிளிர்ந்தன ...(GMRINFRA, IVRCL INFRA,GVKPIL …)


SEBI கழுகு கண்களுக்கு L&T சிக்கியுள்ளது ... நாய்க்கு(SATYAM COMPUTER) வாழ்க்கை பட்டா குரைத்து தானே ஆக வேண்டும் ...


SATYAM COMPUTER ன் புதிய நிர்வாக குழு தற்போதைய பண தேவையை நிறைவு செய்து கொள்வதற்காக IDBI யிடம் 300 கோடியும், BANK OF BARODA யிடம் 300 கோடியும் கடனாகப் பெற்றுள்ளது ...


GDP(Gross Domestic Product ) மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1% ஆக உள்ளது (2008 -2009) …


F&Oவில் TURNOVER நேற்று பரவா இல்லை ....ஏனென்றால் வெளிநாட்டு பயலுக கொஞ்சம் வாங்க ஆரம்பிச்சுடாங்க அப்படின்னு சொல்ல முடியாது ... SHORT COVERING தான் !!!


எது எப்படினாலும் நிஃப்ட்டில 3000 அப்படிங்கிறது பெரும் தடுப்பா இன்னிக்கு வரைக்கும் இருக்கு ...


PLEDGED SHARES பற்றிய அறிக்கை ….


(1) TATA STEEL 14.6%
(2) TATA POWER 13%
(3) INDIA CEMENTS 82%
(4) TTML 49.7%


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 09.02.2009) : 2920


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2895

தாங்கு நிலைகள் : 2865,2810,2775

தடை நிலைகள் : 2950,2980,3035


அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."


குறிப்பு :

இங்கே சொல்வது சந்தை நிலவரங்கள் ... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல ....

No comments: