தினவர்த்தகத்தில் சில விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் பங்கு சந்தையிலிருந்து விரைவில் தூக்கி எறியப்படுவீர்கள் ...
(1)தினவர்த்தகர்கள், நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற முழு திட்டத்துடன் உள்ளே வர வேண்டும் ...எந்த பங்கை வாங்கப்போகிறோம் அல்லது விற்கப்போகிறோம், என்ன விலைக்கு இதை செய்ய வேண்டும் போன்ற திட்டங்கள் ...
(2) தினவர்த்தகர்கள் பொறுமையையும், நம்பிக்கையையும் கடைப்பிடிக்க வேண்டும் ...எந்தவொரு சமயத்திலேயும் இந்த இரண்டுக்கும் பங்கம் வந்து விட கூடாது ...
(3) தினமும் நீங்கள் செய்த வர்த்தகத்தின் வெற்றி தோல்விகளை குறிப்பெடுத்து கொள்ளுங்கள் ...தோல்விகளை எல்லாம் வெற்றி ஆக்கும் வழிகளை கண்டறியுங்கள் ... வெற்றி தோல்விகளை பக்குவமாக எடுத்து கொள்ள மனதை தயார் படுத்துங்கள்....
(4) நீங்கள் செய்த வர்த்தகம் உங்களுக்கு எதிராக செல்வதை உணர்ந்தால்...தயவு செய்து எப்போது வெளி வரலாம் என்று உணர்ச்சி வசப்படாமல் சிந்திக்கவும் …
(5) நஷ்டத்தை குறைக்க மீண்டும் வாங்கியோ அல்லது விற்றோ ஆவ்வேரஜ் செய்யாதீர்கள்....அந்த வர்த்தகத்தை மறந்து அடுத்த வர்த்தகத்திற்கு தயாராகுங்கள் ...
(6) தினவர்த்தகர்கள் பலர் நஷ்டம் வந்தால் கை கட்டி கொண்டு பார்த்து கொண்டு இருப்பார்கள் ஆனால் அதே லாபத்தே வளர விட மாட்டார்கள் ...உடனே கவர் செய்து விடுவார்கள் ... அதனால் ஒவ்வொரு வர்த்தகத்திலும் ஸ்டாப்-லாஸ் கண்டிப்பாக பின்பற்றுங்கள் ... எந்தவொரு இடத்திலும் உங்கள் பணம்
10 சதவீதத்திற்கு மேல் குறையாமல் அதாங்க நஷ்டம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் ...
(7) தினவர்த்தகர்கள் வார இறுதி நாட்களை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் ...தன் தொழிலுக்கு தேவையான புத்தகங்களை படிப்பதும் , பயனுள்ள தவல்களை சேகரிப்பதுமாக இருக்க வேண்டும் ...
(8) தினவர்த்தகர்கள் மொத்த பணத்தையும் வணிகத்திற்கு பயன்படுத்தக்கூடாது ...கையிருப்பு தங்கள் சக்திக்கு ஏற்றார்போல் வைத்துக்கொள்ள வேண்டும் ...
(9) தினவர்த்தகர்கள் பகல் கனவு காண்பதை தவிர்க்க வேண்டும் ... அதாங்க ஒரே நாளில் கோடீஸ்வரன், லட்சாதிபதி ஆவது போல ... வாய்ப்புகளுக்காக காத்திருக்க வேண்டும் ...
(10) இதற்க்கெல்லாம் முதலில் நீங்கள் தின வர்த்தகர் தானா என்று உங்களுக்கு நீங்களே ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டுக்கொள்ளவும் ... ஏனென்றால் ஆரம்ப காலத்தில் கற்றுக்கொள்ளவே நிறைய நேரம் (பணமும்தான்) செலவிட வேண்டியிருக்கும் ...
50 ஆயிரமோ அல்லது 1 லட்சமோ வைத்து வேற ஒரு வியாபாரம் செய்தால் என்ன லாபம் வருமோ அதே மாதிரி பங்குசந்தையிலும் எதிர்பார்த்தால் கண்டிப்பாக இதுவும் ஒரு நல்ல வியாபாரமே ...
“PRACTICAL EXPERIENCE IS BETTER THAN THEORETICAL EXPERIENCE FOR SHAREMARKET”
1 comment:
:-)
நன்றி
Post a Comment